Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

3 நிமிட பயிற்சி போதும்- உடலுக்கு ஆரோக்கியமும், உள்ள‍த்துக்கு உற்சாகமும் கிடைத்திட

3 நிமிட பயிற்சி போதும்… உடலுக்கு ஆரோக்கியமும், உள்ள‍த்துக்கு உற்சாகமும் கிடைத்திட…

3 நிமிட பயிற்சி போதும்… உடலுக்கு ஆரோக்கியமும், உள்ள‍த்துக்கு உற்சாகமும் கிடைத்திட…

நாம் நம் முன்னோர்கள் சொன்னதை மறந்ததன், மறுத்ததன் விளைவாக இன்று நாம், பல்வேறு

ஆரோக்கிய சீர்க்கேட்டிற்கு உள்ளாகி, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, அமைதியாக வாழவேண்டிய வாழ்க்கையை நிம்மதியில்லாத வாழ்க்கையாகத் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.

தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தி ன் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழி பாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண் மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது  காது மடல்களைப்பிடித்துக் கொள்கிறோம் . காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.

காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போ து உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது.  உடல் இயக்கம் சீர்படுகிறது. தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கை விரல் களால் இடது காது மடல்களையும், இடது கை விரல் களால் வலது காதுமடல்களையும் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.

உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்கவேண்டும். எழும்போது மூச்சை வெளிவிடவேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளிழுத் து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் மூலா தாரத்தில் சக்தி உருவா கும். உட்கார்ந்து எழும்போது காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்குவேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண் டியதில்லை. ஆனால் இந்த 3 நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: