குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பவர்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது எப்படி?- சட்டப்பதிவு
குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பவர்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது எப்படி?- சட்டப்பதிவு
குழந்தைகளை பிச்சைஎடுக்க யாராவது வற்புறுத்தினாலோ அல்லது பிச்சை எடுக்கவைத்தாலோ, அந்த
காட்சியை அப்படியே உங்கள் மொபைலில் அதனைவீடியோ எடுங்கள். மேலும் அந்தவீடியோ எடுக்கப்பட்டநாள் மற்றும் தேதி குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவியுங்கள். அவர்கள் விரைந்து வந்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களை கைதுசெய்து, அக்குழந்தைகளையும் மீட்டு உரியவர்களி டம் ஒப்படைப்பார்கள்
ஒரு வேளை காவல்துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஒரு நல்ல வழக்கறிஞர்மூலமாக நீதிமன்றத்தில் வழக்கு தொ டர்ந்து அந்நபர்கள்மீது கடுமையான தண்டனைகள் பெற்றுத்தரவும், அக்குழந்தைகளை மீட்டு, பாதுகாப் பாக பராமரித்து வரவும் நீதிமன்றமே சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடும்.
குழந்தைகளைப் பிச்சை எடுக்கப் பலவந்தப்படுத்துவது அல்லது பழக்கப் படுத்துவது ஆகியவை கீழ்க்காணும் சட்டங்களை மீறுவதாகக் கருதப்படும். குழந்தையைப் பிச்சை யெடுக்கவைப்பது அல்லது அதற்காகப் பயன்படு த்துவது ஆகியவை தண்டனைக்குரிய கடுமையா ன குற்றங்களாகக கருதப்படும் (சிறுவர்-சிறுமியர் களுக்கான சட்டபிரிவு-24-ஆண்டு2000). வன்கொ டுமைக்கும் சித்திரவதைக்கும் உள்ளாகி, அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பிச்சை எடுப்பது போன்ற சட்டத்தி
ற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் பரா மரிப்புக்கும், பாதுகாப்புக்கும் உரியவர்கள் என்று சிறுவர்-சிறுமியர்களுக்கான சட்டம்கூறுகிறது. மைனர் வயதுடைய குழந்தைகளைக் கடத்துவது, அங்கங்களை ஊனப்படுத்தி பிச்சை எடுக்க வைப்பது ஆகியவை ஐபிசி பிரிவு 363யின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
=> விகாஸ்