Tuesday, June 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குருபெயர்ச்சி பலன்கள் 2016: – 12 இராசிகளுக்கும் . . . – பலன்கள் – சிரமங்கள் – பரிகாரங்கள் – முழுத் தகவல்

குருபெயர்ச்சி பலன்கள் 2016:- 12 இராசிகளுக்கும் . . . – பலன்கள் – சிரமங்கள் – பரிகாரங்கள் – முழுத் தகவல்

குருபெயர்ச்சி பலன்கள் 2016:-  12 இராசிகளுக்கும் . . . – பலன்கள் – சிரமங்கள் – பரிகாரங்கள் – முழுத் தகவல்

நவகிரகங்களிலேயே குருவின் பார்வைக்கு தான் அத்தனை சக்திகள். “குரு பார்க்க கோடி நன்மை” என்பர். அவர் அமரும் வீட்டைவிட

அவர் பார்க்கும் வீட்டிற்குதான் நன்மைகள் அதிகம். முழு சுப கிரகம் என்ற பெருமைக்குறிய ஒரே கிரகமும் இவரே. குருபகவானுக்கு தனுசு, மீனம் ராசிகள் ஆட்சி வீடு. தனுசு ராசியில் மூலத்திரிகோண பலம் அடைகிறார். கடக ராசியில் பரம உச்சம் அடைபவர், மகர ராசியில் பரம நீசம் அடைகி றார். ஒரு ராசியில் ஒரு ஆண்டுகாலம் அவர் சஞ்சாரம் செய்வார். பிரஹஸ்பதி என்ற சிறப்பு பெயர் பெற்றவர்.

நடக்கும் துன்முகி ஆண்டு, ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்கிறார்.

இனி ஒவ்வொரு இராசிக்கும் என்ன பலன்கள் ஏற்படும், சிரமங்கள் இருப்பின் அதற்கான பரிகாரங்களையும் பார்ப்போம்.

மேஷம்- 60%

இது வரை ஐந்தாம் வீட்டில் இருந்த குருபகவான் இவ்வருடம் ஆறாம் வீட்டிற்கு வருகிறார். சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்று ஜோதிடர்கள் கூறுவர். அஷ்டமத்து சனியால் இதுவரை தடைப் பட்ட காரியங்கள் கைகூடும். 2 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் குடும்பத் தில் அமைதி நிலவும். தொழில் ஸ்தானத்தின் மீது அவர் பார்வை விழுவ தால் தொழிலில் மாற்றம், முன்னேற்றம், வெளிநாட்டு பயணங்கள் கைக் கூடும். தேவைக்கு ஏற்ற பண வரவு இருந்தாலும் கையில் தங்காது.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் சித்தர்கள் ஜிவசாமதிகளில் தரிசனம் செய்வது நல்லது. பெருமாளும் முருகப்பெருமானும் சேர்ந்து அருள்பாவிக்கும் கோயில்களில் வியாழக்கிழமை வழிபடுவது நன்மை பயக்கும்.

ரிஷபம்- 80%

குருவின் பார்வை 9 ஆம் இடத்தை பார்ப்பதால் இனி எடுத்த காரியங்கள் சுபமாகும். திருமணத்தடை நீங்கும். 11 ஆம் பாவத்தை அந்த பாவாதிபதி குருவே பார்ப்பதால் நீதிமன்ற வழக்குகளில் சிக்கி இருந்தவர்கள் அதிலி ருந்து விடுபடுவார்கள். சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு.

பரிகாரம்:

புதன்- பெருமாள் அம்சம் அவருடைய வீட்டில் குரு இருப்பதால் சிவன் கோயிலில் பெருமாள் சந்நிதி இருக்கும் கோயிலில் உள்ள தட்சினா மூர்த்தியை வழிபடவும்.

மிதுனம்- 60%

ராசிக்கு 4 ல் வரும் குருபகவான் 8, 10, 12, ஆகிய ஸ்தானங்களை பார்க்கி றார். ஏழாம் அதிபதி குரு பாதகாதிபதி ஆவதால் குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் வரலாம். நலிவுற்ற தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். 12 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். 4 ஆம் பாவம் ஸ்தான பலம் இழப்பதால் சிலருக்கு சொந்த வீடு இருந்தா லும் பணி நிமித்தமாக வாடகை வீட்டில் வசிக்கும் நிலை வரலாம்.

பரிகாரம்:

நவகிரக சன்னதியில் உள்ள குருவுக்கு வியாழக்கிழமை அர்ச்சனை செய்யவும். பெருமாள் வழிபாடு புதன்கிழமை செய்வது நல்லது.

கடகம்- 70%

பாக்கிய ஸ்தானத்தை பாக்கியாதிபதி பார்த்தால் சகல பாக்கியமும் சேரு ம். குருவின் பார்வை படும் 7, 9, 11, பாவங்களால் யோகம் உண்டாகும். நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த நிகழ்வு நடக்கும். பொருளாதார நிலை திருப்த்திகரமாக இருக்கும். குரு 6 பாவத்துக்கு 6 ஆம் பாவமான 11 ஆம் வீட்டை பார்க்க போவதால் ஆரோக்கியம் சீராகும். புணித யாத்திரை செல்லும் ஆசை நிறைவேறும்.

பரிகாரம்:

திங்கள் கிழமைகளில் அம்பாள் வழிபாடும் குருபகவானை தரிசிப்பதும் நல்லது. பௌர்ணமி விரதம் இருப்பதும் நன்று. ஓரு முறையாவது கொல் லூர் மூகாம்பிகையை தரிசித்து வாருங்கள்.

சிம்மம்- 80%

இதுவரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த குருபகவான் 2ஆம் பாவத்துக்கு வருகிறார். குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய வீடுகளின்மீது விழுவதால் பெரிதாக தெரியும் பிரச்சனைகளையும் சமாளித்துவிடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களின் மரியாதைகூடும். நல்ல வருமானம் இருக்கு ம் ஆனால் அதே சமயம் செலவுகளும் கூடும். வேலை இல்லாதவர்களுக் கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.

பரிகாரம்:

பிரதோச வழிபாடோடு வியாழக்கிழமைகளில் சிவனையும் குருவையும் தரிசிப்பது நல்லது.

கன்னி- 70%

இதுவரை 12 ஆம் பாவத்தில் இருந்த குருபகவான் ஜென்ம ராசிக்கு வருகி றார். ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்பதவி கிடைக்கும். சுபகாரியம் நடக்கும். 7 ஆம் இடத்தை குரு பார்க்கப்போவதால் வெளி நாட்டு பயணம் கைக்கூடும். வேலைப் பளு காரணமாக சரியான நேரத்தி ல் உணவம் தூக்கமும் இல்லாமல் சிரமபடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம்:

புதன் கிழமை பெருமாள் கோயிலுக்கு துளசி மாலை சாற்றுங்கள். அதே போல் ஹயக்ரீவரையும் வழிபாடு செய்யுங்கள்.

துலாம்- 70%

ஆடி மாதம் முதல் 12 ஆம் வீட்டிற்கு வருகிறார். குருவின் பார்வை நாலாம் வீட்டை பார்க்கிறது அதனால் வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. 6ஆம் இடத்தை பார்க்கப்போவதால் கடன் தொல்லைகளிலிருந் து விடுபடுவீர்கள். 8ஆம் வீட்டை குருபார்ப்பதால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

பரிகாரம்:

பெருமாள் கோயில் அர்ச்சகர்களுக்கு பச்சரிசி தானமாக கொடுங்கள். யானைக்கு வாழைப்பழம் வாங்கி கொடுத்து ஆசிர்வாதம் வாங்குவது நல்லது. வியாழக்கிழமை பெருமாள் மற்றும் முருகப்பெருமான் வழிபாடு செய்யுங்கள்.

விருச்சிகம்-80%

ஆடி மாதம் முதல் 11ம் வீட்டிற்கு மாறுகிறார். உங்க ராசிக்கு 2 க்கும் 5க்கும் உடைய குரு லாபஸ்தானம் ஏறி 3,5,7 ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறா ர். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். உங்களுக்கு பொறுப்புகள் கூடும் பதவிகள் தேடி வரும். ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்க்கிறார். தடைப்பட்ட திருமணம் நடக்கும்.

பரிகாரம் :

முருகப்பெருமானையும் தட்சிணாமுர்த்தியையும் வழிபடுவது நல்லது.

தனசு- 60%

ஆடி மாதம் முதல் பத்தாம் இடத்திற்க்கு பெயர்ச்சி ஆகிறார். கோசாரத்தில் ஏழரை சனி இருப்பதால் கடந்த காலங்களில் வேதனை அனுபவித்தவர்க ளுக்கு நல்ல பலன் கிட்டும். குருவின் பார்வை 2, 4, 6, ஆகிய ஸ்தானத்தை பார்க்கிறார். வரவேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். ஆரோக்கியம் சீராகு ம். வாகனங்கள் வாக்குவீர்கள். தன்னுடைய 9 ஆம் பார்வையாக ஆறாம் பாவத்தை பார்ப்பதால் எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள்.

பரிகாரம்:

சிவன்கோயிலில் உள்ள தெட்சிணாமுர்த்தி,மற்றும் நவகிரக சன்னிதியில் உள்ள குருபகவானை வியாழக்கிழமை தரிசிப்பது நல்லது.

மகரம்- 75%

இதுவரை அஷ்டமத்து ராசியில் சஞ்சரித்த குருபகவான் ஓன்பதாம் ஸ்தா னத்திற்கு வருகிறார். ஜந்தாம் பார்வையாக ராசியை பார்க்கிறார் அதனா ல் புகழ் அந்தஸ்து மதிப்பை தரும். ஆரோக்கியத்தில் நல்ல முன் னேற்றம் இருக்கும். முன்றாம் பாவத்திற்கு பாவாதிபதி குருவே பார்ப்ப தால் குடும்பத்தில் அமைதி நிலவும். அடுத்தது பூர்வ புண்ணிய ஸ்தானத் தை குரு பார்ப்பதால் பொருளாதார நிலை மேம்படும்.

பரிகாரம்:

பெருமாள் கோயில் வழிபாடு நன்மை தரும்.சனிக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது

கும்பம்- 70%

இதுவரை ஏழாம் பாவத்தில் இருந்த குரு ஆடிமாதம் முதல் அஷ்டம ஸ்தா னத்தில் சஞ்சரிக்கிறார். தன ஸ்தானத்தை தனாதிபதி குருவே பார்ப்பதா ல் பொருளாதாரநிலை உயரும் வரவுகள் கூடும். கணவன் மனைவி உறவு பலப்படும். 4ஆம் பாவத்தை, குரு பார்ப்பதால் சிலருக்கு வீட்டு மனை வாங்கும் யோகம் உள்ளது. புது முயற்சிகள் கைகூடும். கடன் தொல்லை யில் சிக்கியவர்கள் அதிலிருந்து விடுபடுவர்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் முருகப்பெருமானையும் குருபகவானையும் வழி படுங்கள்.

மீனம்- 80%

குருபகவான் ஏழாம் வீட்டிற்கு இடம்பெயர்கிறார். உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும் காலம் நெருங்கி விட்டது. குரு தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்க்க போகிறார். ராசிக்கு அதிபதி கேந்திர திரிகோணத்தில் வந்தால் நிச்சயமாக நல்ல பலனை தான் செய்வார். அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும்.

பரிகாரம்:

வியாழக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது. பிரதோஷ காலங்க ளில் நந்திக்கு சந்தனம் வாங்கி கொடுத்து வழிபடுங்கள்.

=> சென்னை ஆன்லைன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: