கடமை கண்ணியம் கட்டுப்பாடு
கடமை கண்ணியம் கட்டுப்பாடு!
ஆகஸ்டு 2016 மாத நம் உரத்த சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கள்
நம்நாட்டின் நாடாளுமன்றஅவைகளிலும் மாநிலங்களின் சட்டப்பேரவை களிலும்
நம்நாட்டின் நாடாளுமன்றஅவைகளிலும் மாநிலங்களின் சட்டப்பேரவை களிலும் நாள்தோறும் நடைபெறுகிற காட்சிகள் யாவும் அதிர்ச்சியையும் கவ லையும் வருத்தத்தையும் அளிக்கின்றன•
எந்தகட்சி ஆட்சிக்குவந்தாலும் நாடாளு மன்றத்தை காடாளுன்றமாக மாற்றுவத ற்கு எதிர்க்கட்சியினர் திட்டமிடுவது வெட்கக்கேடானது. கூச்சலும் குழப் பமும், அநாரீக வாரத்தைப்பிர யோகங்களும் சபாநாயகரை சூழ்ந்துகொண்டு மிரட்டுவதும், தர்ணா செய்வதும் நாமிருப்பது ஜனநாயக நாட்டில்தானா? என சந்தேகிக்க வைக்கிறது. பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பில்லை என்னை என் தலைவர் அடித்துவிட்டார். போன்ற காட்சிகளெல்லாம் அவை நாகரீகத்திற் கு அப்பாற்பட்டைவை.
ஒரு மாநில சட்டசபையில் நாற்காலிகள் பறக்கின்ற ன• ஒலி பெருக்கிகள் உடைக்கப்படுகின்றன• ஒரு மாநிலத்தில் 25% க்கு மேல் உறுப்பினர்கள் வருவதே இல்லை. மற்றொரு மாநிலத்தில் சட்டசபையில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். என்ன தான் ஆச்சு நம் மக்கள் பிரதிநிதி களுக்கு?
தன் தலைவியின் புகழ்பாடிப்பரிசில் பெறுவதற்கென் றே பிறந்த ஆளுங்கட்சி உறுப்பினர்க ளையும், வெளிநடப்பு செய்வதற்காக உள்ளே வருகிறோம் என்கிற எதிர்க் கட்சி உறுப்பினர்களையும் நம் நாட்டில் வேறெங்கும் காண முடியா து.
வலுவானநிலையிலுள்ள எதிர்க்கட்சியு ம் சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட எதிர்க்கட்சித் தலைவரும் அனுபவம் வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளும், மக்கள்முதல்வரும் ஒன்றாய் விவாதிக் கிறபோது நமக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிற து.
எல்லோருக்கும் பேச வாய்ப்பளிக்கப்படுகிறது. புதுமுக அமைச்சர்கள் திறம்படபதிலளிக்கிறார்க ள் அவ்வப்போது முதல்வர் குறுக்கிட்டு கூடுதல் தகவல்களைத்தருகிறார் என்பதெல்லாம் பாராட் டுக்குரிய விஷயங்கள் தான். ஆனாலும்.. ஆளுங்கட்சியினர் எதற் கெடுத்தாலும் கடந்த கழக ஆடசியை எல்லாவற்றுக்கும் ஒப்பி ட்டுப் பேசு வதும் சோளக் கொல்லை பொம்மைகள் (89 என்று குறிப்பிட்டு) என்று கிண்டல் செய்வதும் எதிர்க்கட் சியினர் பதிலுக்கு நிரந்த அடிமைகள் என்று விமர்ச்சிப்ப தும் தேவையற்ற சம்பவங்கள்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற கொள்கை முழக்கத்தை முன்வந்து தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆண்டு கொண்டிரு ப்பவர்கள் அந்த கொள்கையை இனியாவது கடை பிடிக்க வேண்டும். சட்டப்பேரவை என்பது நடந்து முடிந்ததில் குற்றம்கண்டு நேரத்தை வீண்டிப்பதற் கல்ல கேரளாவிலும் கர்நாடகாவிலும் எல்லா கட்சிகளும் இணைந்து தங்கள் மாநிலத்தின் தேவைக்காக உரிமைக்காக போராடுவதைப் பார்த் தாவது கழக கண் மணிகளும் கழக உடன்பிறப்புக்களும் மாற வேண்டும்.
பிரதமர் முதல் கடைசி நிலை ஊழியர் வரை வழங் கப்படும் சம்பளம் சலு கைகள் எல்லாம் ஒவ்வொரு குடிமகனின் வியர்வையை விற்றுப்பெறப்படுகிறது. என்பதை மன சாட்சியோடு மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்து மாற வேண்டும்.
கட்டுப்பாட்டுடன் கடமையாற்றி கண்ணியத்தை காப் பாற்ற தவறினால்… கண் இமைக்கும் நேரத்தில் நாம் கழற்றி விடப்படுவோம் என்ற எச்சரிக்கை உணர்வுடன் மக்கள் பிரதிநிதிகள் செயலாற்ற வேண்டும்.
|/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்
திரு.உதயம் ராம் : 94440 11105
|//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\
நம் உரத்த சிந்தனை மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர
இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150-
2 ஆண்டு சந்தா – ரூ.300-
5 ஆண்டு சந்தா – ரூ.750-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த…
இந்தியாவிலுள்ள எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்தலாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்கண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்தலாம்.
வெளியூரில் உள்ளவர்கள் ரூ.10- கூடுதலாக சேர்த்து செலுத்த வேண்டும்
பெயர் – நம் உரத்த சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
கணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க வேண்டுகிறோம்.
|//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டினைக் கழகக் கண்மணீகள் கடைப் பிடிப்பார்களா? வைர வரிகளால் சாட்டையடி கொடுக்கும் சரியான தலையங்கம்.