Monday, May 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாதாரண‌ காந்தியை 'மகாத்மா' காந்தியாக‌ வாழவைத்தது கோட்சேதான்! (அதிரவைத்த வாட்ஸ அப் தகவல்)

காந்தியை “மகாத்மாவாக வாழவைத்தது கோட்சேதான்! (என்னை அதிரவைத்த வாட்ஸ அப் தகவல்)

காந்தியை “மகாத்மாவாக வாழவைத்தது கோட்சேதான்! (என்னை அதிரவைத்த வாட்ஸ அப் தகவல்)

“காந்தியை வெள்ளைக்காரன் கூட உயிரோடு தான் வைத்திருந்தான். நாம் தான் சுதந்திரம் வாங்கிய ஒரே வருடத்தில்

அவரைக் கொன்று விட்டோம்” இந்த வசனம் ஒரு திரைப்படத்தில் வருகி றது. ஆஹா என்ன ஒரு புரட்சியான கருத்து என்று கூறி நாமும் கைதட்டினோம்.

உண்மைதான் காந்தியை கொன்றது நாம்தான். அதற்கு மதம், தேசப்பற்று என பல காரணங்கள் கூறினாலும், காந்தியை உயிரோடு விட்டதில் வெள்ளைக்காரனுக்கு ஏதேனும் காரணம் இருந்திருக்க வேண்டுமே என்று நாம் யோசித்ததுண்டா?

இந்திய விடுதலை போராட்டத்தை 2 காலங்களாக பிரி க்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஒன்று திலகர் காலம் மற்றொன்று காந்தி காலம். “சுதந்திரம் எனது பிறப்புரிமை” என பஞ்சம் பிழைக்க தென்னாப் பிரிக்கா சென்று அன்னிய மண்ணில் வெள்ளையனிடம் உதை பட்டு காந்தி இந்தியா வருவதற்கு முன்பே போராட்டத் தை தொடங்கியவர் பாலகங்காதர திலகர் ஆவார். ஒரு வேளை தென் னாப்பிரிக்காவில் காந்தியை வெள்ளையன் தாக்காமல் இருந்திருந்தால் அவர் அங்கே யே வக்கீலாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து இந்தியா வராமலேகூட போயிருக்கலாமோ என்னவோ! திலகரின்பாணிபுரட்சி செய்து இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்குவது தான். ஆனால் காந்தியோ அஹிம்சை என்று வெள் ளையனிடம் மண்டியிட்டு கேட்கும் சுதந்திர த்தை பெறவே விரும்பினார். அதை சுதந்திரம் என்றுகூட சொல்ல முடி யாது, சில சலுகைகளைபெறுவதுதான் அவரது குறிக்கோளாய் இருந்து வந்தது கஸ்தூரி பாய் சாகும் வரையில்.

1857-சிப்பாய் புரட்சி என ஆங்கிலேயனால் குறிப்பிடப்பட்ட முதல் சுதந்திரப்போர் போ ல் மீண்டும் ஒரு ஆயுத யுத்தம் இந்தியர்களா ல் முன்னெடுக்கப்படுமானால், அதை தாக்கு ப்பிடிக்க ஆங்கிலேயரால் முடியாது. அது போன்ற யுத்தத்தை திலகர் நடத்தக் கூடும் என்ற அச்சத்தில் இருந்த ஆங் கிலேயனுக்கு காந்தியின் வரவு மகிழ்ச்சி அளித்தது. அஹிம்சை என்ற செத்த பாம்பை காட்டி ஆரம்பத்தில் சில சலு கைகளை ஆங்கிலேயரிடம் பெற்று தந்ததால் இந்தியாவந்த ஆறே ஆண்டு களில் காங்கிரஸின் தலைவர் ஆகும் அளவிற் கு அவரது செல்வாக்கை உயர அனுமதித்தது அன்றைய வெள்ளைக்கார அரசு. காரணம் காந்தியை வளர்த்தால்தான் திலகரின் செல் வாக்கை குறைத்து ஆயுத தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியும் என்பதை உணராதிருக்குமா ஆங்கிலேய அரசு ?

ஒருபுறம் புரட்சிக்குதயாராகும் மக்களை அஹிம்சைபேசி உட்கார வைத்த காந்தியால் வெள்ளையன் துணிச்சலாக நம்மை ஆதிக்கம் செலுத்தலா னான். விளைவு பஞ்சாப் ஜாலியன்வாலாபாக் படுகொலை. நமது மக்களை கொத்துக் கொத் தாக இழந்த தருணம் அது. “கத்தியின்றி ரத்த மின்றி யுத்தம் செய்த” காரணத்தால் அவனுக் கு துப்பாக்கியை தூக்கி சுடும் தைரியம் வந்து விட்டது.

இனியும் அஹிம்சை பேசி அடிமைத்தனத்தை வேரூன்ற விடக்கூடாது என்று பஞ்சாப்பிலிரு ந்து ஒரு வீரன் நினைக்கிறான். அவனே பகத் சிங். “ரத்தத்திற்குரத்தம்” பழிவாங்கிய வீரனை “என்னசெய்யலாம்?” என ஆங்கிலேய இர்வின் கேட்டபோது. “அவனை உடனே தூக்கில்போடு” என்று தனது அல்லக்கை பட்டாபி சீதா ராமையா மூலம் கடிதம் எழுதுகிறது காந்தியின் அஹிம்சை..

இதனால்படிப்படியாக காந்தியின் மேலும் அஹிம்சையின் மேலும் நம்பி க்கை இழக்கிறார்கள் மக்கள். அதன்பிறகு காங்கிரஸ் தேர்தலில் நேதாஜிசுபாஷ்சந்திரபோஸ், காந்தியின் ஆதரவுபெற்ற பட்டாபியை தோற்கடித்து ஜெயித்த வுடன் “பட்டாபியின் தோல்வி என்தோல்வி ” என்று பிளாக்மெயில் செய்து காங்கிரஸில் பிளவை உண் டாக்கி தன் ஆதரவாளர்களை ராஜினாமா செய்ய வைத்து கடை சில் சுபாஷ் சந்திரபோஸ் வெறுத்து போய் அவர் களாகவே வேண்டாம் என்று வெளியேறும் அளவிற்கு தன்னை விட யாரும் உயர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தந்திரத்தில் ஈடுபட் டார்.

அம்பேத்கரை தலித்துகளின் தலைவராக அங்கீகரிக் க முடியாது என்று வெளிப்படையாகவே அறிவிக்கி றார் காந்தி. தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வழங்கக்கோரி அம்பேத்கர் லண்டன் வட்டமேசை மாநாட்டில் செய்த முயற்சிகளை தடுக்க முடியாமல், எரவாடா சிறையில் உண்ணா விரதமி ருந்து மிரட்டி, காந்தி ஒருவருக்காக ஒட்டுமொத்த தலித் மக்களின் உரி மைகளையும் விட்டுத்தரும் நிலைக்கு அம்பேத்கர் தள்ள ப்பட்டார்.

மேலும் இரு உலகப்போரிலும் இந்தியர்களை ஆங்கிலே யர்களுக்காக சண்டையிட காரணமயிருந்தார். அவனுக் கு எதிராகவே போராடிவிட்டு அவனுக்காகவே சண்டை யிட வைத்தது காந்தியின் அஹிம்சை..

காந்தியை சுட்ட கோட்சேவுக்கு அன்று நாடே எதிர்ப்பாக இருந்த போதும் காந்தி நன்றி கூறியிருக்க கூடும். சுதந்திரம் கிடைத்த வுடனே கொன்று இன்று வரை அவரை “மகாத்மா” என்ற பட்டத்துடன் வாழவைத்த பெருமை கோட்சே வையேசேரும். காந்தி இன்னும் சிலகாலம் உயிரோடு வாழ அனுமதித்திரு ந்தால்… அவரின் மறுபக்கம் வெளிவந்து ரூபாய் நோட்டுகளில் சுபாஷ்சந்திரபோஸ் சல்யூட் அடித்திருந்தாலும் அடித்திருக்க க்கூடும்… அதுவே உண்மையான தியாகத்திற்கான அங்கீகாரமா கவும் இருந்திருக்கக் கூடும்.

என்ன செய்வது. வரலாற்றை எழுதும் பொறுப்பு காந்தி யின் அடிவருடி களிடம் இருந்ததால் வந்த வினை இது. உண்மை வெளி வரும் காலம் நெருங்கிவிட்டது..

#ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தோடு….

இந்த வாட்ஸ் தகவலை படித்ததும் அதிர்ந்து போனேன். இந்த தகவல் உண்மையான வரலாற்றுத் தகவலா? அல்ல‍து உண்மைக்கு  புறம்பான தகவலா என்பது தெரியவில்லை. 

இதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: