பாலிலும் இளநீரிலும் ஊறவைத்த வெந்தயத்தை பொடித்து கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .
பாலிலும் இளநீரிலும் ஊறவைத்த வெந்தயத்தை பொடித்து கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .
நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்
சத்து, சோடியம்சத்து, பொட்டாசியம் போன்ற தாதுப்பொருட் களைக் கொண்டுள்ளதோடு, தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகள் வெந்தயத்தில் நிறைந்து காணப்படுகின்றன• ஆகவே இந்த வெந்தயம் என்ற மருத்துவ பொருள், நமது சமையலறையி லேயே மிகவும் எளிதாக கிடைக்கக் கூடியது இருப்பது நமக் கெல்லாம் வரம்தான்.
வெந்தயம் 200 கிராம் அளவு எடுத்துக் கொண்டு, ஒரு குவளை பாலில் நன்றாக ஊற வைத்து, பின் அதனை எடுத்து வடிகட்டி வெந்தயத்தை எடுத்துக்கொள்ளவேண்டும். அதன்பின் அந்த பாலில் ஊறிய வெந்தயத்தை எடுத்து இளநீரில் நன்றாக ஊற வைக்க வேண்டும். சிறிது நேரம் கழிந்து பாலிலும் இளநீரிலும் ஊறிய அந்த வெந்தயத்தை எடு த்து நிழலில் இட்டு, உலர்த்தி நன்றாக பொடியாக பொடித்து
அத்துடன், கற் கண்டை சேர்த்து, காலை உணவுக்குப்பின் ஒரு கர ண்டி சாப்பிடவேண்டும். சாப்பிட்டவுடன் வெந்நீரோ அல்லது பாலோ அவசியம் குடிக்க வேண்டும். இதே போல் தொடர்ந்து 40 நாட்கள் குடித்துவர உங்கள் உடலில் பலம் கூடும். நல்லாரோக்கியம் பெருகும் என்கிறது சித்தமருத்துவம். இதனை உட் கொள்ளும் முன்பு ஒருமுறை தகுந்த மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளுங்கள்.
= விவி விஜயா