Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதலில் விழாதவர்கள், காதலை பிடிக்காதவர்கள் இந்த பதிவை படிக்காதீங்க ப்ளீஸ்!

காதலில் விழாதவர்கள், காதலை பிடிக்காதவர்கள் இந்த பதிவை படிக்காதீங்க ப்ளீஸ்!

காதலில் விழாதவர்கள், காதலை பிடிக்காதவர்கள் இந்த பதிவை படிக்காதீங்க ப்ளீஸ்!

காதல் என்ற வார்த்தை, ஒரு உணர்வு பூர்வமான வார்த்தை. அதைச் சொல்லும்போதே

உள்ள‍த்தில் ஆயிரம் ஆயிரம் வண்ண‍த்துப் பூச்சிகள் பறப்பது போன்றதோர் உணர்வு ஏற்படும்.

சிலருக்கு வாழ்க்கை புயல் போல போய்க் கொண்டி ருக்கும்.. சிலருக்கு அலையே இல்லாத கடல் போல அமைதியாக இருக்கும்.. ஆனால் இந்த இரண்டையு ம் புரட்டிப் போடும் சுனாமி போலத்தான் காதலும்..

சுனாமிபோல வந்தாலும்கூட தாலாட்டுவதில் தென்றலாக உணர வைக்கும் ஸ்பெஷல்உணர்வுதான் இக்காதல். ஆனால் பலருக் கு காதல் போகப்போக நோய்போல மாறிவிடும். அதை த்தீர்க்க எந்த மருந்தையும் இன்று வரை யாருமே கண்டு பிடிக்காது இன்னொரு துயரம்.

தற்போது காதல்செய்து சந்தோஷமாக இருப்பவர்களை விட, காதல் தோல்வியில் கஷ்டப்படுபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இதற்கு காதலிக்கும் நபர் நம்மை உண்மை யாக காதலிக்கிறாரா என தெரியாமல், கண்மூடித் தனமாக காதலில் விழுவது, காதலித்த பின்னர் அதை மறக்க முடியாமல் தவிப்பது… ஆகியவற் றை முக்கியக் காரணமாக சொல்லலாம்.

பலருக்கு காதல் ஒரு தவம்போல. பலருக்கு அதுதான் வாழ்க்கையே. ஆனால் இன்னும் பலருக்கு பொழுதுபோக்குபோல விளையாடுவது யாராக இருந்தாலும் வினையை அறுப்பது அந்த பாவப்பட்ட மனங்கள்தா ன்..

மரம் விட்டு மரம் தாவும் குரங்கு போல மனம் விட்டு மனம் பாயும் காதல் பலரை படுகாயப்ப டுத்தியுள்ளது. மனதை கட்டிப்போடும் லாவகம் தெரியாததால் வரும்வினை இது. மனதைதெளி வாகவும், கட்டுப்பாட்டுடனும் வைத்துக்கொண்டு, பின் காதல் செய்துவந்தால், நிச்சயம் அந்த காதல் தோல்வி அடையாது. அதைவிட முக்கியமானது எடுத்தமுடிவில் உறுதி. நீதான் என் இறுதி என எவன் அல்லது எவள் கூறுகிறாரோ அந்தக் காதல் நிச்சயம் ஜெயிக்கும்….

நீங்கள்யாரையேனும் காதலிக்கிறீர்களா? உங்கள் காதலன்/காதலி உங் களை உண்மையாக காதலிக்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமா? அப்ப டியெனில் முதல்ல உங்கள் துணையிடம் இந்த அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க… அப்புறம் காதலை தொடருங்க…

1) உண்மையான காதலின் முதல் அறிகுறி, நம்மை உயிருக்கு உயிராக காதலித்த காதலன்/காதலியின் சந்தோஷத்திற்காக எதையும் தியாகம்செய்வது. அத்துடன் எந்த ஒரு சூழ் நிலையிலும் உங்களை விட்டுக் கொடுக்காமல் இருப் பார்கள்.

2) காதலை வெளிப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடு ப்பது. அதாவது நீங்கள் காதலில் விழுந்த பின்னரும், உங்கள் காதலன்/காதலி உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முய ல்வதோடு, ஒவ்வொரு நாளும் உங்களை அவரது ஸ்பெ ஷலாக உணர வைத்தால், அதுவும் உண் மைக் காதலே!

3) உண்மையிலேயே காதல் இருந்தால், உங்கள் காதலன் /காதலியால் நீங்கள் கஷ்டப்படுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதற்காக நீங்கள் எவ்வளவு தான் அவர் களை கஷ்டப்படுத்தினாலும், அவர்கள் பதிலுக்கு உங்க ளை சந்தோஷமாக வைத்துக் கொள்வார்கள்.

4)உங்கள் காதலன்/காதலி உங்களுக்கு சத்தியம் ஏதேனு ம் செய்து கொடுத்து, எந்த ஒரு காலத்திலும் அதை மீறாம ல் இருந்தால், அவர்கள் உங்கள்மீது உயிரையே வைத்து ள்ளார்கள் என்று அர்த்தம்.

5) உண்மையான காதலுக்கான அறிகுறிகளில் ஒன்று, கஷ்ட காலத்தில் உங்களை விட்டு நீங்காமல், தோள் கொடுத்து ஆறுதல் அளிப்பதோடு, அந்த கஷ்டத்தில் இருந்து உங்களை மீட்க முயற்சிப்பார்க ள்.

6)உண்மையானகாதலில் ஒன்று நீங்கள்பெருமைப் படும்படி நடப்பார்கள். அதாவது, அவர்களை நீங்கள் காதலித்ததற்கு நீங்கள் பெருமைப்படுவீர்கள். அந்த அளவில் அவர்கள் உங்களிடம் மரியாதையாகவும், உங்கள் மனதை புரிந்தும் நடந்து கொள்வார்கள்.

7) உங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நிறைய கஷ்டத்தை தாங்கிக் கொள்வார்கள். இந்த மாதிரியான செயலை தற்போதைய காதலர்களிடம் காண்பது மிகவும் கடினம். ஆனால் உங்கள் காதலன் /காதலி இந்த செயலைப் புரிந்தால், அவர்களை வாழ்க்கையில் இழந்துவிடாதீர்.

8) உங்கள் காதலன்/காதலி உங்களுக்கு பலவற்றை செய்தும் உங்களிடம் எந்தஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்கள் காதலை மட்டுமே மனதில்கொண்டு பழகிவந்தால் அக் காதலை மிஸ் பண்ணாதீங்க. ஏனெனில் இன் றைய காலத்தில் பலர் எதிர்பார்ப்புக்களுடனேயே பழகுகிறார்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் பழகுபவ ர்கள் மிகவும் குறைவு.

=> சுபத்ரா தங்கதுரை

இதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: