Sunday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! – ஆச்சரியத் தகவல்

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! – ஆச்சரியத் தகவல்

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! – ஆச்சரியத் தகவல்

வீட்டுத்தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்க ப்படும் செடிகளில் சில

பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்க ளையும் விரட்ட உதவுபவையாக இருந்தால் இரட்டை சந்தோஷம் தானே! கொசுக்களை விரட்டி நம் இரவுத் தூக்கத்தை இனிமையாக்கும் சில செடிகள் இங்கே…

ஏஜ்ரேடம் (Ageratum)

வெள்ளைநிறமும் ரோஜா நிறமும் கலந்து கவர்ச்சியாக காட்சி தரும் இந்த பூச்செடி உண்மையில் காக்காவலிப்புக்கும், காயங்களுக்கும் அரு மருந்து. வாசனை திரவிய ங்கள் தயாரிப்பவர்கள், கொசு விரட்டிகளை உற் பத்தி செய்பவர்கள் அதற்காக இதன் எசென்ஸை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது அரிக்கும் தன்மைகொண்டது. இதனால்தான் சிலவகையா ன கொசுவத்திகள் எரியும்போது சிலருக்கு தோலில் அரிப்பும் அலர்ஜியும் ஏற்படுகிறது.

யூகிலிப்டஸ் (Eucalyptus)

தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் பரவலாகக் காணப்படும் மூலிகை. படுவேகமாக வளரக் கூடியது. ஆனால் இதை வீட்டில் வளர்ப்பது சாத் தியமில்லை. அதே சமயம் இதன் இலைகளை எளிதாக சேகரிக்கலாம். அவற்றை காய வைத்து தீ மூட்டினால் அந்த வாசனை பிடிக்காமல் கொசு க்கள் பறந்துவிடும்.

மாரிகோல்ட் (Marigold)

மஞ்சள்வண்ண பூக்களைக்கொண்ட செடி வகை. இதை கிராமப்புறங்களி ல் ‘துலுக்கச் சாமந்தி’ என்று குறிப்பிடுவார்கள். சிராய் ப்பு, காயங்கள், தோல் வியாதிகள், தீக்காயம், சொறி, சிரங்கு, மூலநோய் போன்ற வற்றுக்கு இதை அரைத் துப் பயன்படுத்துவார்கள். மலச்சிக்கல், குடல்புண்க ள், மாதவிடாய் பிரச்னைகளுக்கும் இது அரு மருந்து. தாவரங்களின் சாறை உறிஞ்சும் பூச்சிகளை விரட்ட மாரிகோல்ட் உதவுகிறது. இது ஒரு சிறந்த கொசுவிரட்டி. சூரிய ஒளி படும் இடத்தில்வைத்தால் வேகமாய்வளரும். இதன் வாசனை பிரச்னை இல்லை என்றால், கொசுக்கள் உற்பத்தியாகும் பாத்ரூம், சமையலறையிலும் மாரி கோல்ட்டை வைத்து வளர்க்கலாம். தினமும் 2 மணிநேரம் எடுத்துப் போய் வெயிலில் காட்டினால்போதும். நன்றாக வளரும், கொசு க்களை விரட்டும்.

புதினா (Mint)

டீ தயாரிக்கவும், சளி, ஜூரம் ஆகிய பிரச்னைகளுக்கு சிகிச்சைக்காகவும் பயன்படுவது புதினா. இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்து விடும். இதிலிருந்து தயாரிக்க ப்படும் திரவத்தை தெளித்தால் கொசுவை விரட்டி விடலாம். வீட்டிலுள்ள தொட்டியில், அறைக்குள் வைத்து எளிதாக இதை வளர்க்கலாம். மண்ணில் ஒருமுறை பயிரிட்டால் தானாகவேகமாக வளரும்

ரோஸ்மேரி (Rosemary)

இதுஒரு பசுமை மாறாத செடி. நன்கு வெப்பம் உள்ள, வறண்ட தட்ப வெப்ப நிலையில் வளரக்கூடியது. இயல்பாகவே கொசுவை விரட்டும் ஆற்றல் கொண்டது. நான்கு சொட்டு ரோஸ்மேரி எண்ணெயை யும், கால் கிண்ணம் ஆலிவ் எண்ணெயை யும் கலந்து அக்கலவையை உடலில் தேய் த்தால் கொசு நெருங்காது. இக்கலவை யை ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைத்து பாதுகாக்கலாம். தேவைப்படும்போது எடு த்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். எளிதா க வளரக்கூடிய இயற்கைச் செடி.

சிட்ரோநெல்லா (Citronella – Lemongrass)

சிட்ரோநெல்லா எண்ணெய் மிகப்பிரபலமான ஓர் இயற்கை பூச்சிவிரட்டி. இதன்சிறப்பு பல ஆய்வுகளின் மூலமாக தெரிய வந்திருக்கிறது. வாசனை திரவியங்க ளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிட்ரோநெல்லா வைப் பயன் படுத்தி, சென்ட்டு தயாரிக்கின்றன.

பூண்டு (Garlic)

மூலிகை சார்ந்த மருத்துவத்தில் பூண்டுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. மிக அதிகமாக பூண்டு சாப்பிடுபவர்களை கொசுக்கள் கடிப்பதி ல்லை என்கிறார்கள். பூண்டு எண்ணெயையும் தண்ணீரையும் 1 க்கு 5 என்ற கணக்கில் கலந்து துணியில் தோய்த்து, ஜன்னல், கதவு மற்றும் கொசு நுழையும் இடங்களில் தொங்கவிட்டால் கொசுக்கள் உள்ளே வராது.

– ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்

இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: