ஏலச்சீட்டு கம்பெனி… பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் என்ன?
ஏலச்சீட்டு கம்பெனி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து
திருவாரூரை சேர்ந்த ஸ்ரீ நாராயணி சிட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. S. கார்த்திகேயன் விளக்கமாக சொல்கிறார்.
^ஏலச்சீட்டில் சேர்ப்பதற்குமுன் உறுப்பினர் பற்றிய முழுவிபரத்தை நேரில் சென்று, கள ஆய்வு செய்ய வே ண்டும். உதாரணத்திற்கு, முகவரி சரியாக உள்ளதா?, அடையாளசான்று சரியாகஉள்ளது? என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.
ஜாமீன் தகுதி இருக்கிறதா..!
^ஏலச்சீட்டில் சேர்பவர், ஏலம் எடுத்த பின்பு கம்பெனி யில் இருந்து ஏலத்தொகை பெறுவதற்கு தக்க ஜாமீன் கொடுப்பதற்கு தகுதி உள்ளவரா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
^ ஏலச்சீட்டில் சேர்பவர், அவரது குடும்பத்தில் அவ ரை சார்ந்து எத்தனை நபர்கள் உள்ளனர். அவரது வருமானம் எவ்வளவு மற்றும் சந்தா தொகையை சரிவர கட்டுவதற்கு தகுதி உள்ளவரா என்பதையும் ஆதாரத்துடன் பார்க்க வேண்டு ம். மற்றும் குடும்பத்தில் வேறு யாராவது ஏலச்சீட்டில் சேர்ந்த விபரங்கள் தெரிந்து இருக்க வேண்டும்.
1982 ஆண்டு சிட் பண்டுகள் சட்டம்..!
^ஒவ்வொரு சந்தாதாரருக்கும் முறைப்படி 1982 ஆம் ஆண்டு சிட்பண்டுகள் சட்டப்படி உள்ள விதியின்படி சீட்டு ஒப்பந்தம் செய்த பின்புதான் ஏலச் சீட்டில் சேர்க்க வேண் டும்.
^ ஏலம் எடுத்த பின்பு, ஏலம் எடுத்த சீட்டு மாதத்திலிருந்து பின்வரும் காலங்களுக்கு உள்ள தவணை தொகையினை கணக்கிட்டு இரு மடங்கு மதிப்புள்ள ஜாமீன் பெற்றுக் கொள்ள வேண்டும்.
^ ஒவ்வொரு சந்தாதாரர்கள்பற்றி முழுவிபரங்களை தெரி ந்தகொண்டு ஏலச் சீட்டில் உறுப்பினராக சேர்த்துகொள்வ து மிகவும் நல்லது.
^ ஒவ்வொரு சந்தாதாரருக்கும், வாரிசுதாரர், நாமின் விப ரம் அடங்கிய குறிப்புகளை முறைப்படி கம்பெனியில் பதிவு செய்வது மிகவும் அவசியம்.
^ ஒவ்வொரு மாதமும் ஏலம் எடுத்தவர் விபரம், ஏலத் தொகை மற்றும் பெற்றுக்கொண்ட ஜாமீன் இவைகளை அந்தந்ததேதிக்கு ள் சீட்டு பதிவு அலுவலகத்தில் காலத்தை கடத்தாமல் தெரிவித்து ஃபைல் செய்வது அவசியம்.
நுழைவுக் கட்டணம்..!
^சந்தாதொகையை சரிவர கட்டாமல்இருக்கும் உறுப்பின ர்களுக்கு கட்டாயம் கசறு தொகை வழங்கக்கூடாது. இதற்கு ஏலம் எடுத் தவர், எடுக்காதவர் என்ற பாகுபாடு கிடையாது.
^ ஒவ்வொரு ஏலச் சீட்டிற்கும் நுழைவுக் கட்டணம் அவசியம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
^அதிக வாக்குறுதிகளைக் கொடுத்து உறுப்பினர்க ளை சேர்ப்பது மிகவும் ஆபத்து.
^ ஒவ்வொரு கிளை துவங்கும் பொழுது சீட்டு பதிவாளரிடன் அனுமதி அவசியம் பெற வேண்டும்.
^உறுப்பினர்கள் பற்றிய முழுவிபரத்தினை சட்டப்படி வாங்கும் போது சீட்டு பதிவாளரிடம் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
^முன் ஒப்பளிப்பு ஆணை வாங்கும் முன் வங்கி ஒன்றில் சீட்டின் மதிப் பிற்கு நிரந்தர வைப்பு சீட்டு குரூப் முடியும் காலம் + ஒரு மாதம் சேர்த்து கணக்கிட்டு நிரந்தர வைப்பு செய்து தக்க ரசீதினை சீட்டுபதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
^ சீட்டு பதிவாளர் அலுவலகம் எந்த வங்கியில் நிரந்தர வைப்பு போட சொல்கிறார்களே அதே வங்கியில்தான் பணம் டெப்பாசிட் போடவேண்டு ம்.
பாதுகாப்பு நடவடிக்கை..!
^ ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை உறுப்பினர்களின் முகவரி மற்றும் அனைத்து விபரங்களை நேரில் சென்று சரி பார்த்தால்தான் சீட்டு நடத்தும் நிறுவனத்திற்கு பாது காப்பு. (சீட்டு குரூப் முடியும் காலம் வரை)
மேற்கண்டவிதிமுறைகளை பின்பற்றினால் எந்த சீட்டு நிறுவனமும் கண்டிப்பாக நலிவடைய வாய்ப்பு ஏற்படா து.
முறையாக திட்டமிடுங்கள்…. வெற்றி பெறுங்கள்..!
சிட்பண்ட்கள், முதலீடு சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு 73737 25555 என் கிற செல் எண்ணுக்கு தயங்காமல் போன் செய்யுங்கள்.
திரு. எஸ்.கார்த்திகேயன்
நிர்வாக இயக்குநர், ஸ்ரீ நாராயணி சிட். (பி) லிட்.
பதிவு மற்றும் நிர்வாக அலுவலகம்:
ஸ்ரீ நாராயணி சிட். (பி) லிட்
4, முத்துவேல் காம்ப்ளக்ஸ் முதல் தளம்,
துர்க்காலயா சாலை, திருவாரூர். போன் 04366 – 244026