யாரெல்லாம் பூண்டு சேர்த்த உணவை சாப்பிடக்கூடாது? மீறி உண்டால் உண்டாகும் விபரீதங்கள்
யாரெல்லாம் பூண்டு சேர்த்த உணவை சாப்பிடக்கூடாது? மீறி உண்டால் உண்டாகும் விபரீதங்கள்
மிகுந்த மருத்துவ குணம் நிறைந்த பூண்டு விழுதுகளை, அன்றாடம் சமை க்கும் உணவில் சிறிதளவு சேர்த்துச்
சமைத்து சாப்பிட்டால், நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை அளிக்கும் ஆனால் அதே நேரம் யார் யாரெல்லாம் இந்த பூண்டு சேர்த்து சமைத்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து அவ ர்கள் இந்த பூண்டினை சாப்பிடாமல் தவிர்க்கவேண்டும். மீறி உண்டால் உண்டாகும் தீய விளைவுகளைப்பற்றியும் இங்கு காண் போம்.
சாப்பிடக் கூடாதவர்கள்
1) கல்லீரல் பாதிப்பு அடைந்தவர்கள்
2) கர்ப்ப காலத்திலும், குழந்தை பிரசவித்து தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களின் மாதவிடாய் காலங் களில்…
3) குறைந்த ரத்த அழுத்தம் உடையவர்கள்…
4) அறுவை சிகிச்சை செய்துகொள்ளவிருக்கும் நபர் 15 நாட்களுக்கு முன் பே நிறுத்தி விட வேண்டும்.
5) வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு தொடர்பான பாதிப்பு உள்ளங்கள்
6) கண் சார்ந்த நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள்
7) ஏதேனும் நோய்க்காக மருந்துகள் உட்கொள்பவர்கள்
**
இதனை மீறி பூண்டு சேர்த்து சமைத்த உணவுகளை உட்கொண்டால் . . .
1) கல்லீரல் கோளாறு உள்ளவர்கள் கோளாறுக்கு எடுக்கும் மருந்துகளின் வீரியத்தைக்குறைத்து நோயின் பாதிப்பை நிலைக்கச் செய்கிறது.
2. கர்ப்ப காலத்தில், தாய்பாலூட்டும் காலத்தில் மாதவி டாய் ஏற்படும்போது பூண்டை சேர்த்து சமைத்தை உண வை உட்கொண்டால் தாய்க்கும் சேய்க் கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
3. குறைந்த இரத்த அழுத்தம் இருக்கும் நபர்கள் பூண்டை தவிர்த்துவிடுவது நல்லது. மீறினால், குறைந்த இரத்தத்தை இன்னும் குறைத்து விடும்.
4. அறுவைசிகிச்சை செய்துகொள்ளபோகும் நபர் கள், 15 நாட்களுக்கு முன்பே பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மீறி சாப்பிட்டால், அதிக இரத்த போக்கை உண்டாக்க வாய்ப் புண்டு. ஏனெனில், பூண்டுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் தன்மை இருக்கிறது .
5. வயிற்றுப்போக்கு கோளாறால் அவதிப்படும் நபர்கள் பூண் டை உணவில் சேர்த்துக்கொண்டால் குடல் இயக்கத்தை ஊக்கப்படுத்தி வயிற்றுப் போக் கை அதிகப்படுத்தும்.
6. கண் சார்ந்த நோய் / கோளாறுகள் இருக்கும் நபர்கள் பூண் டை சேர்த்து உணவை சாப்பிட்டால் கண்களின் ஆரோக்கியத்தைகெடுக் க / கூடும்.
7. எந்தவித மருந்துகள் உட்கொண்டு வருபவராக இருந் தாலும் பூண்டு சேர்த்து சமைத்த உணவை சாப்பிட்டால் மருந்துகளின் ஆற்றலை மாற்றும் தன்மை கொண்டுள் ளது. எனவே, மருந்து உட்கொள்ளும் காலத்தில் மருத்துவரை அணுகிய பிறகு பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
=> பாலாஜி விஸ்வநாத்