Saturday, October 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுவாதியை கொன்றது ராம்குமார் இல்லை. முத்துக்குமார்! – சர்ச்சையை கிளப்பிய தமிழச்சி

சுவாதியை கொன்றது ராம்குமார் இல்லை. முத்துக்குமார்! – சர்ச்சையை கிளப்பிய தமிழச்சி

சுவாதியை கொன்றது ராம்குமார் இல்லை. முத்துக்குமார்! – சர்ச்சையை கிளப்பிய தமிழச்சி

க‌டந்த ஜுன் மாதம் இறுதியில் நுங்கம்பாக்க‍ம் இரயில்நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை ஜாதிக்காக நடத்தப்பட்ட

ஆணவக் கொலை. அவரைக் கொன்ற உண்மை யான நபர் முத்துக்குமார். அவர் தஞ்சாவூரில் பாதுகாப்பாக இருக்கிறார் என்று தமிழச்சி என்ப வர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சுவாதி படுகொலை சாதிக்காக நடத்தப்பட்ட ஆணவக்கொலை! என்ற தலைப்பில் இந்த தமிழச்சி தனது பேஸ்புக் பதிவில் இது குறித்துக் குறிப்பிட்டுள்ளார். இவர் வெளிநாடு ஒன்றில் வசித்து வருபவர் ஆவார்.

இந்தபதிவில் அவர் பலபரபரப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். அதிலிருந்து சில..

திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி

சுவாதி படுகொலைசெய்யப்பட்ட அன்றைய பரபரப்பான தினத்திலேயே ‘ சுவாதியை கொன்றது பிலால் என்ற இஸ்லாமிய இளைஞர்’ என்று பொது ஊடகங்களில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சிலரால் ஏற்படுத்தப்பட்ட ‪வதந்தி‬ என்பது போகிற போக்கில் ‘உளறுவாயன்கள்’ பேசிய பேச்சல்ல. இஸ்லாமிய வெறுப்பு அரசியல்‬ சாதாரணமாக நடந்தவையல்ல. அனைத் தும் திட்டமிட்டே இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டவை.

தடுமாற ஆரம்பித்த விசாரணை

ராம்குமார் கழுத்தை அறுத்தது போலிசுடன் வந்திருந்திருந்த அடியாட்கள் என்பது பொது ஊடகங்களில் மக்கள் நலம் விரும்பிகளால் அம்பலப்படு த்தப்பட்டதும் சுவாதியின் கொலை விசாரணை தடுமாற ஆரம்பித்தது. அவசர அவசரமாக இந்துத்துவ அமைப்பு ராம்குமாரை விடுவிக்க வேண் டும் என்று அவர்கள் சார்ந்த வக்கிலை அனுப்பி அதுவும் பல விதாதங்க ளால் முறியடிக்கப்பட்டது.

என்ன சொன்னார் பிலால்?

இந்நிலையில் பிலாலிடம் ‪காவல்துறை‬ ‪விசாரணை‬ நடத்தி அவர் என்ன சொன்னார் என்பதை வெளியிடமறுத்தது. தற்போதைக்கு ராம்குமார்தான் குற்றவாளி என்பதை நிருபித்து விசாரணையை முடித்து இந்துத்துவவா திகளை காப்பாற்ற சில முக்கிய அரசியல்வாதிகளால் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

கொன்றவர் முத்துக்குமார்

சுவாதியைகொலைசெய்தவர் பெயர் ‪‎முத்துக்குமார்‬. தற்போது தஞ்சாவூரி ல் சுவாதியின் சித்தப்பா பாதுகாப்பில்இருக்கிறார். சுவாதி கொலையில் தொடர்புடையவர்கள் 4 பேர்கள். இவர்களை பாதுகாப்பது சந்தான கோபா லகிருஷ்ணனும் அவருடைய தம்பியும். அவர்கள் திட்டங்களுக்கு உடந் தையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சிலர்.

வழக்கை சந்திக்கத் தயார்

இத்தனையும் தவறு. தமிழச்சி என்பவர் எங்களை குறித்து அநாகரிகமாக வும், தவறாகவும், கண்ணியமின்மை இன்றி தொடர்ச்சியாக பொய் குற்ற ச்சாட்டுக்களை வைத்துக் கொண்டிருக்கிறார் என்று என் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சட்டரீதியாக சந்தானகோபலகிருஷ்ணனும் அல் லது அவருடைய தம்பியும் ‪புகார் கொடுப்பார்களானால் எனது வழக்கறி ஞர் மூலமாக அனைத்து ஆதாரங்களையும் இந்திய நீதிமன்றத்தில் சமர்ப் பிக்க தயாராக இருக்கிறேன். இதற்கு சந்தான கோபாலகிருஷ்ணனும் அல்லது அவருடைய தம்பியும் தயாரா?

ஆதாரத்தைத் தர முன்வருவாரா?

இதுதான் தமிழச்சியின் பதிவு. தன்னிடம் முத்துக்குமார்தான் குற்றவாளி என்பதற்கான ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் தமிழச்சி. அப்படியானால் அதுதொடர்பானதை கோர்ட்டில் சமர்ப்பித்து தற்போது கைது செய்யப்பட் டுள்ள ராம்குமாரைக் காப்பாற்ற அவர் முனைவாரா என்ற கேள்வியை பலர் எழுப்பியுள்ளனர்.

tamiloneindia

Leave a Reply