ஊர் வம்பு ஊடகங்கள் – (ஊடகங்களின் உளறல்களை உள்ளதை உள்ளபடியே சொல்லுது)
ஊர் வம்பு ஊடகங்கள் – (ஊடகங்களின் உளறல்களை உள்ளதை உள்ளபடியே சொல்லுது)
(இந்த (நவம்பர், 2016) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள தலையங்கம்)
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற பெருமைக்குரியவை பத்திரிகைகள். வாள்முனையைக் காட்டிலும்
பலமானது பேனா முனை என்ற வரலாற்று ப்பெருமையும் பத்திரிகைகளுக்கு உண்டு. அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறை யாக ஒரு பத்திரிகையின் முயற்சியால் வாட்டர் கேட் விழாவில் தனது அதிபர் பதவியையே துறந்தவர் நிக்சன்
இந்திராகாந்தி, நெருக்கடி நிலை அறிமுகப்படுத்தியபோது அதை எதிர்த்து நின்று குரல் கொடுத்து, அவரயே நீதியின் முன் நிறுத்திய பத்திரிகைகளின் வரலாற்றை மறக்க முடியு மா? செல்வாக்கு மிக்க முதல்வர் எம்.ஜி. ஆரையே மிரளச் செய்த விகடனின் துணிவு இன்று எவருக்கேணும் வருமா?
பொழுதுபோக்கிற்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகையுல கம், காலப்போக்கில் சமுதாயத்தை பழுதுபார்க்கும் பொ றுப்புணர்வு போக்கிற்கு மாறியது பாராட்டுக்குரியது தான் . ஆனால். . .
இத்தனைப் பெருமைகள் மிகுந்த பத்திரிகை ஊடகம் தொழில்நுட்பத்தின் தவிர்க்க முடியாத வளர்ச்சியால் பெருகிப்போன காட்சி ஊடகங்களும்.. அதுக்கும்மேலே… என்ற ஐ விக்கிரமின் வசனம்போல் விஸ்வரூப விபரீதமாய் வளர்ந்துவரும் விரல்முனையில் விரியும் சமூக வலைதளங்களும் இன்று என்னசெய்கின்ற ன•?
வியாபார வெறியுடன் போட்டி பொறாமையுடன் தங்களை முன்னிறுத்திக் கொள்ள இந்த எழுத்து மற்றும் காட்சி ஊடகங்கள் அடிக்கும் கூத்துக்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை விட மோச மானவை. தமிழக முதல்வரின் உடல்நலம் குறித்து நினைத்துப்பார்க்க, காட்சிப்பொருளாக்கின கமல்கௌதமி விவாகரத்
தை கூறுபோட்டு இவர்களாகவே ஊதி பெரிதாக்கி குளிர்காய்கின்றன• உச்சக் கட்டமாக நம்நாட்டு ராணுவ நடவடிக்கையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன• தனது டி.ஆர்.பி. ரேட்டிங் கை உயர்த்திக் கொண்டு உலகெங்கும் தன்னைப் பற்றி பேசுவதற்காக …
இன்னும்சில வலைதளங்கள் தங்களுக்கு பிடிக் காத நபர்களை பழி வாங்க, தலையை மாற்றி, உடலை மாற்றி மிரட்டுகின்றன• விமர்ச னங்கள் என்ற பெயரில் படைப்புத்திறனை வெறி பிடித்த நாயாய் குதறி தள்ளுகின்றன. ஆபாசம், அருவரு ப்பு, போலி மருத்துவம், போலி விளம்பரம், சூதா ட்டம் என மாயவலையில் இன்றைய மனித உல கம் வேகமாய் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கிறது. மீள முடியுமா? மீட்க முடியா?
வளர்ச்சியையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த விரும்பும் வளரும் நா டுகளில் எல்லாம் பலவலைதளங்கள், இணையதளங்கள் தடை செய்யப்பட்டிருக்கும்போது… கலாச்சாரம், பண்பா டு, பாரம்பரியம் மிக்க என்று வாய்க்கிழிய வக்கனையாய் நம் பாரததேசத்தில் தடைசெய்ய முடியாதா? முயன்றால் முடியும் விளம்பர வெளிச்சத்துக்காக அலையும் அரசியல்
கலாச்சாரத்தை வேரோடு ஒழித்தால்தான் முடியும்.
முடியாது என்பது கிடையாது… முயன்றால் வெற்றிக்கு தடை யேது என்ற உரத்த சிந்தனையுடன் ஊர்வம்பு ஊடகங்களை ஓரங்கட்டுவோம், சுய ஒழுக்கத்துடன் சுய கட்டுப்பாட்டுடன் வாழக் கற்போம்.
/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்
திரு.உதயம் ராம் : 94440 11105
/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
நம் உரத்த சிந்தனை மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த…
இந்தியாவிலுள்ள எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்தலாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்கண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்தலாம்.
வெளியூரில் உள்ளவர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த வேண்டும்
பெயர் – நம் உரத்த சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
கணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க வேண்டுகிறோம்.
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///\///\//\///\//\|
கீழே உள்ள படத்தை கிளிக் செய்யுங்கள்