உயில் எழுதாமல் ஒரு (இந்து) ஆண் இறந்தால்… OR ஒரு (இந்து) பெண் இறந்தால்… அந்த சொத்து யாருக்கு?
உயில் எழுதாமல் ஒரு (இந்து) ஆண் இறந்தால்… OR ஒரு (இந்து) பெண் இறந்தால்… அந்த சொத்து யாருக்கு?
ஒருவர் சம்பாதித்த சொத்துக்களை, தனக்கு வேண்டிய அல்லது பிரியமா ன நபர்மீது உயில் எழுதி வைத்து விட்டால்,
அவரது இறப்பிற்கு பிறகு அந்த சொத்து தானாகவே யாரு டைய பெயரில் உயில் எழுதப்பட்டதோ அவருக்கே போய் சேரும். ஆனால், உயில் எதுவும் எழுதாமல் ஒரு ஆண் (அல்) ஒருபெண் இறந்துவிட்டால், அந்த சொத்து யாருக்கு என்பதில் பெரும்குழப்பமும், வீண்சச்சரவுகளும் உண்டா கும். அதனை தவிர்க்கவே இந்து மதத்தை சேர்ந்த ஒரு ஆண்
அல்லது ஒரு பெண் உயில் எதுவும் எழுதி வைக்காமல் இறந்து விட் டால் அந்த சொத்து யாருக்கு சேரும் என்பதை கீழே காணுங்கள்
இந்து ஆண் ஒருவர் எவ்வித உயிலும் எழுதிவைக்காம ல் இறந்திருக்கும்போது, முதலில் வாரிசு முதல்நிலை ஆகியவர்கள் சொத்தை அடைவார்கள். அவர்களின் வரிசையை இவ்வா று கணிக்கலாம்.,
இறந்த நபரின்
1) மகன் ,மகள்,மனைவி,தாய்,
2) முன்னதாக இறந்துபோன மகனின் மகன்(மகன் வயிற்று பேரன்)
3) முன்னதாக இறந்து போன மகனின் மகள்(மகன் வயிற்று பேத்தி)
4) முன்னதாக இறந்து போன மகளின் மகன்(மகள் வயிற்று பேரன்)
5) முன்னதாக இறந்துபோன மகளின் மகள் (மகள் வயிற்று பேத்தி)
6) முன்னதாக இறந்துபோன மகனின் விதவை மனைவி,
7) முன்னதாக இறந்துபோன மகனின் பேரன்
8) முன்னதாக இறந்துபோன மகனின் பேத்தி
9) முன்னதாக இறந்துபோன மகனின் பேரன் மனைவி
ஆகியவர்கள் முதல் நிலை வகுப்பு வாரிசுகள் ஆவார்கள்.
இவர்கள் யாரும் உயிருடன் இல்லாத போது அடுத்தடுத்து வாரிசுகளான CLASS-II வில் உள்ள வாரிசுகள் சொத்தில் உரிமை அடைவார்கள்.
உயில் எதுவும் எழுதி வைக்காமல் ஒரு (இந்து) பெண் இறக்கும்போது ……
இந்து பெண் ஒருவர் தமது சொத்துக்கள் குறித்து உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில் இறந்து போனால்,அவரது சொத்துக்கள் பின்வரும் நபர்கள் வாரிசுகளாக இருந்து அடைவார்கள்.
1-முதலாவதாக இறந்த பெண்ணின் மகன்களும்,மகள்களும்,கணவனும் அடைவார்கள்.
2-இரண்டாவதாக இறந்த பெண்ணின் கணவனின் வாரிசுகள் அடைவர்.
3-மூன்றாவதாக இறந்த பெண்ணின் தாய்,தந்தை அடைவார்கள்.
4-நான்காவதாக இறந்த பெண்ணின் தந்தையின் வாரிசுகள் அடைவார் கள்.
5-இறுதியாக இறந்த பெண்ணின் தாயின் வாரிசுகள் அடைவார்கள்.
இந்த ஐந்து பிரிவிலும் ஒவ்வொரு பிரிவிலும் யாரும் உயிருடன் இல்லாத போது மட்டுமே அடுத்தடுத்த பிரிவிலுள்ள வாரிசுகள் சொத்தை அடைய முடியும். முக்கியமாக ஒன்று வாரிசுகள் சமமாகவே சொத்தை பங்கிட்டு கொள் வார்கள்.
=> திரு லீனஸ் லியோ எட்வர்ட்ஸ் திரு T S Arunkumar, வழக்கறிஞர்கள்
I want to know if a Christian woman or man dies without writing a will, how the children will share the property