பனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும் பெண்கள் அறியவேண்டிய ஒன்று
பனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும் பெண்கள் அறியவேண்டிய ஒன்று
கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid) இருக்கிறது. இது குழந்தையை
பலவிதங்களில் பாதுகாக்கிறது. அமுக்கவிசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது. இத்திரவத்தைச்சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு (amniotic membrane) உள்ளது.
இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும். ஆனாலும் சில வேளைகளில் அதற்கு முன்னமே அது உடையலாம். அது Prelabour rupture of membrane எனப்படும். அதனால் குழந்தை யைச் சுற்றியுள்ள திரவநீர் வெளியேறுவதோடு கருப்பையி ன் உள்ளே கிருமிகள் உட்சென்று குழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் பாதிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
இதன் அறிகுறிகள் :
திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறையத் திரவம் (நீர் வெளியேறுதல்). இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடீரென நீர் வெளியேறினால் உடனடி யாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.
மருத்துவமுறை :
34வார கர்ப்பகாலத்திற்குமுன் இதுநடைபெற்றால் மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு 34வாரம் வரை கண்காணிக்கப்பட்டு அதன்பிறகு குழந்தை பிறப்பு தூண்டப்படும்.
ஆனாலும் அதற்குமுன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது தொப்புள் கொடி கீழிறங்குவது உறுதி செய்யப்பட்டாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும். இது யாருக்கு ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட முடியா து. ஆனாலும் ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.
பனிக்குட நீர் வெளியேறினால் control பண்ண முடியுமா pls answer me
பனிக்குட நீரை கட்டுப்படுத்த முடியாது. எவ்வளவு சீக்கிரம் மருத்துவரிடம் செல்கிறீர்களோ அந்தளவுக்கு தாய்க்கும் சேய்க்கும் நல்லது.