Sunday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

க‌டவுளை வழிபடுவதற்காக… பெண் அவதாரம் எடுக்கும் ஆண்கள்! – விநோத அதிசய வழிபாடு

க‌டவுளை வழிபடுவதற்காக… பெண் அவதாரம் எடுக்கும் ஆண்கள்! – விநோத அதிசய வழிபாடு

க‌டவுளை வழிபடுவதற்காக… பெண் அவதாரம் எடுக்கும் ஆண்கள்! – விநோத அதிசய வழிபாடு

க‌டவுளை வழிபடுவதற்காகவே பெண் அவதாரம் எடுக்கும் ஆண்கள்! – விநோத அதிசய

வழிபாடு என்பது கேரளா கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாவரகொட்டம்குளங்கரா கோவிலில் வருடாந்திர சமயவிளக்குத் திருவிழா நிகழ்ந்து கொண்டிருக்கிறது ஆம் ஆண்பக்தர்கள் பெண்க ளைப் போல வேடமிட்டு வழிபடுவது இங்கு ஒரு சடங்காகவே உள்ளது.

இச்சடங்கு பற்றி விளக்கம் கூறுகிறார், கோவில் கமிட்டி தலைவரான ஆர். சந்திரமோகன்…

“ஆண்கள் பெண்கள்போல வேடமிட்டு தீபம் ஏந்தி வருவது, இங்கு எழுந்தருளியுள்ள அன்னைக்கு செய்துகொண்ட நேர்த்திக் கடனை நிறைவேற்ற த்தான். இது நீண்டகால வழக்கம். பல நூறாண்டு களுக்குமுன் இக்கோவில் குளத்தில் குளிப்பதற்கு ச்சில பையன்கள் வந்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் விளையாட்டாக இங்குள்ள பெரிய பாறை யில் கற்களை வீசியெறிய, அதிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்திருக்கிறது. பயந்து போய் பதற்றத்துடன் அவர்கள்கிளம்ப, அவர்கள் முன்பு தோன்றிய அன்னை, `நீங்கள் செய்த தவறுக்கு நிவர்த்தியாக நாளை பெண் வேடமிட்டு வந்து என்னை வழிபடுங்கள்’ எனகூறி மறைந்திருக்கிறார். இந்த வழக்கத்துக்குப் பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன என்ற போதும், நான் கூறியது தான் பெரும் பாலானவர்களால் நம்பப்படுவது” என்கிறார் சந்திரமோகன்.

நமக்கு இது கேள்விப்படாத புதுமை விஷயமாக இருந் தாலும், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டு மின்றி, தொலைதூர மாநிலங்களில் இருந்தும் ஆண் பக்தர்கள் இங்கு பெண் வேடமிட்டு வழிபடுகிறார்கள். “மேற்கு வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் இரு ந்து கூட பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகிறார்கள். ஒரு வேளை இங்கு பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்க ள் இக்கோவிலைப் பற்றிய தகவலைத் தங்கள் ஊரில் பரப்பியிருக்கக் கூடும்” என்று தகவல் கூறுகிறார்

சந்திர மோகன். இத்திருவிழாவின்போது ஒப்பனைக் கலைஞர்களுக்குக் கொண்டாட்டம்தான். கோவிலை யொட்டி வரிசையாக ஒப்பனைக் கடைகள் முளைத்து விடுகின்றன. ஒவ்வொன்றின் முன்பும், பெண்களாக மாறக் காத்திருக்கும் ஆண்களின் நீண்ட வரிசை. ஒப்பனை வேளையில் கலாட்டாக்களுக்கும் குறைவில்லை. ஒரு`பெண்’ ணின் ஜாக்கெட்டில் இருந்து வட்டமான பஞ்சு போ ன்ற `வஸ்து’ உதிர, “ஏம்பா… அதைக் கூட சரியா வைச்சுக்க முடியலையா?” என்கிறார் ஒரு வேடிக் கையாளர்.  “எல்லாம் அந்த மேக்கப்மேனின் அரை வேக்காட்டு வேலை! நான் அவனைக்கொல்ல போறேன்” என கொதிக்கிறார் பெண்ணாகிய அந்த ஆண். ஒப்பனைக்கலைஞர்களுள் ஒருவரான சதீஷன் தமது வித்தை பற்றிக் கூறுகிறார்…

“எங்களிடம் பல்வேறுவகையான சேலைகள் இரு க்கின்றன. ஒரு ஆணை அழகான பெண்ணாக மாற் றுவதற்கு எங்களுக்கு ஒருமணி நேரம் போதும். அவர்களின் முகத்தில் பல்வேறு கிரீம்களை பூசுவோம். உடல்முடியை சுத்தமாக மழிச்சுடுவோம். நெஞ்சில்`பேடு’ வைத்து எடுப்பான முன்னழகை உருவாக்குவோம். எங்களின் கைவண்ணம், மாயா ஜாலம் புரியும். சிலவேளைக ளில், சம்பந்தப்பட்ட ஆணின் குடும்பத்தினருக்கே அவரை அடையாளம் தெரியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!” என்று வியப்பூட்டுகிறார்.

பெண்அவதாரம் எடுக்கும்ஆண்களுக்காக ஒருநாளைக்குமுன் `அளவுகள்’ எடுக்கப்பட்டு விடுகின்றன. அதற்கேற்ப ஆடை , அணிகலன்களை ரெடி செய்கிறார்கள்.

திருச்சூரைசேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவ ரான சுரேஷ் குரூப், கடந்த ஆண்டு பெண்ணாக வேடம் தரித்தவர். அவர், “உடம்பிலிருந்து ரோம த்தை அகற்றுவதுதான் ரொம்ப வேதனையாயிரு க்கும். ஆரம்பத்தில் கொஞ்சம் வித்தியாசமா தோணும். ஆனா எல்லா கஷ்டமும் அன்னை பகவதி க்குத்தானே?” என்கிறார்.

ஆண் பக்தர்களுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ப ஒப்ப னை செய்யப்படுகிறது. “எங்கள் ஒப்பனைக்குப் பிறகு, ஒரு நடுவயது ஆண், நடுவயதுப் பெண்ணாகத்தான் காட்சியளிப்பார். ரொம்ப ஓவராகப் போய்விடாமல் இருப்பதில்தான் உள்ளது விஷயம்” என்று தொழில் நுணுக்கம் கூறுகிறார் சதீஷன். இதென்ன வினோதச் சடங்கு என சிலர் முணுமுணுக்கலாம். ஆனால் சாரா ஜோசப் போன்ற பெண்ணியவாதிகள், பெண்ணாக வடிவெடுப்பதற்கு ஆண்கள் கஷ்டப்படுவதில் பெண்கள் பெருமைப் பட லாம் என்கிறார்கள்.

“இதுபோன்ற ஒருவழக்கம் வேறெங்கும் இருப்பது மாதிரி தெரியவில்லை. இது அசாதாரணமானது” என்கிறார் சாரா. ஆனால் சிலரோ இந்த `மேக்கப் ’ சிலவேளைகளில் எல்லை தாண்டி விடு கிறது என்கிறார்கள்.

“சிலநேரங்களில் இது வக்கிரத்தைத் தொட்டுவிடுகிறது” என்று முகம் சுளிக்கிறார் இல்லத்தரசியான திவ்யா. அவர், இந்தச் சடங்கின் பின்னணியான புராணக்கதையைத் தான் நம்புவதாகவும் கூறுகிறார். தனது குழந்தைப்பருவத்தில், இத்திருவிழாவில் பங்கேற்ற ஆண்கள் இப்போதைவிட ரொம்ப நாகரீகமாக நடந்துகொண்டதாகவும் நினைவு கூர் கிறார். பெண் வடிவம் எடுத்த ஆண்கள், நிஜ பெண்களுடன் `இழைய’ முயல்வதாகவும் இன்னொரு தரப்பு புகார் கூறுகிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளுகிறார் சந்திரமோகன்.

“இங்கே விரும்பத்தகாத சம்பவம் எதுவும் நடப்பதில் லை. வழிபடத்தான் ஆண்கள் இங்கு வருகிறார்கள். அவ ர்கள் பெண்களைப் போலத் தோன்ற நிறைய தியாகங் கள் செய்கிறார்கள். உண்மையில், ஒரு சில மணி நேரத் திற்கு அவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். அவர் களின் நோக்கம் குறித்தெல்லாம் நாங்கள் கேள்வி எழுப்புவதில்லை. ஆண்கள் மிகுந்த பயபக்தியோடுதான் இதில் ஈடுபடு கிறார்கள்” என திடமாகச்சொல்கிறார்.

திருவாங்கூர் தேவசம்போர்டின் நிர்வாகத்தின் கீழ் இக்கோவில் வருகிறது. அதன் தலைவரான ராஜ கோபாலன் நாயரும் சந்திரமோகனின் கருத்துக ளை எதிரொலிக்கிறார். “இத்திருவிழாவில் ஆயிர க்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகிறார்கள். ஆண்டுக்குஆண்டு இது பிரபலம் ஆகிக்கொண்டே போ கிறது. கேரளக்கோவில்கள் அவற்றின் தனித் தன்மை யான சடங்குகளுக்கு பெயர்பெற்றவை” என்கிறார் ராஜ கோபாலன்.

ஒன்றுபுரிகிறது, கேரளாவில் பெண்கள் மட்டுமல்ல, பெண் வேடம் புனையும் ஆண்களும் அழகுதான்!

=> ஆர். சந்திரமோகன்

English Summary:

The famous Chamayavilakku is a unique festival which is held at the Kottankulangara Sree Devi Temple, Chavara near Kollam, Kerala where thousands of men irrespective of their religious faith dressed up as women offered prayers to the Goddess Bhagavathy, the deity of the Temple which is believed as ‘Swayam Bhoo'(Self Origin). This famous temple is the only temple in Kerala having no roof the sanctum sanctorum. The uniqueness of this temple is that the boys and girls dress themselves as girls and ladies to hold the traditional temple lamp.

இந்த வரியின் கீழே உள்ள‍ புகைப்ப‍டத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: