தமிழ்மாதங்களில் வரும் பௌர்ணமிகள் – சீர்மிகு சிறப்புக்களும், முக்கிய விரதங்களும்! நீங்கள் அறியா தகவல்
தமிழ்மாதங்களில் வரும் பௌர்ணமிகள் – சீர்மிகு சிறப்புக்களும், முக்கிய விரதங்களும்! நீங்கள் அறியா தகவல்
இந்துசமய பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும் பௌர்ணமி பெரிய நிகழ்வாக
கொண்டாடப்படுகிறது. தமிழ்மாதங்களுக்கான பௌர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன.
1) சித்ரா(சித்திரை) பௌர்ணமி – சித்ரகுப்தனின் பிறந்தநாள்
2) வைகாசி பௌர்ணமி – முருகனின் பிறந்தநாள்.
3) ஆனிப் பௌர்ணமி – இறைவனுக்கு கனிகளை படைக்கும்நாள்.
4) ஆடிப் பௌர்ணமி – திருமால் வழிபாடு
5) ஆவணிப் பௌர்ணமி – ஓணம், ரக்சாபந்தனம்
6) புரட்டாசி பௌர்ணமி – உமாமகேசுவர பூசை
7) ஐப்பசி பௌர்ணமி – சிவபெருமானுக்கு அன்னா பிசேகம்
8) கார்த்திகை பௌர்ணமி – திருமால், பிரம்மா ஆகியோர் சிவ பெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு
9)மார்கழிப் பௌர்ணமி- சிவபெருமான்நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்
10) தைப் பௌர்ணமி – சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்
11) மாசிப் பௌர்ணமி – பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்
12)பங்குனி பௌர்ணமி-சிவபெருமான் உமையம்மை திருமண நாள்
திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று. இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக்கொள்ளப்படுகிறது. அம்பிகை வழிபாடு பூரண தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. சித்திரை மாதத்தில் வரும் பூர ணை சித்திரா பௌர்ணமி எனஅழைக்கப்படும். தாயை இழந்தவர்கள் இத் தினத்தில் விரதமிருந்து தான தருமம் செய்வது முக்கியமானதாக விளங் குகின்றது.
மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்து யமதர்மனிடம் கொடுக்கும் பணியைச் செய்யும் சித்திர குப்தர் அவதரித்த தினம் சித்திரா பௌர்ணமி ஆகும். இத்தினத்தில் அவரை வழிபடுவதும் முக்கியமானதா க விளங்குகின்றது. அறியாமையால் மனிதர்கள்செய்யும் தவறுகள் சித்தி ரா பௌர்ணமி விரதத்தினால் நீங்குகின்றன என்பது நம்பிக்கை.
===> மா மலர்
இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்