Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்று ஒரு சிறப்பான நாள்! – நீங்களும் இவரை வாழ்த்துங்க!

இன்று ஒரு சிறப்பான நாள்! – நீங்களும் இவரை வாழ்த்துங்க!

இன்று ஒரு சிறப்பான நாள்! – நீங்களும் இவரை வாழ்த்துங்க!

கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் இளைஞர்களை சந்தித்த ஒரு சாதனை யாளர் நம் மத்தியில்

உள்ளார் தெரியுமா? அவர் இந்தியாவின் பல்வேறு கிராம ங்களுக்கு, நகரங்களுக்கு மட்டும் அல்லாது சிங்கப்பூர், மலேசியா, கனடா, துபாய், மஸ்கட், அமேரிக்கா என்று பல நாடுகளுக்கும் பயணித்து பல பேச்சாளர் களை இனம் கண்டவர்.

இன்று “நீயா நானா” என்ற டாக்ஷோ தான் எல்லோருக்கு ம் தெரிகிறது. அப்படி ஒன்று இருக்கிறது என்று அனைவ ருக்கும் உண ர்த்தியது விசுவின் அரட்டை அரங்கம். அந் நிகழ்ச்சியின் தலைமை தேர்வு அதிகாரியாக நிகழ்ச்சி இயக்குனராக 13 ஆண்டுகள் பணி ஆற்றி உள்ளார்.

அதுமட்டுமா சிவசங்கரி அம்மாவின் நேற்று இன்று நாளை (சன் டிவி) நிகழ்ச்சி, சோவின் பஞ்சாயத்து (சன் டிவி), துக்ளக் தர் பார் (ராஜ் டிவி), சென்சேஷன் (T.N. சேஷன் கலந்து கொ ண்ட டாக் ஷோ- ராஜ் டிவி), கல்யாண மாலையின் பட்டி மன்ற ஆரம்பகட்ட நிகழ்ச்சி, ஜெயகாந்தன் அவர்கள் கலந்துகொண்ட ஒரே டிவி நிகழ்ச்சியான ஒரு பிரஜை யின் குரல், S.ve.சேகரின் இனிமே நாங்கதான், அபஸ்வ ரம் ராம்ஜியின் பேச்சு க்கச்சேரி, தவிர தனது சொந்த நிகழ்வாக ‘மாறுவோம் மாற்றுவோம்’ என பற்பல டாக் ஷோக்க ளை நடத்திய பெருமைக்குரியவர்.

கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பலதொகுப்பு நூல்களின் ஆசிரியர், உதயம் பத்திரிகை சிறுவயது முத லே நடத்தியவர், பல வானொலி நாடகங்கள் எழு தியவர், பாடலாசிரியர், உரத்தசிந்தனை என்ற அமைப்பை 32 ஆண்டுகளுக்கு முன் நிறுவியவர், நம் உரத்தசிந்தனை என்ற பத்திரிகையின் ஆசிரியர், 16 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆம் உங்கள் யூகம் சரிதான்- திரு. உதயம் ராம் அவர்களை பற்றித் தான் சொல் கிறேன்.

பல விருதுகள், பாராட்டுகளுக்கு சொந்தக்காரர், இந்த ஆண்டுக்கடைசிக்குள் ஒரே மேடையில் 6 நூல்களை வெளியிட இருக்கிற நண்பர் உதயம் ராம் அவர்கள் தனது பிறந்த நாளை நாளை (25 ஆகஸ்ட்) கொண்டாடுகிறார்.

இவர் பெயர் பலரின் கதவுகளை திறந்து விட்டிருக்கிற பாஸ்வேர்ட். பலரை இளந்தலைவர்களாக கவிஞர்களாக , எழுத்தாளராக மாற்றியுள்ளார் (நெல்லை ஜெயந்தா, ஆரூர் புதியவன், சுப்பையா, தமிழினியன், விதைவிருட்சம் சத்திய மூர்த்தி, – சில உதாரணங்கள்).

விசேஷநாட்களில் ஆவின் பால் பாக்கெட்டில் ஹாப்பி தீபாவளி என்று எழுத வைத்தவர். இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு ஆயில் சேமிப்புதிட்டம் குறித்த பல்வேறு நிகழ்வுகள், என பல புதியமுயற்சிகள் இவர் சொன்ன யோசனைகள் தான்.

பாக்கெட் நாவல் அசோகன், எழுத்தாளர் சுபா, போன்றவர்கள் இவர் சம காலத்து சாதனையாளர்கள். பல அமைப்புகளுக்கு, நிறுவனங்களுக்கு, கல்வியாளர்களுக்கு நல்ல யோசனைகளை வழங்கி வருகிற இவர் நீடு வாழ பிரார்த்திக்கும் இந்த தருணம் நீங்களும் இவரை வாழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவரால் எழுத்துத்துறையிலும், ஊடகத்துறையிலும் சிற்சில சாதனைகள் செய்தவன் என்ற பெருமை, நன்றி எனக்கு எப்போது ம் உண்டு.

சொந்தவாழ்க்கை, பணிவாழ்க்கை (BSNL-உயரதி காரி), குடும்ப வாழ்க்கை, சமூகவாழ்க்கை என அனைத்து அம்சங்களிலும் வெற்றியுடன் திகழும் இவர் மேலும் பலபெருமைகள் அடையவேண்டும். கலைமாமணி போன் ற விருதுகள் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். (பாலகன் பாலா (Bala Sandilyan)வின் முகநூலிலிருந்து…)

இப்பெருமைகளுக்கு
சொந்தக்கார்/
இன்று பிறந்த நாள்
காணும்

உதயம் ராம்

அவர்களுக்கு

உரத்த‍ சிந்தனை மற்றும் விதை2விருட்சம் சார்பாக அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உதயம்ராம் அவர்களுக்குத்

வாழ்த்துக்களை தெரிவிக்க‍ விரும்புபவர்கள், 94440 11105 என்ற கைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலமாகவோ அல்ல‍து அழைப்பு விடுப்பதன் மூலமாகவோ அல்ல‍து udhayamram@gmail.com என்ற மின்ன‍ஞ்சல் மூல மாகவோ அல்ல‍து இப்பதிவின்கீழ் comment ஆகவோ உங்களது வாழ்த்து க்களை தெரிவிக்கலாம்.

திரு. உதயம் ராம் அவர்களுக்கு நம் உரத்த‍ சிந்தனை சார்பாகவும், விதை2விருட்சம் இணையத்தின் சார்பாகவும் பிறந்தநாள் நல் வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறது.


 
 
 
 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: