Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திடீரென்று கண் இமைகள் துடிப்பது ஏன்? -மருத்துவ அறிவியல் கூறும் வியத்தகு தகவல்கள்

திடீரென்று கண் இமைகள் துடிப்பது ஏன்? -மருத்துவ அறிவியல் கூறும் வியத்தகு தகவல்கள்

திடீரென்று கண் இமைகள் துடிப்பது ஏன்? -மருத்துவ அறிவியல் கூறும் வியத்தகு தகவல்கள்

எல்லாருக்குமே கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என நாமாகவே

கண்களையும்விட்டு வைக்காமல் ஜோசியம் பார்த்து விடுகிறோம். இதில் நல்லது என்று சொல்ல முடியாது. வேண்டுமானால் கெட்டது எனக் கூறலாம்.

ஏனெனில் கண்கள் துடிப்பதற்கு நிறைய காரணங் கள் உண்டு. சாதாரண தூக்கமின்மையில் தொடங்கி , மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரை கண்கள் துடிப்பதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது.

கண்கள் துடிப்பது, வந்து ஒரு சில நிமிடங்களில் தானாகவே போய்விடும். இது சாதாரணமாய் எல்லோருக்கும் வரும். பயப்பட வேண்டியது இல்லை. ஆனால் அது மாதக் கணக்கில் நீடித்தால், நிச்சயம் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கண் துடிப்பது எதனால்?

கண்களின் மெல்லிய நரம்புகளையும், தசைகளையும் பாதிக்கும் வகையி ல் தொடர்ச்சியாக நடந்து கொண்டால், கண்கள் துடிக் கும். சில சமயங்களில் வெட்டி இழுப்பது போலவும் இருக்கும். கண்கள் துடிப்பதற்கு மயோகீமியா என்று மருத்துவ துறையில் அழைப்பார்கள்.

குடிப்பழக்கம், சோர்வு, கண்கள் வறண்டுபோவதால், மன அழுத்தம், அதிகமாய் காபி குடிப்பது, சரிவிகித சத்துக்களின் பற்றாக் குறை, அலர்ஜி, வெகுநேரம் கம்ப்யூட்டரை உற்றுபார்ப்பது, படித்துக்கொ ண்டேயிருப்பது இதுபோன்று, கண்களுக்கு அதிகம் சிர மம் கொடுத்தால், சரியாக தூங்காமல் இருந்தால், மரு ந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவற்றினால் ஏற்படு ம். குடிப்பழக்கமும் முக்கிய காரணமாகும்.

தொடர்ச்சியாக கண்கள் துடித்துக்கொண்டேயிருந்தால், அவை நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். ஆகவே என்ன பிரச்சனை என கண்டறிவது அவசியம். நீண்டநாள் கண் துடிப்போ, வெட்டி இழுப்பதுபோலவோ இருந்தால், அது மூளை சம்ப ந்தப்பட்ட கோளாறாகவும் இருக்கலாம்.

வெறும் கண்கள் துடிப்பதோடு அல்லாமல், கண்கள் சிவ ந்து போனாலோ, கண்களில் எரிச்சல், அல்லது நீர் வடிதல், மற்றும் மேல் இமை தொங்கிக் கொண்டு வந்தாலோ, நிலைமை மோச மாக உள்ளது என அர்த்தம். உடனடியாக கவனிக்க ப்பட வேண்டிய அவசியம்.

கண் துடித்தலுக்கு சிகிச்சை:

கண் துடிப்பிற்கு, நன்றாக தூங்கி, கண்களுக்கு போதிய ஓய்வு கொடுக்கும்போது அது தானாகவே போய்விடும் அல்லது கண்களு க்கு வெதுவெதுப்பான ஒத்தடம் தந்தாலும் நரம்புகளின் இறுக்கம் தளர்ந்து, துடிப்பது நிற்கும்.

ஆனால் இதுவே நீண்டநாட்களுக்கு தொடர்ச்சியாக இருக் கும்போது பொடாக்ஸ் ஊசி செலுத்துவதன்மூலம் சரி செய் யலாம். அல்லது அறுவைசிகிச்சையில், பிரச்சனைக்குரிய சில நரம்புகளையும், தசைகளையும் வெடி விடுவார்கள். இதனால் வெட்டி இழுக்கும் பிரச்சனைக்கும் மற்றும் கண் துடிப்பிற்கும் தீர்வு கிடைக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: