எஸ்.வி. சேகர் மறுப்பு: மணல் கயிறு-2க்கு தணிக்கை சான்றிதழ் குறித்து வெளியான செய்திக்கு …
எஸ்.வி. சேகர் மறுப்பு: மணல் கயிறு-2க்கு தணிக்கை சான்றிதழ் குறித்து வெளியான செய்திக்கு …
“கபாலிக்கு எப்படி U கொடுத்தீர்கள் – தணிக்கை அதிகாரியிடம் எஸ்.வி. சேகர் கேள்வி” என்ற
தலைப்பில் தி ஹிந்து தமிழ் நாளிதழில் வெளியான இந்த செய்தியை, கபாலி படத்துக்கு ‘U’ சான்று எப்படி கொடுத்தீர்?- தணிக்கை அதிகாரியிடம் எஸ்.வி.சேகர் காட்டம், என்ற தலைப்பில் செய்தியை நமது vidhai2virutcham.com இணையத்தில் பகிரப்பட்டது.
ஆனால் இந்த செய்தியை மறுத்து, திரு. எஸ்.வி.சேகர் அவர்கள் எனது வாட்ஸ் அப்பில் எண்ணிற்கு, (மறுப்பு) செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார்.
இதோ அவர் எனக்கு அனுப்பிய வாட்ஸ் அப் செய்தி
We got the U clean CC on 30/9/2016. யாரோ தவறுதலாக UA கொடுக்கப்பட்டது போலவும், நான் போர்டு மெம்பர் அதிகாரத்தில் சண்டையிட்டு வாங்கிய தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. நான் இந்த (மணல் கயிறு-2) படத்தின் நிர்வாக தயாரிப்பாளர். சென்சாரில் கலந்து கொள்ள முழு தகுதி படைத்தவன். நான் எடுத்த படத்திற்கு எது நியாயமான சான்றிதழோ அதுதான் வந்துள்ளது.
என்பதே!
=====
இந்த எதிர்பாராத இந்த தவறுக்கு விதை2விருட்சம் இணையம் மன்னிப்பு கோருகிறது. இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாத வண்ணம் கவனமுடன் இருப்போம் என்று இதன்மூலம் உறுதியளிக்கி றோம்.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி