மாலை 6 மணிக்கு ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையை மறுநாள் காலையில் சாப்பிட்டால் . . .
மாலை 6 மணிக்கு நீரில் ஊறவைத்த கருப்பு உலர்திராட்சையை மறுநாள் காலையில் சாப்பிட்டால் . . .
லட்சம்லட்சமாக பணத்தை மருத்துவமனைகளுக்கு கொட்டிக்கொடுத்தா லும் திருப்தியில்லாத சிகிச்சைகளும்,
தீர்க்கப்படாத நோய்களுமே இன்று அதிகம்.
உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழத்தை கேட்டு வாங்குங்கள் பின் அவற்றில் இருந்து 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற விடுங்கள்.
காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங் கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.
இதே மாதிரி 9 நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.
ஆம் நமது உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகு ளோபின்கள் உருவாக காரணமாகஇருக்கும் செலவு அதிக மில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க லாம்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!