Tuesday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கற்பூரவல்லி இலைச் சாற்றை பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால்

கற்பூரவல்லி இலைச் சாற்றை பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் …

கற்பூரவல்லி இலைச் சாற்றை பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் …

கற்பூரவல்லி, ஒரு மருத்துவ மூலிகைச் செடியாக‌ தொன்றுதொட்டே

நம் தமிழ்க்கலாச்சாரத்தோடு பின்னிப்பினை ந்துள்ள‍து. இதன் இலைகள் தடிப்பாகவும் மெது மெதுப்பாகவும் இருக்கும். கசப்புச்சுவை யும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன்இலை மருத்துவகுணம் கொண்டதாகும்

ப‌னங்கற்கண்டு என்பது பனைமரத்தின்வெல்லத் தை எடுத்து சுத்த‍ப்படுத்தி படிகங்களாக உருவாக்க ப்படும் மருத்துவ குணம் நிறைந்த ஒன்றாகும். பனை மர வெல்ல‍த்தை எடுத்து  முற்றிலும் சுத்தப் படுத்தாத, கெட்டியான கருநிற வெல்லத்தை “கருப் பட்டி” என்பது இன்னொரு வகையாகும்.  

மேற்சொன்ன கற்பூரவல்லி இலைச்சாறு எடுத்து, அத் துடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் என்ன‍ மாதிரியான பாதிப்பில் இருந்து விரைவில் குணம டைவோம் என்பதை இங்கு காண்போம்.

தொண்டைக்கட்டு மற்றும் தொண்டைகரகரப்பு என்ப து பெரும்பிரச்சனைகள்தான். இந்த தொண்டைக் கட்டு ஏற்பட்டால் குரல்வளை சற்று பாதிக்க‍ப்படுவதால, நம்மால் ஒருவார்த்தை பேசுவதற்கும் சற்று சுவாசிப்ப‍ தற்குக்கூட  சிரமப்படுவோம். அத்தகை தொண்டைக் கட்டு பிரச்சனை போக்குவதற்கு அற்புதமான வீட்டு வைத்தியம் உண்டு. ஆம்! 3 அல்ல‍து 4 நாட்களுக்கு தொடர்ச்சியாக மேற் சொன்ன‍ கற்பூரவல்லி இலைச்சாறு எடுத்து, அத்துடன் பனங் கற்கண்டையும் சேர்த்து சாப்பிட்டால் தொண்டைக் கட்டு மற் றும் தொண்டை கரகரப்பு பாதிப்புக்களில் இருந்து விரைவில் குணமடைந்து, நன்றாகவும் சுவாசிக்க‍வும், பேசவும் முடியும்

மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்வது சாலச்சிறந்தது

இதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply