“நான் LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன்!” – நடிகை ஸ்ரீதிவ்யா
“நான் LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன்!” – நடிகை ஸ்ரீதிவ்யா
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவகார்த்திகேயனுடன்ஜோடி சேர்ந் து நடித்து தனது தமிழ்த் திரையுலக
பயணத்தை தொடங்கிய ஸ்ரீதிவ்யா, தொடர்ந்து வெற்றித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ்-ன் வரவால் சற்று படவாய்ப்புககள் குறைந்த போதும் ஓரிரு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இவர் பொதுவாக பல திரை விழாக்கள் மட்டுமின்றி சுப நிகழ்ச்சி களுக்கு முன்பாகவே வராமல், நிகழ்ச்சி தொடங்கிய நேர த்தில் அதாவது தாமதமாக வருவதையே தனது வழக்கமா க கொண்டிருக்கிறார். இவ்வளவு ஏன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தி
ற்கு மிக அருகாமையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தாலும்கூட அவர் இதேபோல் குறித்த நேரத்துக்கு வருவதில்லை. இதனால் நிகழ்ச்சி தாமதமாக தொடங்க வேண்டியிருக்கிறது.மேலும் கைதேர்ந்த ஒரு அரசியல்வா தியைப் போல, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூட்டம் எவ்வளவு இருக்கிறது என்பதை முன்கூட்டியே தனது ஆட்களை அனுப்பி கூட்டத்தை நோட்டம் பார்த்த பிறகே நிகழ்ச்சிக்கு செல்கிறார். இதனை பலரும் சுட்டிக்காட்டி, குறித்த நேரத்திற்கு வருமாறு அறிவுரை வழங்கினாலும் அதை காதில் போட்டுக்கொள்ளாமல், நான் லேட்டா
வந்தா லும் லேட்டஸ்ட்டா வருவேன். என ரஜினியின் பஞ்ச் டயலாக்கை பேசி, சிரிக்கிறாராம் நடிகை ஸ்ரீ திவ்யா
இதனால் இவர்மீது நிகழ்ச்சி அழைப்பாளர்களும் ஏற்பாட்டாளர்களும் கொஞ்சம் கடுப்பில் இருப்பதாக தெரிகிறது.
English Summary
Actress Sridivya says, I am Late but I am Latest, Sridivya introduced in Varuthapadatha Vaalibar Sangam with Sivakarthikeyan, Her presence is always late in any function