இது நல்ல தொடக்கம் – (நான் வந்துட்டேன்னு சொல்லு . . .)
இது நல்ல தொடக்கம் – (நான் வந்துட்டேன்னு சொல்லு . . .)
(இந்த (அக்டோபர் 2016) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் இடம்பெற்ற தலையங்கம்)
பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி எவருக்கும் தெரியாமல் விண்வெளியில்
கண்காணித்துக்கொண்டிருக்கும் செயற்கைக்கோளி ன் பார்வையிலும் படாமல் பாகிஸ்தான் தீவிரவாதக் கூடாரங்களைத் துல்லியமாகத் தாக்கி, உலக நாடுக ளின் கவனத்தை நம் தேசம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த மத்திய அரசுக்கும் நமது ராணுவத்திற்கும் மனந்திறந்த பாராட்டுக்கள்
சமாதானத்துக்கு ஒரு கையைக் கொடுத்தபடியே இன்னொரு கையால் துப்பாக்கியை ஏந்தியிருக்கும் பாகிஸ்தானின் அணு முறை இனிமேல் இந்த அரசிடம் செல்லுபடியாகாது என்பது நிதர்சனம்
பாகிஸ்தான் ஒவ்வொருமுறையும் நம்தேசத்தின் மீது பயங்கரவாதத்தை ஏவிவிடும்போதும். வீரர்களை வேட்டையாடும்போதும் சகித்துக் கொண்டு. எங்கே போர் வந்துவிடுமோ வந்தால் நமக்கு சீனாவாலும் ரஷ்யாவாலும் ஏதாவ து ஆகிவிடுமோ என்று ஒதுங்கிக் கொள்வதையே வாடிக்கையாக கொண் டிருந்த அரசுகளிலிருந்து மாறுபட்டு சிந்தித்து செயல் படுத்தியிருக்கிறது மத்திய அரசு.
பதன்கோட்டை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எச்சரி க்கை விடுத்ததோடு பயங்கரவாத நாடு பாகிஸ்தான் என்பதை உலகநாடுகள் பலவற்றை ஏற்றுக்கொள்ள வைத்ததும் நண்பேண்டா பாணியில் பலுசிஸ்தானத்தின் ஆக்கிரமிப்பில் அந்த பகுதி மக்களின் அன்பை பெற்றதும் ஆப்கானிஸ்தான் வங்கதேச ம் ஆகியவற்றை அரவணைத்தும் அமெரிக்காவைவிட்டே எச்சரிக்க வைத்ததும், அதுமட்டுமல்ல பாகிஸ்தானை தனிமைப்படுத்துங்கள் என உலக அரங்குக்கு உரத்த குரல் கொடுத்ததும், சார்க்மாநாட்டை அண்டைநாடுகள் புறக்க ணிக்க வழிசெய்ததும் எல்லாவற்றையும்விட நதிநீர் ஒப்பந்தத்தை
மறுபரிசீலனை செய்வோம் என அதிரடி யாக அறிவித்ததும், பின் எல்லைக்குள்ளேயே நுழைந்த தும் நான் வந்துட்டேன்னு சொல்லு திரும்பி நம்தேசம் வருவேன்னு சொல்லு என்கிற கபாலியாக அதிர வைக்கிறது.
இந்நடவடிக்கையை முதலில் ஆதரித்த அனைத்துக்கட்சிகளும் தற்போது இது நடந்ததா? வீடியோ ஆதாரம்இருக்கிறதா? இதை பிரதமர் மோடி அரசியல் ஆதாயத்துக்காக செய்தார் என்பதும் கேவல மான அரசியல் நடவடிக்கைகள். தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் கேட்டு நம் ராணுவத்தையே சந்தேகப்படுவது நம் மனைவியின் நடத்தையை சந்தேகிப்பதற்கு ஒப்பானது.
பாகிஸ்தானுக்கான நதிநீர் பங்கீட்டை மறுபரிசீலனை செய்வதற்கும், தீவிரவாதிகளின் கையிலிருக்கும் காஷ் மீரைமீட்டு நம்தேசப்பகுதியோடு இணைப்பதற்கும் நமது நடவடிக்கைகளை, உலக நாடுகள் ஏற்றுக்கொள்வதற்கு ம் இதுவே சரியான தருணம். இந்த எல்லைத்
தாண்டிய தாக்குதல் நல்ல ஆரம்பம்
.
.
தேசம் நம் சுவாசம், அதை முடக்க நினைப்போரை செய்வோம் நாசம், எழுச்சி தீப்பந்தத்தை இந்தியனாய் ஒவ்வொருவர் கையிலும் ஏந்துவோம்.
/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்
திரு.உதயம் ராம் : 94440 11105
/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
நம் உரத்த சிந்தனை மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த…
இந்தியாவிலுள்ள எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்தலாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்கண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்தலாம்.
வெளியூரில் உள்ளவர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த வேண்டும்
பெயர் – நம் உரத்த சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
கணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க வேண்டுகிறோம்.
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///\///\//\///\//\|
உரத்த சிந்தனை தலையங்கம் சூப்பர். உதயம் சாருக்கு ஒரு சல்யூட்.