பட்டாணி வேக வைத்த நீரை குளிரவைத்து, தக்காளி சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
பட்டாணி வேக வைத்த நீரை குளிரவைத்து, தக்காளி சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
பெரும்பாலான மக்கள் பச்சை பட்டாணியை ஊட்டச்சத்து நிறைந்த காயாக கருதுவ தில்லை. இது அவர்களது
அறியாமையையே காட்டுகிறது. . எனினும், இந்த பச்சை பட்டாணியில் ப்ஹைடொ நியூடிரிஷியன்ஸ் அதிகம் நிறைந்துள்ளதால் அதன் பலன்கள் ஏராளம்.
அதேபோல் தக்காளியிலும் இல்லாத சத்துக்களே இல்லை. இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டா சியம் மற்றும் புரதச்சத்து நிரம்பியிருக்கிறது.
இந்த பட்டாணியை சிறிய அளவில் உள்ள அகன்ற பாத்திரத்தில் கொஞ்சம் பட்டாணி போட்டு அதில் ஒரு குவளை தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்இ ந்த பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து நன்றாக வேக வைக்க வேண்டும். பட்டாணி நன்றாக வெந்தபிறகு, ஸ்டவ்வை ஆஃப் செய்து விட்டு அதனை நன்றாக குளிர வைக்க வேண்டும். குளிர்ந்த பிறகு அதில் ஒன்று அல்லது இரண்டு தக்காளியை எடுத்து பிழிய வேண்டும். அதன்பிறகு அந்த பாத்திரத்தில் கரண்டியை விட்டு பட்டாணி நீரும் தக்காளி சாறும் ஒன்றாக கலக்குமாறு நன்றாக கலக்க வேண்டும். கலக்கிய பிறகு
அதனை அப்படியே எடுத்து சாப்பிடலாம். இதபோல் தின மும் சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனத்தில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியமான திடகா த்திர மான ஆரோக்கியத்தை பெறும்
இதனை உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்வது சாலச்சிறந்தது.
.
=>> விவி. சம்பங்கி மாடசாமி