Wednesday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆப்பிளின் iPhone7 கைபேசி – அதிரடி வசதிகளுடன் அட்டகாசமாக‌ அறிமுகம்!-வீடியோ

ஆப்பிளின் iPhone7 கைபேசி – அதிரடி வசதிகளுடன் அட்டகாசமாக‌ அறிமுகம்!-வீடியோ

ஆப்பிளின் iPhone7 கைபேசி – அதிரடி வசதிகளுடன் அட்டகாசமாக‌ அறிமுகம்!-வீடியோ

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் iPhone7 கைபேசி அட்டகாசமாக‌ அறிமுகம்    

ஆப்பிளின் iPhone7 கைபேசி அதிரடி வசதிகளுடன் இன்று அட்டகாசமாக‌ அறிமுகம்! அதிரடி வசதிகளுடன் இன்று அட்டகாசமாக‌

வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த புதியவகை ஐபோனில், வழக்க மாக மற்ற கைத்தொலைபேசிகளில் உள்ளதை ப்போன்று, ஹெட்போன் எனப்படும் காதுகளிலில் பொருத்திக்கேட்கும் சாதனத்தை இணைக்கும் வசதி இருக்காது.

ஹெட்போன் சொக்கெட் என்ற இணைப்பைப் பொருத்தும் இடத்தில், மற்ற பாகங்களைப்பொருத்த முடியும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. இம்முடிவா ல், வயர் இணைப்பு இல்லாத, காதுகளில் பொருத்திக் கேட்கும் வசதிகள் பயன்படுத்து வதை ஊக்குவிக்க இந்த தைரியமான முடிவு வழிவகுக்கும் எனஅந்நிறுவனம் கருதுகிறது.

வயர் இல்லாத, ஏர்பாட்ஸ் என்ற கூறப்படும் காதில் பொருத்திக் கேட்கும் புதிய சாதனத்தையும் ஆப்பிள் வெளியிட்டு ள்ளது.  ஆனால், ஆப்பிள் நிறு வனத்தின் இந்த முடிவு குறித்து, நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறா ர்கள். ஒலித்திறன் சிறப்பாக இருக்க வேண்டு மானால், வயருடன் கூடிய ஹெட்போன்தான் சிறந்தது என்பது நிபுணர்களின் வாதம்.

ஆனால், 159அமெரிக்க டாலர் (அல்) 119 பவுண்ஸ் மதிப்புடைய தனது ஏர்பாட் கருவிகளை பயன்படுத்துவதில் பல சாதக அம்சங்கள் உள்ளதாக அப்பிள் வாதிடுகிறது. வழக்கமான ப்ளூடூத் ஹெட் செட்களைவிட, வயர் இல்லாத சாதனங்களை விரைவில் இணைக்க முடியும் என அது கூறுகி றது. ஏர்பாட் சாதனத்தை காதுகளில் இருந்து எடுத்துவிட்டால், இசை தானாக நின்றுவிடும் என்றும் தெரிவிக்கிறது. ஏர்பாட் சார்ஜ் செய்த பி றகு, ஐந்து மணி நேரத்துக்கு நீடிக்கும் என்கிறது அப்பிள்.

அமெரிக்காவை மையமாகக்கொண்ட அப்பிள் நிறுவனம், சன்பிரான்சிஸ் கோவில் புதிய ஐபோனை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது. புதிய ஐ போனில், ஹோம்பட்டனில் எந்தளவுக்கு அழுத்தம் தரப்படுகிறது என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்றபடி அதிர்வு(வைப்ரேஷன்) அடிப்படை யிலான பதில்களைத்தரும். புதியபோன், சுமார் 30 நிமிடங்கள் வரை, 3.2 அடி ஆழமு ள்ள தண்ணீரில் போடலாம். எந்த பாதிப்பும் ஏற்படாது என அந் நிறுவனம் கூறுகிறது.

பெரிய ஐபோன்7+ பின்புறம் வைட் ஆங்கிள் மற்றும் டெலி போட்டோ ஆகிய 2 லென்ஸ்க ளுடன்கூடிய கமராவை வழங்குகிறது. இதன் மூலம் படத்தின் தரம்குறையாமல் நெருங்கிய (Closeup)காட்சி எடுக்கவும், முன்பிருந்ததை விட 10 எக்ஸ் ஜூம் பொருத்தவும் வழியேற்படுத்துகிறது. கமரா செயலி மூலம் புகைப்படங்களை கிராப் செய்துகொள் ள முடியும். இது போன்ற வசதி, LG யின் ஜி5 செல்பேசி யில் முன்னமே உள்ளது.

புதியஐபோனில் இருபக்கமும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனா ல், ஒலியளவு ஐபோன் 6 ஐ விட 2 மடங்காக இருக்கும் என்கிறது அப்பிள். அப்பிள் ஸ்மார்ட் கைக்கடிகார வரிசையில் புதிய கைக்கடிகார த்தையும் அறிமுகப்படுத்தி யுள்ளது. அப்பிள் வட்ச் 2 கைக்கடிகாரத்தை 164 அடி ஆழம் வரை தண்ணீருக்குள் கொண்டு செல்லலாம். அதாவது நீச்சலின்போதும் இதைப் பயன்படுத்தலாம். ஜிபிஎஸ் வசதியுடன் புதிய செயலிகளும் சேர்க்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

iPhone 7 vs 7 Plus – Which Should You Buy?

கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply