Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் அல்ல‍து அடிக்க‍டி 'இப்படியே' தொடர்ந்து செய்து வந்தால்

தினமும் அல்ல‍து அடிக்க‍டி இப்படியே தொடர்ந்து செய்து வந்தால் . . .

தினமும் அல்ல‍து அடிக்க‍டி இப்படியே  தொடர்ந்து செய்து வந்தால் . . .

அழகு என்ற வார்த்தையை சொல்லும்போதே எத்த‍னை உற்சாகம் மனத் தில் பிறக்கிறது. அதே

அழகு நம்மிடம்இருந்து, அதனை பார்ப்ப‍வர்கள் எல்லோரு ம் ஆராதித்தால் அதனால் விளையும் உற்சாகத்திற்கு அள வே இல்லை. சரி விஷயத்திற்குவருவோம். நமது பாதங்க ளை, நாம் அவ்வ‍ளவாக கவனிப்ப‍தில்லை. இதனால் பாத ங்கள் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றன• அந்த பாதிப்புக்களிலிருந்து எப்ப‍டி நமது பாதங்களை பாதுகாப் ப‍து என்பதை இங்கு பார்ப்போம்.

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்தநீரில் கழுவவேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்துவந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும்.

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில்தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவிவர நாளடைவில் பித்தவெடிப்பு குண மாகும்.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக் கலவையில் பாதங்களை 10நிமிடம் ஊறவைத்து, பிரஷ் கொ ண்டு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரம் 1 முறை செய்து வர, பாதங்களில் உள்ள இறந்த தோல் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையுடன் இருக்கும். குறிப்பாக இச்செய லை செய்த பின்னர், பாதங்கள் உலர்ந்ததும், நல்லெண் ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களுக்கு தடவுங்கள். இல்லாவிட்டால் வறட்சி இன்னும் அதிகமா கும்.

குதிகால் வெடிப்பை விரைவில் நீக்குவதற்கான எளிய வழிகளில் ஒன்று தான் இது. தினமும் இரவில் படுக்கும்முன் வெதுவெதுப் பான சோப்பு நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து கால்களை நீரில் கழுவிய பின் உலர வைக்க வே ண்டும். பின்பு 1 டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் 1 எலுமிச் சையின் சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் மறையச் செய்யலாம்.

தினமும் இரவில் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம், குளிர்ந்த நீரில் 5நிமிடம் என பாதங்களை ஊற வைக்கவேண்டும். இப்ப டி செய்வதன் மூலம் கால்களில் உள்ள சோர்வு நீங்கும். மேலும் 2 டீஸ்பூன் கிளிசரின், 2 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்க ளில் தடவி வர வேண்டும்.

இப்படி தினமும் தொடர்ந்து செய்வதால், பாதங்கள் மென் மையாவதோடு, நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

இதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்

 
 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: