1 வாரம் வரை தேனில் ஊறவைத்த பூண்டு விழுதுகளை சாப்பிட்டால் . . .
1 வாரம் வரை தேனில் ஊறவைத்த பூண்டு விழுதுகளை சாப்பிட்டால் . . .
பூண்டிலும் தேனிலும் எண்ணிலங்கா மருத்துவத்தின் மகத்துவத்தை மறைத்து
வைத்துள்ளன• இந்த பூண்டினை தனித்தனியாக உரித்து எடுக்கப்பட்ட விழுதுகளை கொஞ்சம் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொண்டு தூய்மையான தேன் உள்ள ஜாடிக்கு ள் போட வேண்டும். நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மை யான தேனை ஊற்றி ஊறவைக்கவும். ஒரு வாரம் இதை ஊற விடுங்கள். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வருடத்திற்கு கெடாமல் இருக்கும்.
தினமும் காலை வெறும்வயிற்றில் 1/2 டீஸ்பூனளவு உட்கொண்டால் போ துமானது. 1 நாளுக்கு 5-ல் இருந்து 6முறை இதை 1/2 டீ ஸ்பூனளவில் உட்கொள்ளலாம். உணவு உண்ட பின் இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்து விடும். எனவேதான் காலையில் எழுந்ததும் உட்கொள் ள கூறப்படுகிறது.
ஒரு வாரம் வரை பூண்டை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்
சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்கவும், இவைக்கான சிறந்த மருந்தாகவும் இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது.
பிறகு நற்பகல், மாலை வேளையிலும் உணவு உட்கொள்வதற்குமுன் இதை உட்கொள்ளலாம்.
நல்ல மருத்துவ குணம்வாய்ந்த இவ்விரண்டையும் சேர்த்து உட்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அன்றாடம் தாக்கும் உடல் நலப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடிகிறது.
சித்த மருத்துவமும் ஆரோக்கிய வாழ்க்கையும்…