அலோபதி (ஆங்கில) மருத்துவத்தினால் ஏற்படும் பலன்களும் பாதிப்புக்களும்! – ஓரலசல்
அலோபதி (ஆங்கில) மருத்துவத்தினால் ஏற்படும் பலன்களும் பாதிப்புக்களும்! – ஓரலசல்
இன்றைய அவசரகால சூழ்நிலையில் மனிதனுக்கு தேவைப்படும் உடனடி
உயிர்காக்கும் தன்மையாக விளங்குவது அலோபதி. மனிதர்களை நோயிலிருந்து விடுவித்து அவனுக்கு மறு வாழ்வு கொடுத்து வாழவைப்பதே மருத்தவத்தின் கடமை.
அலோபதி மருத்துவத்தின் பலன்கள்
1.இரத்தம் இழந்தவர்களுக்கு உடனடியாக ரத்ததின் இழப்பை சரிசெய்து மனிதர்களின் உயிரினை காப்பதில் முதலிடம் வகிக்கிறது .
2.கைகால்கள் மற்றும் உடல் உறுப்புகள் பாதிப்பு அடைந்து இழக்கவோ அல்லது எடுக்கவோ வேண்டிய சூழ்நிலைகளில் மாற்றுறுப்புகள் பொருத்தப்பட்டு அவர்களின் வாழ்வில் மீண்டும் ஒளியேற்றுவதில் அலோபதி சிறந்து விள ங்குகிறது .
3. தீ விபத்துகளில் தோல்கள் , நரம்புகள் பாதிக்கப்பட்டாலும் அவற்றிற்கு தீர்வாக அமைகிறது.
4. சிறுநீரக மற்றும் கர்ப்பப்பை பிரச்சனையில் மோசமா ன சூழ்நிலையில் நல்ல தீர்வாக அமைகிறது
5. எலும்புகள்முறிவு ஏற்பட்டால் அது எங்கே உடைந்துள்ளது என்று அறிந் து அதற்கு உடனடி தீர்வும் அளிக்கப்படுகிறது
6.நோய் முற்றிப்போகாமல் தடுக்க இரத்தம் மற்றும் சிறுநீரில் பரிசோதனை செய்துமேற்கொண்டு பரவாம ல் தடுக்கப் படுகிறது
7.கை, கால்கள், தலை மற்றும் உடலுறுப்புகள் இயல்பி ற்குமாறாக ஒட்டியோ அல்லது பிளவுப்பட்டோ இருந்தா ல் அதனை நவீன உபகரணங்களைக் கொண்டும் விஞ் ஞான யுக்திகளை உபயோகித்தும் சரி செய்யப்படுகிறது.
8.பிறப்பிலேயே முகத்தில் அல்லது உடல் உறுப்புகளின் அமைப்பில் மாற்றம் இருந்தால் அவற்றை நவீன சிகிச்சை யால் மேற்கொண்டு சீர்செய்வது.
9.பல் சொத்தை ,பல் சம்பந்தப் பட்ட பிரச்சனைகளில் பல் பிடுங்குதல்பல் மாற்றுதல் போன்றவைகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது.
10. பிரசவ காலங்களில் தாய் மற்றும் குழந்தைகளின் நோய்களை உடனடியாக போக்கவும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் அலோபதி மருத்துவ முறை சிறந்து விளங்குகிறது.
இதனால் பாதிப்புகள் இல்லையா ,இருக்கு
அலோபதி வைத்திய முறையில் கொடுக்கப்படும் சில மருந்துகள் அதிக வீரியம் தன்மை உடையதாக இருப்ப தாலும் ,நோயாளியின் உடல் விரைவாக ஜீரணிக்கும் தன்மை மற்றும் வெளியெற்றும் தன்மை இழந்திருப்ப தாலும் மருந்தானது உடலின் உட்பாகங்களில்தங்கி வெளியேற வழியில்லாமல் நச்சுப்பொருட்களாக அல்லது வேறு பரிமா ணங்களாகவோ மாறி நோய்களை ஏற்படுத்துகிறது.
எந்த நோயினை விரட்டுவதற்காக கொடுக்கப்பட்ட தோ, அந்நோயினை விரட்டியோ அல்லது விரட்டாம லோ பல பக்க விளைவுகளை சில சமயம் ஏற்படுத்தி விடுகிறது.
அதுக்கு இந்த அலோபதி வைத்தியமுறை குறைசொல்ல முடியாது .
சில அலோபதி வைத்தியரின் அணுகுமுறை மற்றும் அவர் தீர்மானம் செய்து மருந்து வழங்கும் விதம் தவறானதாக அமையும்.
=> துளித்துளியாய் … எம். ரமேஷ்