Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்ப‍டி? தினமணி நாளிதழ் வெளியிட்ட‍ தந்திரங்கள்

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்ப‍டி? தினமணி நாளிதழ் வெளியிட்ட‍ தந்திரங்கள்

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்ப‍டி? தினமணி நாளிதழ் வெளியிட்ட‍ தந்திரங்கள்

க‌டந்த 8ஆம் தேதி அன்றிரவு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவி ப்பினால் ஏராளமான

கருப்புப் பணத்தை பதுக்கியவர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். பழைய ரூபாய் நோட்டு கள் செல்லாது என்ற அறிவிப்பினால் உடனடியாகவும் நேரடி யாகவும் பாதிக்கப்பட்டது என்னவோ சாமானிய ஏழை, எளிய மக்கள்தான். அவர்கள்தான் தற்போது வங்கியிலும், ஏடிஎம் வாயிலிலும் சொர்க வாசல் திறப்புக்கு காத்திருப்பது போல வங்கி திறப்பதற்கு முன்பே வரிசையில் நின்று கொண்டிரு க்கிறார்கள். கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் ‘தந்திரங்கள்’: நாங்க சொல்லலை; நடப்பதை சொல்கிறோம்!

வழக்கம்போல, கருப்புப் பணத்தை பதுக்கியவர்கள் தங்களது பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் வழியை கண்டறிந்துவிட்டார்கள். செயல்படுத்தவும் செய்தாகிவிட்டது.

அதாவது,

1. அடிக்கடி கடன் வாங்குபவர்களுக்கு சில தண்டல்காரர்கள் வட்டியில்லாமல் கடன் வழங்குகின்றனர்.

2. தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே மாத ஊதியத்தை சில நிறுவனங்கள் வழங்குகின்றன.

3. டாஸ்மாக் ஊழியர்களுடன் ரகசிய கூட்டு வைத்து சில பேருந்து நடத்துநர்கள் சில்லறை வழங்கி வருகின்றனர்.

4. சிறிய அளவில் தங்க வியாபாரத்தில் ஈடுபடுபவர்களிடமிருந்து தங்கம் வாங்குவதில் மக்கள் ஆர்வம்.

5. மொத்தமாக பலருக்கு ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்துவிட்டு பின்னர் ரத்து செய்வது.

6. சில தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களிட மும், தொழிற்சாலைகள் ஊழி யர்களிடமும் பழைய ரூபாய் நோட்டுகளை அளித்து அவற்றை வங்கிகளில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுத் தருமாறு வலியுறுத்துகின்றன.

7. வீட்டு வேலையில் ஈடுபடுபவர்கள், விடுதியில் இருப்பவர்களின் வங்கி கணக்கிலும் சிலர் பணம் போட்டு வருகின்றனர்.

8. தங்களுக்குத் தெரிந்தவர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் சிறு சிறு தொகையாக டெபாசிட் செய்யப்படுகிறது.

9. கோயில் உண்டியல் பணத்தின் மூலமாக சிலர் தங்களது கருப்புப் பணத்தை 20% கமிஷ னுடன் வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்கி றார்கள். சில கோயில் நிர்வாகங்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கு கின்றன.

10. சிலர் தங்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை தெரிந்தவர்களுக்கு கடனாக வழங்கி வருகின்றனர்.

11. ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மூலமாக பண த்தை வங்கியில் செலுத்தி அதனை பிறகு சிறு கமிஷன் தொகை யை செலுத்தி பணத்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

12. பணத்தை மாற்றும் மிகப்பெரிய குழுக்கள் திடீரென முளைத்து ள்ளன. இவர்கள் 15% முதல் 80% வரை கமிஷன் பெற்றுக் கொண்டு பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகளை கொடுக்கின்றனர்.

13. கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் விவசாயிகளை நாடி, அவர்கள் மூலமாக வெள்ளைப் பணமாக மாற்றுகி றார்கள். விவசாயிகள் தங்கள் விளை பொருட்கள் மூல மாகக் கிடைத்த பணம் என்று சொல்லி வங்கியில் டெபாசிட் செய்தால் அதற்கு வரி விலக்கு என்பது கூடுதல் விஷயம்.

14. அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கு மூலமாகவும் ஏராளமான கருப்புப் பணம் வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டு வருகிறது.

15. ஒரு சிலர் உரிய வரித் தொகையை செலுத்தி தங்களது வங்கிக் கணக்கிலேயே பணத்தை செலுத்தி கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்கிறார்கள்.

16. சில நிறுவனங்கள், தங்களது ஊழியர்களின் வங்கிக் கணக்கு மற்றும் அடையாள அட்டை மூலமாகவும் கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்க முயற்சிக்கிறார்கள்.

17. ஏற்கனவே 4000 ரூபாய்க்கு புதிய நோட்டுகளை மாற்றிக் கொடுக்க பொதுமக்களுக்கு ரூ.300 கமிஷன் அளிக்கப்பட்டது தொடர்பான செய்திகள் வெளி யாகியுள்ளன.

18. மிகப்பெரிய நிறுவனங்கள் தங்களது கான்டிராக்டர்களுக்கு முன்பண மாக மிகப்பெரிய தொகையை கொடுத்து விடுகின்றன.

19. சில கட்டுமான நிறுவனங்கள் தாங்கள் வாங்கவிருக்கும் பொருட்களு க்கு முன்பணம் செலுத்திவிடுகின்றன.

20. மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் மூலமாகவும் கருப்புப் பணம் வெள்ளைப் பணமாக மாற்றப்படுகிறது.

கோடிக்கணக்கான கருப்புப் பணத்தை மாற்ற வழி இருக்கிறது. ஆனால், சாமானிய, ஏழை, எளிய மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாங்கிய 2000 ரூபாய் நோட்டை மாற்றி சில்லறை வாங்கத்தான் வழியில்லை.

கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ‘தந்திரங்கள்’: நாங்க சொல்லலை நடந்ததை  சொன்னோம்!

==> தினமணி

 

இதன் கீழே உள்ள புகைப்படங்களை கிளிக் செய்யவும்

 

One Comment

  • VENKATACHALAM chalam

    dear sir, iam getting foregin lotteries on line , and compenseastion, all of pounds currecies are deposited with reserve bank of india new delhi, they offer cot charges and register charges currency conversation charges all huge amounts are already paid, but our complaints are resolved and rewived by reserve bank of india , but nearly one year ago the did not disbursed our winnings , when we we are lodgining te above complaints quickly actions taken and recover our funds, kindly help me iam poor and poverty old man,,,,,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: