Friday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொலை கொள்ளை கற்பழிப்பு – (வேடிக்கை பார்க்கிறதா? சட்ட‍மும் அதிகாரமும்

nus-sept-wrap

கொலை கொள்ளை கற்பழிப்பு

செப்டம்பர் 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கள்

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் இன்று வாழ்வதற்கு பயமாய் இருக்கிறது. நம்பினார் கெடுவதில்லை என்று தீர்ப்புரைத்த

மண்ணில் எதையும் நம்புவதற்கில்லாத சூழல் நிலவுகிறது. கொலை கொள்ளை கற்பழிப்பு செய்திகளால் த‍மிழ் நாடு தன்னிலையிழந்து தள்ளாடுகிறது.

நடுவீதியில் ஓட ஓட விரட்டிக் கொலை… நீதிமன்ற வளா கத்தில் பயங்கர கொலை, நீதிமன்ற வளாகத்தில் பயங்கர கொலை, ஓடும் ரயிலில் கொள்ளை, நிற்கும் பஸ்ஸில் கொள்ளை வயது வித்தியாசம் பாராமல் கற்பழிப்பு, நகை பறிப்பு, கடையுடைப்பு, எனவிதம் விதமாய் சினிமாவை விஞ்சுமளவுக்குகாட்சிகள் சாட்சிகளாய் இருக்கையில் அமைதி பூங்கா என்று எப்ப‍டித் தான் சிலரால் சொல்ல‍ முடிகிறதோ?

டாஸ்மாக்கைத்தாண்டாத சினிமாக்கள் ரவுடிகளாய் திரியும் கதாநாயகன்கள், குடும்பத்தைகூறுபோடும் சொல்வதெல்லாம் உண்மை, குடும்ப பெண்களை குள்ள‍நரிக்கூட்ட‍மாக.. குடிகெடுக்கும் அரக்கிகளாக காண்பித்துக் காசு பொறுக்கும் சின்ன‍த்திரை கூத்துக்கள், நல்ல‍ச்செய்தியா 4வரி. நாசமாப்போனச்செய்தியா? 4 பக்க‍ம் என்ற கொள்கைப் பிடிப்போடு வெளிவரும் பத்திரிகைகள் இவையணைத்தும் குற்ற‍ங்களுக்கு தூது போகின்றன, தனி மனிதனை அவதூறாக சித்த‍ரித்தால் பாய்கிற சட்ட‍ம், சமுதாயத்தையே அவதூறாய் சித்த‍ரிப்பவர்களை கண்டு பதுங்குவது ஏன்? புரியாத புதிர்தான்.

இவற்றைத்தாண்டி இன்று நம்வாழ்க்கையை நம் கலாச்சாரத் தை சூறையாடிக்கொண்டிருக்கின்றன• முகநூலில் மோசடி, ஆன் லைன் அபகரிப்பு,,, இணைய தளத்தில் இன்பசேவை, போலி மருத்துவம் போலி வர்த்த‍கம், இப்படி விரல் நுனியில் விரிந்து கிடக்கும் விபரீத ங்களை எப்ப‍டி தடுப்ப‍து? தடுப்ப‍தற்கு வழிகளில்லையா?

இருக்கு… ஆனா இல்லை. ஆம் காவல்துறை, சைபர் கிரைம், சென்சார், வன்கொடுமைச்சட்ட‍ம், பெண் கொடுமை தடுப்புச் சட்ட‍ம், பெண்ணுரிமை , பறக்கும் படை, போதை ஒழிப்பு, மகளிர் அமைப்பு எல்லாம் இருந்தும் என்ன‍ பயன்? அதிகாரம் பதவி பணம் முன் இவைகள் முன்னால் செல்ல‍ரித்து செயலிழந்து வருகின்றன•

குற்ற‍ங்கள் குறைய வேண்டுமானால் ஒரே வழி தண்டனைகள் அதிக மாக வேண்டும். அதிவிரைவாய் செயல்படுத்த‍ப் பட வேண்டும• பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறது விவிலியம். கலியுகத்தில் கர்மங்களுக்கு கை மேல் பலன், என்கிற‌து கீதை. இப்ப‍டி இருக்கையில் .. நீதிக்கு  என்ன‍ தயக்க‍ம்! நீதி தேவனுக்கு ஏன் மயக்க‍ம்?

கடமை-கண்ணியம்- கட்டுப்பாடு அரசியலுக்கு மட்டு மல்ல‍… தனி மனித வாழ்விலும் இதை கடை பிடித்தால் குற்ற‍ங்கள் குறையும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாதல்லவா?

நல்ல‍தைப் பார்த்து, நல்ல‍தை கேட்டு, நல்ல‍தைப் பேசினால் அல்ல‍வை தேயும், அறம் செழிக்கும் அன்பு மலரும்.

/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

திரு.உதயம் ராம் : 94440 11105

|//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\

நம் உரத்த‍ சிந்தனை மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர  இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150-
2 ஆண்டு சந்தா – ரூ.300-
5 ஆண்டு சந்தா – ரூ.750-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…
இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.
வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்
பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.

|//\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\///\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\

v

கீழே உள்ள படத்தை கிளிக் செய்யுங்கள்

 
 

Leave a Reply