Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூதறிஞர் இராஜாஜியும், சரித்திரம் மறந்த அந்த உன்னத சம்பவமும்

மூதறிஞர் இராஜாஜியும், சரித்திரம் மறந்த அந்த உன்னத சம்பவமும்

மூதறிஞர் இராஜாஜியும், சரித்திரம் மறந்த அந்த உன்னத சம்பவமும்

1925 நாடெங்கிலும் காந்தியின் தலைமையில் விடுதலைப் போராட்டம் புது எழுச்சி கொண்டிருந்த

காலகட்டம். காசையும் வாங்கிக் கொண்டு கேசையும் ஏற்றுக்கொண்டு தானும் கோர்ட்டுக்குப் போகமாட்டேன் அடுத்தவனையும் போகவிடமாட்டேன் என தற்போதை ய நீதிமன்றப்புறக்கணி ப்பைப்போலன்றி 7 வருடங்க ளாக ஒத்துழையாமை இயக்கத்தின்கீழ் தங்கள் சன்னத் துகளை திரும்பத் தந்துவிட்டு அந்நிய அரசின் நீதிமன்றங்களை அன்றைய வக்கீல்கள் முழுமையாகப் புறக்கணித்து வந்த காலம். தற்போதைய ஆந்திர மாநிலத்திலிருக்கும் சித்தூரிலிருந்த ஒருகாங்கிரஸ் மேலவை உறுப்பினரும் மூதறிஞர் ராஜாஜி யின் நண்பருமான ஒரு வக்கீல் கேட்டுக் கொண்ட தற்கு இணங்க அமரர் ராஜாஜி, சித்தூர் செல்கிறார். காந்தியின் கட்டளையைமீறி ஒரு குற்ற வழக்கில் தண்டிக் கப்பட்ட ஒரு ‘தாழ்த்தப்பட்ட பஞ்சமனுக்கு அப்பீலில் ஆஜராவதா க அவர் துணிந்து முடி வெடுத்திருந்தார். அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தினாலும் சரி என்ற எண்ணத்தி ற்கு அவர் வந்திருந்தார் என்பதும் கடைசிவரை அதை அவர் விளம்பரப் படுத்திக்கொள்ளவில்லை என்பதும் அவ ரது மேன்மை.

அந்த மனிதன் அப்படி என்ன தவறிழைத்துவிட்டான்? தாழ் த்தப்பட்ட இனத்தில் பிறந்துவிட்டதால் அவன் திருப்பதி கோவிலுக்குள் நுழைந்து இறைவனைப் பார்த்து வணங்க அனுமதியற்ற அவலமான கால கட்டம். அப்போதிருந்த நீதி மன்றம் அதைமீறும் ‘பஞ்சமர்களை’ சிறைக்கு அனுப்பிய காலம். அந்த மனிதன் 10 வருடங்களாக திருப்பதி கோவிலுக்குள் செல்ல த்துடிக்கிறான். அனுமதி இல்லை. ஒருநாள் ‘ கோவிந்தா கோவிந்தா’ கோஷத்துடன் பக்தி மேலிட கோவிலுக்குள் நுழைய காவலர் கைது செய்து நீதிமன்றத்தால் தண்டி க்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறான். அவனுக்காக அப்பீல்செய்த அந்த சித்தூர் வக்கீல் குற்ற வழக்குகளில் ஜாம்பவான் ஆகிய ராஜாஜிக்கு அந்த அப்பீலை நடாத்தித் தரும்படி வேண்டுகிறார்.

ராஜாஜிக்கு மிகப்பெரிய சவால். 7 வருடங்களாக காந்தியின் கட்டளைக் கிணங்கி தான்புறக்கணித்து வந்த நீதிமன்றப் பணியை இந்த ஒரு வழக்கிற்காக மீண்டும் ஏற்பதா? வேண் டாமா? கட்சியா? நியாயமா? அரிசனங்களின் ஆலயப் பிர வேசம் அவசியமானது என்ற அவரது கொள்கைக்கு முன்னா ல் காந்தியின் கட்டளை தோற்கிறது. அந்த ஏழைக்காக சித்தூர் செசன்ஸ் கோர்ட்டில் அந்த மேல்முறையீட்டில் ஆஜராக ராஜாஜி முடிவெடுக்கி றார்.

ஆனால் அவரவக்கீல்தொழிலுக்கான உரிமத்தை பல் லாயிரக்கணக்கான காங்கிரஸ் வக்கீல்கள்போல அவரும்பார்கவுன்சிலிடம் திரும்பத்தந்து விட்டாரே? எப்படி ஆஜராவது என்கிறார் அந்த சித்தூர் வக்கீல். கவலைவேண்டாம் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் வக்கீலாக இல்லாமல் வக்காலத்துஇல்லாமல் தனி மனிதனாக ஒரு குற்றவாளிக்கு ஆஜராக வழி உண்டு என்பதை சுட்டிக்காட்டி அவர் சித்தூர் சென்றநாள் 22-12- 1925. ஆங்கிலேய நீதிபதி அவருக்கு விதிகளின்படி அனு மதி அளிக்க மூதறிஞர் ராஜாஜி அவருக்கே உரித் தான சட்டஞானத்தோடு வக்கீல் உடையின்றி சிவில் உடையோடு அவ்வழக்கை நடத்தி அந்த மனிதனுக்கு விடுதலை வாங்கித் தருகிறார். அவனைத் தன்னோடு திருக்கோவிலு க்குள் அழைத்துச்செல்கிறார். தெய்வ தரிசனம் அவனுக்குப் பரவசத்தையும் இவருக்கு மகிழ்வை யும் தருகிறது. அந்த உணர்வு மேலீட்டில் மூதறிஞர் எழுதிய பாடல்தான் ‘ குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா’ கீர்த்தனை.

பிற்பாடு தனக்கு மாப்பிள்ளை ஆகியவரும் காந்தி யின் மகனுமான தேவதாஸ் காந்திக்கு திருச்செங்கோடு காந்தி ஆசிரமத் திலிருந்து இந்த சம்பவத்தை விளக்கி ஒருகடிதம் எழுதுகிறார் . அது காந்தியாரின் பார்வைக்கு ச்செல்கிறது. ஒரு உன்னதமான காரியத்தைச் செய்ததற்காக அந்த மகாத்மா இந்த உத்தமரை ப்பாராட்டுகிறார். அக்கடி தங்களை சபர்மதி ஆசிரமத்தில் தான் பார்த்ததாக ஒரு முறை இரயில் பயணத்தில் நான் சந்தி த்த ஒரு அன்பர் சொன்னார்.

இச்சம்பவத்தை நினைவு கூர்ந்து முதன்முதலாக ராஜாஜியின் நினைவாக தி இந்து நாளிதழில் 2002 ம் வருடம் டிசம்பர் 24ம் தேதி ராஜாஜியின் பேரன் கோபால் காந்தி ஒரு கட்டுரை எழுதி யிருக்கிறார்.

சற்றே நினைத்துப்பாருங்கள். 1925ல்நிகழ்ந்த ஒருசரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் யாருக்கும் தெரியா மல் போகிறது. பிற்பாடு 1967ல் கல்கி வார இதழ் ராஜாஜி எழுதிய இப்பாடலை முதல் தடவையாக பதி ப்பித்தது.

ஆனாலும் இப்பாடலை உலகம் முழுவதும் பிரபல ப்படுத்தியது இசையரசி M.S. சுப்புலக்ஷ்மிதான். 1979ம்வருடம் HMV நிறுவனம் M.S. பாடிய ஸ்ரீ வேங் கடேச பஞ்சரத்னமாலா என்ற ஒலித்தட்டில் இப் பாடலை அவர் அற்புதமாகப்பாடி அருமையான அப்பாடலுக்கு மேலும் மெருகேற்றியிருந்தார். சிவரஞ்சனி, காப்பி மற்றும் சிந்துபைரவி ஆகிய 3 ராகங்களில் அமைந்த ராகமாலிகைப் பாடல் கேட்பவர்களை உன்மத்தம் அடையச் செய்யவல்லது. பதிவுசெய்யப்பட்டாலும் சரித்திரம் மறந்த அந்த உன்னதமா ன சம்பவத்தையும் அந்த உத்தமரின் மேன்மையையும் அறிந்து கேள்விபட்டதால் இந்த வாய்ப்பு கிடைத்ததால் எனக்கும் குறை ஒன்றும் இல்ல.

=>ஸ்ரீகலா கலா முகநூலிலிருந்து…

 
 
 
 
 
 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: