Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது இணைக்க‍வேண்டிய ஆவணங்கள்- சட்ட‍த்தின் பார்வையில்

விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது  இணைக்க‍வேண்டிய ஆவணங்கள்! – சட்ட‍த்தின் பார்வையில்…

விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது  இணைக்க‍ வேண்டிய ஆவணங்கள்! – சட்ட‍த்தின் பார்வையில்…

திருமணமான இடத்திற்கு அருகில் இருக்கும் நீதிமன்றத்திலோ அல்ல‍து தம்பதிகள் வாழ்ந்த இடத்திற்கு

அருகில் இருக்கும் நீதிமன்றத்திலோ விவாகரத்து தாக்கல் செய்ய‍லாம். மேலும் இந்த விவாகரத்து எந்த மதத்தின்கீழ்  அதாவது இந்து திருமணச் சட்டம், இந்திய விவாகரத்து சட்டம், சிறப்பு திரு மண சட்டம், இஸ்லாமிய திருமண முறிவுச் சட்டம் ஆகியவற்றின்கீழ் பதிவுசெய்ய வேண்டும்.

விவாகரத்து என்ன காரணத்தின் பேரில் விவாகர த்து பதிவு செய்கிறோம் என்பதைப் பொறுத்து என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை கூற முடியும்.

பொதுவாக எந்தத்திருமணச் சட்டமாயினும் விவாகரத் துப் பதிவுசெய்ய வேண்டிய அடிப்படை ஆவணங்கள்

*

திருமணப்பத்திரிக்கை அல்லது திருமணப் பதிவுச் சான்றிதழ்,

திருமணத்தின்போது இருவரும் ஒன்றாக இருந்து எடுக்க‍ப்பட்ட‍ ஒளிப்படம்

முகவரிக்கான ஆதாரம்,

விவாகரத்துக்கான காரணங்களை எழுதி தட்டச்சு செய்த மனு

மேலும் சில ஆவணங்கள்

வழக்கறிஞர் மூலம் கொடுத்த நோட்டீஸ்,

அதற்கு எதிர்தரப்பு அளித்த‍ பதிலறிக்கை,

காவல்நிலை புகார்,

புகார் மனு ரசீது,

முதல் தகவலறிக்கை,

விவாகரத்துக்கு சொல்ல‍ப்பட்டுள்ள‍ தகவல்களுக்கு தகுந்த சாட்சியங்களும் ஆதாரங்கள் அடங்கிய  ஆவணங்கள் எதுவாயி னும் தாக்கல் செய்யலாம்.

=> வழக்கறிஞர் நளன்

 
 
 
 
 
 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: