பாலில் போட்டு காய்ச்சிய உலர் திராட்சைகளை சாப்பிடும், அந்த பாலை குடித்து வந்தால் . . .
பாலில் போட்டு காய்ச்சிய உலர் திராட்சைகளை சாப்பிடும், அந்த பாலை குடித்து வந்தால் . . .
ஆங்கிலத்தில் `கிஸ்மிஸ் பழம்’ என்று அழைக்கப்படும் உலர் திராட்சை அல்லது காய்ந்த திராட்சையில்
உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு வலிமை தரக் கூடிய வையே! இந்த 50உலர்திராட்சை பழங்களை எடுத்து, பசுப் பாலில் போட்டு, நன்றாக காய்ச்சியபிறகு அந்த பழங்களை யும் சாப்பிட்டு அந்த பாலையும் குடித்துவந்தால், எப்பேற்பட்ட மலச்சிக்கலும் தீர்ந்து மலம் இளகி, வெளியேறும்.
பால் காய்ச்சும்போது அதில் 2 உலர்திராட்சை பழங்களை உடைத்துப்போட்டு காய்ச்சியபின் பாலை வடிகட்டிக் குழந்தைக்கு குடிக்க க் கொடுத்தால், அவர்கள் தேகம் புஷ்டியாவதோடு, திடமான உடலையும் பெறுவர்.
இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சை பழங்களை சுத்தம் செய்து, பசும் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள்செய்து கொஞ்சம் பனங்கற்கண் டு சேர்த்து கலக்கி, தொண்டைக்கட்டு பிரச்சனை இருப்பவர்கள், குடித்தா ல் விரைவில் தொண்டைக்கட்டு பிரச்சனையிலிருந்து விடுபடுவார்கள். உங்கள் மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
இது விதை 2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!