Saturday, October 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

SIP (Systematic Investment Plan) முதலீடும்! வருமான வரி கணக்கீடும்! – ஓரலசல்

SIP (Systematic Investment Plan) முதலீடும்! வருமான வரி கணக்கீடும்! – ஓரலசல்

SIP (Systematic Investment Plan) முதலீடும்! வருமான வரி கணக்கீடும்! – ஓரலசல்

அண்மைக் காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கணிசமாக அதிகரித் து வருகிறது. அதுவும் ஒவ்வொரு

மாதம் முதலீடு செய்யும் எஸ்ஐபி (SIP – Systematic Investment Plan) முறையிலா ன முதலீடு உயர்ந்துள்ளது.

இந்த எஸ்ஐபி முறை முதலீட்டின் மீதான வருமானவரி விதிப்பானது, ஃபண்ட் வகைகளைப் பொறுத்தும், ஃபண்டுக ளில் செய்துள்ள முதலீட்டை எவ்வளவு காலம் கழித்து விற்பனை செய்கி றோம் என்பதைப் பொறுத்தும் மாறுபடுகிறது.

பொதுவாக மியூச்சுவல்ஃபண்டுகளை பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் (ஈக்விட்டி ஃபண்டுகள்), கடன் சார்ந்த ஃபண்டு கள் (டெட் ஃபண்டுகள்) என இரு வகைகளாகப் பிரிக்கலாம். அதாவது, ஃபண்டின் போர்ட் ஃபோலியோவில் 65%க்கு மேல் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருப்பின், அது பங்குச் சார்ந்த ஃபண் டுகள் என்று சொல்லப்படும். மற்றவை எல்லாம் கடன் சார்ந்த ஃபண்டுகள் என்று கொள்ளலாம்.

இவை இரண்டுக்கும் வருமான வரிக் கணக்கிடும் முறையிலும் மற்றும் வரிவிதிப்பு சதவிகிதத்திலு ம் வேறுபாடு இருக்கிறது என ஏற்கெனவே பார்த் தோம். எனவே, அது குறித்து தெளிவு பெறுவது மிகவும் அவசியம். (பார்க்க வரைபடம்)

முதலீட்டாளர் ஒருவர் இரு வேறு தேதிகளில் பங்குச் சார்ந்த மற்றும் கடன் சார்ந்த ஃபண்டுகளில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்துள்ளார். அவர் வாங்கிய யூனிட்களை விற்கும்போது ஒவ்வொரு முதலீட்டுக்கும் 12 மாதங்கள் (பங்குச் சந்தை) அல்லது 36 மாதங்கள் (கடன் ஃபண்டுகள்) என வைத்திருக்கும் கால இடைவெளியை கணக்கில் கொள்ள வேண்டும்.

உதாரணத்துக்கு, ஒருவர் 2016 ஜனவரி 1-ம் தேதி பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் ஒன்றில் ரூ.10,000 முதலீடு செய்கிறார். அவருக்கு 100 யூனிட்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இவர் அதே ஃபண்டில் மீண்டும் 10,000 ரூபாயை 2016 ஜூன் 1-ம் தேதி முத லீடு செய்கிறார். சந்தை ஏறிக் காணப்பட் டதால், அவருக்கு 80 யூனிட்கள் ஒதுக்கப் படுகிறது. இதன் மூலம் அவர் கணக்கில் மொத்தம் 180 யூனிட்கள் சேர்கிறது.

இவர் சுமார் ஓராண்டுகழித்து ஜனவரி5, 2017ல் 150யூனிட்களை விற்கிறார் என வைத்துக்கொள்வோம்.  இதில்அவர் ஓரா ண்டுக்கு முதலீடு செய்த 100 யூனிட்கள், முதல் 100 யூனிட்களாகக் கணக்கிடப்படு ம். அது நீண்ட கால முதலீடாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு லாபத்துக்குவரி எதுவும் விதிக்கப் படாது.

மீதமுள்ள 50 யூனிட்கள் ஜூன் 1, 2016-ல் செய்த முதலீ ட்டின் மூலமான 80 யூனிட்களின் ஒரு பகுதி எனக் கருதப்படும். அது குறுகிய கால முதலீடாகக் கணக்கில் எடுத்துக் கொள்ள ப்பட்டு வரி (15%) விதிக்கப்படும்.

இதேபோல்தான் கடன் ஃபண்டுகளில் செய்யப்படும் SIP முதலீட்டுக்கும் வரி விதிக்கப்படும். இங்கு நீண்ட கால முதலீடு என்பது மூன்று ஆண்டுகள் ஆகும்.

இப்படி வகைப்படுத்தப்பட்டபின் அதற்கான வரியைக் கணக்கிட்டு செலு த்தவேண்டும்.

சற்று புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால், முதலீ ட்டில் கூடுதல் லாபம் பார்க்கமுடியும். உதாரணமாக, நீங்கள் பங்குச் சந் தைசார்ந்த ஃபண்ட் ஒன்றில் முதலீடுசெய்திருக்கிறீர்கள். பிற்பாடு பங்கை விற்கப்போகிறீர்கள். அப்போது முதலீடு செய்து 362 நாட்கள் முடிந்துள்ளன. நீங்கள் இன்னும் 3 நாட்கள் கழித்து விற்றால் வருமானத்தில் 15% வரி கட்டுவதைத் தவிர்க்க முடியும்.

வருமானத்தை எந்தளவுக்கு முக்கியமாக நினைக்கிறீர்களோ, அந்தளவு க்கு வருமான வரியை மிச்சப்படுத்துவது என்பதும் முக்கியம்.

நீங்கள் வரி கட்டுவதை புத்திசாலித்தனமாக மிச்சப்ப டுத்தும் பட்சத்தில்,  உங்கள் முதலீட்டுக்கான வருமா னம் கூடுதலாக கைக்கு கிடைக்கும் என்பதை சொல்ல த் தேவையில்லையே!

===> ஸ்ரீராம் ரெட்டி, விகடன்

இதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply