Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழக மக்களிடம் நடத்தப்படும் புதுவித‌ பொருளாதார சுரண்டல் – அதிரவைக்கும் முகநூல் பதிவு

தமிழக மக்களிடம் நடத்தப்படும் புதுவித‌ பொருளாதார சுரண்டல் – அதிரவைக்கும் முகநூல் பதிவு

தமிழக மக்களிடம் நடத்தப்படும் புதுவித‌ பொருளாதார சுரண்டல் – அதிரவைக்கும் முகநூல் பதிவு

காலம்காலமாக தமிழகமும் தமிழக மக்க‍ளிடமும் பலதரப்பட்ட‍ சுரண்ட ல்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் தற்போது புதுவித

சுரண்டலை தொடங்கியிருக்கிறார்கள். ஆம் தமிழர்களே!

நாம் எந்த திருமண வீட்டிற்கு போனாலும்… வடஇந்தியா, பாகிஸதான், ஆப்கானிஸ்தான் ஈரான், ஈராக் போன்ற பகுதிகளில் உடுத்தும் லகோணி, குர்தா போன்ற உடைக ளை உடுத்த ஆரம்பித்துள்ளான் தமிழன்.  கிறித்தவர் திரும ணத்தில் கோட்சூட், இசுலாமியர் திருமணத்தி லும் குர்தா. இந்துக்கள் திருமணத்திலும் குர்தா வந்துவிட்டது. வேட்டி சீலையை திருமணத்தி லாவது பார்த்து வந்தோம்.. இப்போ அதுவும் இல்லை…

உடை உடுத்துவது உங்கள் உரிமை. சரி மீதத்தையும் கேளு ங்கள் இன்று நமது பெண்கள் கல்யாண கனவு லகானி, சோழி மிடி என இந்தி நாடகங்களில் வரும் உடைகளைத் தான் கேட்டு வாங்குகிறார்கள். இதற்காகவே வட நாட்டு பண்பாட்டு திணிப்பிற்காக பெருஞ்செலவில் உருவாக்கப் படும் இந்தி நாடகங்களும் அதன் மொழி பெயர்ப்புகளும்.  அம்பானி அதானியும் துணிவித்துதான் கோடீஸ்வரனா அனாங்க. இன்று தமிழ்நாட்டு துணிக்கடைகளில் நம் பெண்கள் துணிவாங்குவதையும் அதிலுள்ள பொருளாதார வர்த்தகத்தை யும் கவனியுங்கள் பல ஆயிரம் கோடிகள் வட இந்திய பண் பாட்டு உடைகளுக்கு நம் பெண்கள் செலவிடுகின்றனர். நீ வேட்டியும், சீலையும் திருமணநாளுக்கா வது உடுத்திக் கொ ண்டிருந்தாய், தற்போது உனக்கு குர்தா ஒரு கேடாக போயு ள்ளது,

திருமண நாளுக்குகூட வேட்டி கட்டுவதை தவிர்த்து குர்தா அணிகிறார். வட இந்தியன் ஒருபோது உன் வேட்டியை கட்டி க்கொண்டு, உன் தமிழ்மொழியில் பேசப்போவதில்லை என் பதை ஆழமாக மனதில் நிருத்திக் கொள். அழகு என்பது ஒருவர் திணிப் புதான். அவனது உடைகளை எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ அவ்வ ளவு அழகாக நாடகங்களில் நம் பெண்களுக்கு காட்டுகி றான். மூன்று முடிச்சு, கல்யாண கனவுகள், நெஞ்சம் பேசு தே, உறவே உயிரே, உள்ளம் கொள்ளை போகுது ஆகிய தமிழ் பெயர்வைத்த இந்தி நாடகமொழி பெயர்ப்பை தமிழ் நாடு மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் அந்தந்த மொழிகளில் ஒலிபரப்பப்படுகிறது. பெரும் பொருட் செல வில் தயாரிக்கப்படும் இந்த நாடகங்கள் ஏன் குறைந்த பணத்தில் உரிமம் தருகிறான் என்றால் விடை இதுதான். வடஇந்திய உடை அதன் பண்பாட்டு வடிவமைப்பு போன்றவற்றை இந்தியாவின் உடையாக அடையாளப்படுத்துவது, இரன்டாவது பொரு ளாதார சுரண்டல். தமிழக மக்களிடம் உடையின் மூலம் பொருளாதார சுரண்டல் நடத்தப் படும்.

தமிழா எப்போதும் பயன்படுத்தாவிட்டாலும் பரவாயில் லை. வேட்டியும் சீலையும் திருமண நாளுக்காவது பயன் படுத்து, என்பதே !!! பிறகு உங்கள் விருப்பம்…

முகநூலில் இந்துமதி என்பவரால் பகிரப்பட்ட‍து.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: