நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய நியாய தீர்ப்புகள்! – நுகர்வோரே உறங்கியது போதும் . . .
நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய நியாய தீர்ப்புகள்! – நுகர்வோரே உறங்கியது போதும் . . .
காப்பீடு (mediclaim): ஏற்கனவே உள்ள வியாதியை மறைச்சுட்டாறு, பாலிசி எடுத்தவர் அப்டின்னு இன்சூரன்ஸ் கம்பெனி சொல்லி, அதை
அவங்க நிரூபிக்க முடியாம போய்டுச்சு …. மக்கள் நமக்கு இந்த வியாதி இருக்குன்னு, நாள் கணக்கா, மாச கணக்கா, வருஷ கணக்கா, தெரியாமலே உயிர் வாழுறாங்க. பெரும் பாலும், திடீர்னுதான், உனக்கு இந்த வியாதி இருக்குன்னு தற்செயலா கண்டுபிடிக்கிறாங்க, மெடிக்கல்செக்up போகு ம்போது.. கண்ணா, இன்சூரன்ஸ் கம்பெனி பணம் குடுக்க ணும் கண்ணா…….. III (2014) CPJ 373 (NC)
கிராமத்துல இருக்கீங்க, பஞ்சாயத்துக்கு வரி கட்டுறீங்க, அப்போ, நீங்க நுகர்வோரா ? ஆமா!! III (2014) CPJ 427 (NC)
ஷாம்பூ போட்டு குளிக்கிறீங்க, ஆனா, அந்த ஷாம்பூ, நல்ல கண்டிஷன்ல இல்ல, ஷாம்பூ ஒரு சின்ன பாக் கெட்லதான் வாங்கி இருக்கீங்க பில் இல்ல நீங்க நுகர்வோரா? கண்டிப்பா . III (2014) CPJ 169
ஷாம்பூ, காலாவதிஆகி, 5 வருஷம் ஆச்சு, முடி எல்லாம் போச்சு அந்த முடி எல்லாம்சரி செஞ்ச சின்ன பொண்ணுக் கு, 5 வருஷம் அலைய விட்டு, Rs. 25,000/- குடுத்தாங்க. III (2014) CPJ 219 (NC)
கல்வி–பள்ளிக்கூடம் உங்களுக்கு பிடிச்சமாதிரி இல்ல, பையனுக்கு இந்த ஸ்கூல் வேணாம்னு முடிவு பண்ணிட்டீங்க …….. அப்போ, கட்டின பீஸ் ? சர்வீஸ் டாக்ஸ், கல்வி வரி தவிர எல்லாம் திரும்ப வாங்கலாம். III (2014) CPJ 191
மின்சார வாரிய மீட்டர் தப்பா ஓடுதுப்பா.. பில் தப்பு.. அதை தப்புன்னுசொல்லி, மனஉளைச்சல், வழக்குசெலவு எல்லாம் குடுக்கலாம் …….. III (2014) CPJ 169
மின்சாரம் தாக்கிய சாவுக்கு, மின்சார வாரியம்தான் மின் இணைப்பு லைன் ஐ, சரியா வச்சுக்கணும். இல்லாட்டி, அவங் கதான் தண்டம் அழனும்… தப்பு, அவங்க மேலதான்…… III (2014) CPJ 387 (NC)
மருத்துவ சேவைகுறைபாடு, தவறான அணுகுமுறை முறை ப்படி மருத்துவம் பார்க்காததால் நோயாளி இறந்துபோகிறார் மருத்துவமனை ரூ.10 லட்சம் நஷ்டி வழங்க வேண்டும். III (2014) CPJ 282 (NC)
வண்டி பைனான்சில் எடுத்து, நீங்க பணம் கட்டாம கம்பனிகாரன் தூக்கி, வண்டிய ஏலத்துல வித்துட்டா, கம்பெனி சர்வீஸ்ல எந்த குறையும் கிடையாது. III (2014) CPJ 333 (NC)
நீங்க வீடு வாங்கி இருக்கீங்க. ஆனா, உங்க இடத்து சொந்தகாரங்களுக்கும், கட்டி குடுத்த பில்டர்க்கும் பிர ச்சனை, அதனால உங்களுக்கு கிரையபத்திரம் பதிஞ்சு தர மாட்டேங்கி றாங்க… நேரா நுகர்வோர் நீதிமன்றம் போங்க .. பத்திரம் பதிஞ்சு குடுப்பா ங்க.. என்ன வெல்லாடுரான்களா? III (2014) CPJ 248 (NC)
இன்சூரன்ஸ் தற்காலிக premium இல்லாட்டி, நிபந்தனை premiumவாங்கி, பாலிசிகேட்டா, பரிசீலனையில் இருக் குன்னு கம்பெனி சொல்லுது. நீங்களும் சரின்னு விட்டுறீ ங்க.. திடீர்னு ஒருநாள், வண்டி காணோம், விபத்து எற் பட்டுச்சு கிளைம் கொடுங்கன்னு கேட்டா, வண்டிக்கு இன்சூரன்ஸ் இல்ல ன்னு சொல்றாங்கன்னு வச்சுக்க….. நேரா, கன்சூமர் கோர்ட்தான்…..யாரு, எங்க கிட்டவேயா? III (2014) CPJ 213 (NC)
L.I.C, L.I.C அப்டின்னு agent வராங்க…. பாலிசி கேக்குறா ங்க.. பணமும் கட்டுறோம்.. ஆனா agent வாங்கி வாய்ல போட்டுட்டு போயட்டங்கன்னு வைங்க. யார் நம்ம காசுக் கு பொறுப்பு? agentஆ? இல்ல கம்பெனிகாரனா? முதல்ல, agentக்கு கம்பெனி அதிகாரம் குடுத்திருக்கான்னு பாருங் க… இல்லியா, நம்ம பணம், திருப்பதி உண்டியல்ல கோ விந்தா.. கோவிந்தா.. lic பணம் தர மாட்டாங்களாம் .. III (2014) CPJ 161
ஆயுள்காப்பீடு எடுக்குறீங்க ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல, 4 பாலிசி. செத்துபோய்ட்டாங்க.. அப்போ, பழைய பாலிசி இருக்கிறத என் மறைச்சீங்கன்னு இன்சூரன்ஸ் கம்பெனி கேட்டா, பழச வேணும்னே மறைச்சா, அத காமிச்சா வேறபாலிசி போடவிட மாட்டாங்கன்னுவேணும்னே மறைச்சா மட்டும்தான், கிளைம் கிடைக்கா து. இல்லாட்டி, குடுக்கணுமாம். III (2014) CPJ 340 (NC)
சட்ட விரோத கமிஷன், இது நுகர்வோர் நீதிமன்றத்தில் வராது, ஏன்னா லஞ்சம் ஊழல் சம்பந்தமா இங்க விசாரிக்க மாட்டாங்க… போங்க, போங்க.. உரியகோர்ட்க்கு III (2014) CPJ 266 (NC)
மருத்துவ குறைபாடு, சிகிச்சை அரசுமருத்துவமனையில் இலவ சமாகசெய்யப்பட்டதால் நுகர்வோர் நீதிமன்றத்தில் இவ்வழக்கை ஏற்க முடியாது. III (2014) CPJ 390 (NC)
பலவித நடவடிக்கைகள் சட்டப்படி செல்லாது. கம்பெனி எடுத்து சென்ற வண்டி, மிக குறைந்த விலைக்கு விற்கப் பட்டது. ஏற்கனவே சிவில்நீதிமன்றம் முடிவுசெய்து விட் டதால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யபடுகிறது. III (2014) CPJ 241 (NC)
பதினைந்து கோடிக்கும்மேலான கூட்டுநிரந்தர வைப்பு நிதி பிரச்சனை, அதிக ஆதாரங்கள் நிரூபிக்கப்பட வேண்டி இருப்பதால் நுகர்வோர் நீதிமன்றத்தில், இந்த வழக்கை விசாரிக்க முடியாது. III (2014) CPJ 230 (NC)
பொது PROVIDENT FUND ACCOUNT — கூட்டு கணக்கு — முதிர்வுக்கு பிறகு வட்டி வழங்கப்படவில்லை, போஸ்ட் மாஸ்டர், கணக்கு தொடங்கும்போதே, அது முறையாக PPF scheme விதி 3இன்படி ஆரம்பிக்கபட்டுள்ளதா என் று உறுதிசெய்யவேண்டும், இல்லாவிட்டால், தண்டம் அழவேண்டும், தவறு போஸ்ட் ஆபீஸ் மீதே.
=> தினேஷ்
வாரண்டி பீரியட் முடிந்த பின்பு பொருட்களை வாங்கி நுகர்வோர் கடைக்காரரிடம் பிரச்சனை செய்து நுகர்வோர் தீர்ப்பாயத்தின் முறையிட்டால் என்ன செய்வது