Sunday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் கையாண்ட ரகசிய உத்திகள்- சுவாரஸ்யத் தகவல்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் கையாண்ட (ரகசிய) உத்திகள்!சுவாரஸ்யத் தகவல்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் கையாண்ட (ரகசிய) உத்திகள்!  – சுவாரஸ்யத் தகவல்கள்

உலகின் சக்தி வாய்ந்த வல்ல‍ரசு நாடான‌ அமெரிக்காவின் 45 ஆவது அதிபராகப் பதவியேற்கவுள்ள

டொனால்ட் ட்ரம்ப் கடந்து வந்த பாதையும் அவர் தேர்தலில் வெற்றி பெற கையாண்ட ரகசிய உத்திகளும் பற்றிய சில முக்கிய தகவல்கள்.

* டொனால்டு ட்ரம்ப் உலகின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் முதலாளிகளில் ஒருவராக அறியப் படுபவர்.

* நியூயோர்க் நகரின் குயின்ஸ் பகுதியில் ரியல்எஸ்டேட் தொழில் செய்து பெரும் பணக்காரர் ஆனவர் ட்ரம்பின் தந்தை.

* ட்ரம்ப் அமெரிக்காவின் புகழ்பெற்ற வார்டன் பள்ளியில் பயின்றவர்.

* குடும்பத் தொழிலையே டிரம்ப்பும் செய்தார். எம்பயர் ஸ்டேட் கட்டிடம் உட்பட பல நியூ யோர்க் கட்டிடங்களையும் உணவகங்களை யும் சில ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கியவர்.

*அமெரிக்காவின் பெரும்புள்ளியான ட்ரம்ப், கடன்கள்பெருகி எல்லாவற்றையும் இழக்கு ம் நிலைமைக்கும் முகங்கொடுத்தவர். எனி னும், தனது தொழில் திறமையால் எல்லா வற்றிலிருந்தும் மீண்டு உலகின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் முதலாளிகளில் ஒருவராக அறியப்பட்டார்.

* இசை, பொழுதுபோக்கு, விளையாட்டு என பல துறைகளில் ஆர்வம் மிக்கவர் டொனால்டு ட்ரம்ப்.

* அதிபர் பதவிக்கு இதுவரை போட்டியிட்ட எல்லோரையும்விடப் பெரும்பணக்காரரு ம் ட்ரம்ப் தான்.

* பல ஆண்டுகளாகவே அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்புகளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார் ட்ரம்ப். ராஸ்பெரோ என்பவர் தொடங்கிய ‘சீர்திருத்தக் கட்சி’ என்னும் அனாமதேயக் கட்சியில் 1999 இல் சேர்ந்து போட்டியிட முயற்சி செய்தார்.

* 2000 இல் திரும்பக் குடியரசுக் கட்சிக்கு வந்தார். 2012 இல் ஒபாமா அமெரிக்கக் குடிமகனே இல்லை என்று ஒரு பிரச்சினையைக் கிளப்பிக் கவனத்தை த் தன் மீது திருப்ப முயற்சி செய்தார். இதன் மூலம் அமெரிக்க மக்களின் கவனத்தை தன் மீது விழச் செய்தார்.

* அவர் குடியரசுக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கி யக் காரணம், அவர் அமெரிக்காவின் கவனத்தை அமெரிக்கா மீது திருப்பியதால் என்று சொல்லலாம் குறிப் பாக, வெள்ளை அமெரிக்காவின் கவனத்தை. வெள்ளை இனப் பணக்காரர்களும் பணக்காரர் களாக ஆவோம் என்று கனவு காண்பவர்களும் சொல்ல விரும்பியதை, ஆனால் சொல்ல த் தயங்கியதை அவர் மிகத் தெளிவாக, உரத்த குரலில் சொன்னார். இது வே டொனல்டு ட்ரம்பின் வெற்றிக்கு வழி வகுந்துள்ளது.

அமெரிக்க அதிமர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் கையாண்ட உத்திகள்

*ட்ரம்பின் தேர்தல் பயணங்கள் முழுவதிலும் அமெரிக்காவில் அமெரிக்கர்கள் தங்களது உரிமையைப்பெற வேண்டும் என்பதையே தொடர்ந்து தனது வாக்காளர்களிடம் வலியுறுத்தி வந்தார்.

* சட்டங்களின் ஓட்டைகளை அடைத்து, வரிகளை க் குறைக்க வேண்டும் என்றார். இதன் மூலம் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் அமெரிக்கர்களிடம் நம்பிக்கைஅளித்தார்.

* இரண்டாவதாக அமெரிக்காவுக்கு மக்கள் குடியேறுவதைத் தடுக்க வே ண்டும்; குறிப்பாக இஸ்லாமியரையும் ஹிஸ்பானிக்குகளையும் வரவிடக்கூடாது . மெக்ஸிக்கோ நாட்டிலிருந்து ஆட்கள் நுழைவதைத் தடுக்கச் சுவர் எழுப்ப வேண் டும். மூன்றாவதாக, இஸ்லாமியப் பயங்க ரவாதத்தை அடியோடு ஒழிக்க எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து சர்ச்சை மிக்க கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

* ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத் தைக் கைவிட வேண்டும்; ரஷ்யாவுடன் நட்புக் கொள்ள வேண்டும் என யாரும் எதிர்பார் க்காத கருத்துக்களைத் தொடர்ந்து தனது தேர்தல் பிரசார ங்களில் ட்ரம்ப் கூறி வந்தார்.

*ஊழல் விவகாரம் தொடர்பாக ஹிலரியின் நீக்கப் பட்ட இ-மெயில் குறித்து தொடர்ந்து தனது தேர்தல் களங்களில் குரல் எழு ப்பி வந்தார்.

* டொனால்டு ட்ரம்ப் வருமான வரி கணக்குகளை வெளியிடாமல் தொடர் ந்து மறைத்து வருவதாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி தேர்தல் பிரசார மேடைகளில் கேள்வி எழுப்பி வந்தார்.

* அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிய நாட்களி ல் ட்ரம்ப்பின் மீது வரிசையாகத் தொடர்ந்து பெண்கள் பலர் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தொடுத்தனர். இக்குற்றச்சாட்டையே ஜனநாயகக் கட்சி தங்களுக்குக் கிடைத்த பெரும் ஆயுதமாக க் கொண்டு தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தது. இதுவே ட்ரம்ப் – ஹிலரி பங்கேற்ற விவாதங்களிலும் எதிரொலித்தது.

* பெரும்பாலான அனைத்து கருத்துக் கணிப்பு களும் ட்ரம்ப் வெற்றி பெறுவது கடினம் என்று கூறிய நிலையில், அனைத்து கருத்துக் கணிப் புகளையும் பொய்யாக்கி அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக ஜனவரியில் பதவி ஏற்க இரு க்கிறார் டொனால்டு ட்ரம்ப்.

நஸிமுத்தீன், vidhai2virutcham@gmail.com என்ற‌ மின்ன‍ஞ்சலுக்கு அனுப்பிய பதிவு

இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: