Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களை பதற வைக்கும் அதிர்ச்சித் தகவல்

பெண்களை பதற வைக்கும் அதிர்ச்சித் தகவல்!

பெண்களை பதற வைக்கும் அதிர்ச்சித் தகவல்!

நமது வீட்டில் தந்தை, குழந்தைகள், பெரியவர்கள் என யாரிடம் சின்ன உடல் நல சார்ந்த

எதிர்மறை அறிகுறி தென்பட்டாலும் உடனே பதறி அடித்துக்கொண்டு மருத்துவம்செய்பவர்கள் பெண்க ள் தான்.

ஆனால் அவர்களுக்கு ஏதாவது நோயின் அறிகுறி தென்பட்டாலும் அதை பற்றி கவலைப்பட மாட்டார்கள். வீட்டில் உள்ள அனைவரைபற்றியும் கவலைப்படும் பெண்கள் தங்கள் உடல்நலன்பற்றி எந்தகவலையும் கொள்வதில்லை.

பெண்கள் இப்படிசாதாரணமாக எடுத்துக்கொள்ளும் அறி குறிகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் சிலபின்னாட் களில் அபாயமான நோய்களை உண்டாக காரணி யாக இருக்கலாம் என்பதை அவர்கள் அறிவதில்லை. அதை பற்றி இப் போது பார்க்கலாம்.

*சிலசமயங்களில் பெண்களுக்கு மாதவிடாய் காலத் தில் அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு வெளிப்படு ம். அதேபோல மாதவிடாய் நிற்கும் காலத்திலும் இவ்வா று நடக்கலாம். இது போல இன்றி, அவ்வப்போது அதிக ளவில் ரத்தப்போக்கு வெளிப்பட்டால் அதுகட்டி, 35 வயது க்குமேல் புற்றுநோயாககூட மாறலாம். உடலுறவுக்கு பிறகு இரத்தப்போ க்கு ஏற்படுவது ஏதேனும் இன்பெக்ஷன் காரணமாக கூட இருக்கலாம்.

* மிக வெண்மையாக அல்லது வெள்ளை நிறத்தில் பால் வடிதல் குழந்தை பெற்றபிறகு இயல்பு. ஆனால் ஒருமார்பில் மட்டும் பிரவு ன் அல்லது இரத்த நிறத்தில் வடிதல் உண்டாவது மிகவு ம் அபாயமான அறிகுறி. இந்நிலையை ஆங்கிலத்தில் “Intraductal Papillomas” என்று கூறுகின்றனர். இதை அறுவைசிகிச்சை மூலமாகதான் சரி செய்ய வேண்டும்.

*மலம்கழிக்கும்போது ரத்தம்வெளிவருவதை கண்டா ல் சாதாரணமாக இருக்கவேண்டாம். இது இரைப்பை குடலில் இரத்தம் கசிதலின் அறிகுறியாக கூட இருக்க லாம். இதே நேரத்தில் மூச்சு திணறல், உடல்சோர்வு போன்றவற்றை உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

*எல்லா மார்புவலியும் மாரடைப்புஅல்ல. சில சமயங்க ளில் குமட்டல், அதிக வியர்வை, மூச்சுவிட சிரமப்படு வது, கழுத்துவலி உண்டாவது போன்றவற்றுடன் சேர்ந் து மார்புவலி உண்டானால் அது மாரடைப்பு உண்டாவதன் அறிகுறியாக இருக்கலாம்.

* மச்சம் திடீரெனபெரிதாவது, நிறம் மாறுப்படுவது, அரிப்பது போன்று இருந்தால் சரும மருத்துவ நிபுணரிடம் உடனே பரி சோதனை செய்துக் கொள்ளுங்கள். இது சருமத்தில் ஏதேனும் அபாயத்தை உண்டாக்கலாம்.

* மாதவிடாய் நாட்களில் இதுபோன்ற வலி மிகவும் சாதார ணம். ஆனால், கருப்பையில் கட்டி உண்டாகியிருந்தால் கூட இந்த வலி அதிகரிக்கும். உடலின் உள்ளேயே இரத்தம் கசிதல் உண் டாகும். இதனால் காய்ச்சல், உடல் சோர்வு போன்றவை அறிகுறிக ளாக வெளிப்படலாம்.

* சிலருக்கு பெண்ணுறுப்பு பகுதியில் அவ்வப்போது வெள்ளைப்படிதல் உண்டாகும், அது துர்நாற்றத்தை வெளிப்படுத்தும். இது சாதாரணமாக பெண்கள் மத்தியில் வெளிப்படும் ஒன்றுதான். ஒரு வேளை இது மஞ்சள்– பச்சை நிறத்தில் பெண்ணுறு ப்பு பகுதியில் எரிச்சல்/ வலியுடன் வெளிப்படுகிற து எனில் அது இன்பெக்ஷன் அல்லது பால்வினை நோய். கர்ப்பப்பைவாய் புற்றுநோயின் அறிகுறியா க கூட இருக்கலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

இந்த வரியின் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: