Friday, October 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"எனக்கு யாருமே விரோதிகள் கிடையாது!" – தன்னைப் பற்றி அவதூறு பரப்புவர்களுக்கு S.Ve.சேகரின் பதிலடி

“எனக்கு யாருமே விரோதிகள் கிடையாது!” – தன்னைப் பற்றி அவதூறு பரப்புவர்களுக்கு S.Ve.சேகரின் பதிலடி

எனக்கு யாருமே விரோதிகள் கிடையாது! – தன்னைப் பற்றி அவதூறு பரப்புவர்களுக்கு S.Ve.சேகரின் பதிலடி

இன்று காலையில் விதைவிருட்சம் சத்திய மூர்த்தி ஆகிய எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு திரு. எஸ்.வி. சேகர் அவர்களைப் பற்றிய ஒரு

எதிர் மறையான பதிவினை ஏதோ எண்ணில் இருந்து யாரோ பகிர்ந்திரு ந்தார். அந்த எதிர்மறைச் செய்தியை, அப்ப‍டியே திரு. எஸ்.வி.சேகர் அவர்களின் தனிப்பட்ட‍ வாட்ஸ் அப் எண்ணிற்கு பகிர்ந்தேன். அந்த வாட்ஸ் அப்பில் இருந்த தன்னைப் ப‌ற்றிய எதிர்மறைச் செய்திக்கு பதிலடி தரும் விதமாக, ஆடியோவாக பதிவு செய்து எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பினார். அவர் அனுப்பிய அந்த பதிலடியை கீழே படியுங்கள்.

எனக்கு திரு.எஸ்.வி. சேகர் அவர்கள் அனுப்பிய ஆடியோ பதிவினை, நீங்கள் படிக்கும்வண்ண‍ம் வரிகளாக உருமாற்றியுள்ளேன். இதோ அந்த பதிவு

வ‌ணக்க‍ம் நான் 1991இல் இருந்து 2004வரை பாரதிய ஜனதாவின் அனுதாபியாக பாரதிய ஜனதாவின் கூட்ட‍ணிக்காக தேர்தலில் தொடர்ந்து பிரச்சாரம் பண்ணியவன் நான், அதுபோன்ற சூழ் நிலைகளில் எனக்கு மதரீதியான எதிர்ப்புக்கள் வந்த போதும் கூட எனக்கு AK47 பாதுகாப்பு கொடுக்க‍ப்பட்டு இருந்தது. அந்தள விற்கு நான் ஸ்டிராங் சப்போர்ட்ட‍ராக இருந்தேன் ஆனால், கட்சி, அரசியல் என்று வரும்போது நான் 2004 இல் அதிமுக-பி ஜே பி கூட்ட‍ணி… 40 இடங்களையும் இழந்தபோது ஜெயலலிதா அவர்களின் தலைமையில் அதிமுக.வில் இணைந்தேன்.

அதன்பிறகு 2010இல் அதிமுகவில் இருந்து நான் விலக்க‍ப் பட்ட‍ போது அப்போது திரு. சோ அவர்கள், என்னை திரு. நரேந்திர மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்தபோது அறிமுகப்ப டுத்தினார். தொடர்ந்து அவருடைய செயல்பாடுகள், அதன் பிறகு அவரை, நான் குஜராத்திற்குசென்று சந்திப்ப‍து என இருந்த போது, நீங்கள் ஏன் பார்ட்டியில் சேரக் கூடாது அவர் சொன்ன போது, சரி என்று அவருடைய அட்வைஸின் பேரில் இது அட்வைஸ் வேண்டுகோள் கிடையாது. நீங்கள் சேரலாம் என்று சொன்ன‍போது இல்லை என நான் சொல்லாமல் இந்த கட்சியில் சேர்ந்தேன். ஆனால் நான் சேர்ந்தது, தங்களது எதிர் காலத்திற்கு பாதிக்கும் என்று சிலர் நினைத்திருக்க‍லாம் அதனால் என்னை தொடர்ந்து அவமரியாதை செய்வதும் என்னை பற்றி பேசுவதும் அந்த மாதிரியெல் லாம் இருந்தது. அந்த மாதிரி இருக்கும்போது, என்ன‍ஆகியது என்றால், பரவாயில்லை என்று இதனை பெரிது படுத்தாமல் இருந்து வந்தேன்.

நான் இந்த கட்சியில் சேரும்போது எனக்கு சொன்ன ஒரே ஒரு விஷயம், பிரச்சார அணித் தலைவர் பதவி கொடுக்கிறோம் என்று திரு. பொன்னார் அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அவர் அதைச் செய்ய‍வில்லை. பிரச்சார அணிச் செயலாளர் பதவி கொடுத்தாங்க• அதனால் என்னால் எந்த கட்சி மீட்டிங்கிலும் கலந்து கொள்ள‍ முடிய வில்லை. அதே போல் கட்சியும் என்னை எந்த ஒரு நிகழ்வுக்கும் அழைப்ப‍தில்லை. அந்த மாதிரியான சூழ்நிலையில் நானும் விட்டு விட்டேன்.

ஆனால் தொடர்ந்து ஒரு குழு, என்னை தரக்குறைவாக பொது வெளியில் சொல்லிக் கொண்டிருக்கும் போது…  ஏதாவது ஒரு சமயத்தில் நாமும் அதற்குண்டான சரியான பதிலை தர வேண்டும். நம்மைப் பற்றி சொல்லு ம்போது நாம் யார் என்றும் சொல்ல வேண்டும் நம்மை பற்றி சொல்பவர்கள் யார் என்றும் வெளியுலகிற்கு புரியவைக்க‍வேண்டும். அப்ப‍டிப்பட்ட‍வன் தான் நான், அதுபோலவே சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு பதிவிட்ட‍ ஒரு விஷயம் ஆனால் இதில் இருக்கும் அத்தனை வார்த்தைகளும் நான் போட்ட‍தல்ல‍. இது எனது பேஸ் புக்கில் இருந்து எடுத்து போட்டிருக்கிறார்கள் நினைக்கிறேன். தவிர கே.டி. ராகவனுக்கும் எனக்கும் என்ன‍ விரோதம். அவர் என் னோடு சேர்ந்து 95 சினிமாக்கள் நடித்திருக்கிறாரா? அதெல்லாம் ஒன்றுமில்லை. நல்ல நண்பர்தான் நேராக பார்த்தால் நன்றாக பேசிக் கொள்கிறோம். அதனால் எனக்கு யாருமே விரோதிகள் கிடையாது.

ஒருகட்சி, என்னை பயன்படுத்திக்கொண்டால் கட்சிக்கு நல்ல‍து . கட்சி என்னை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நட்ட‍ம் எனக் கில்லை. இதுதான் எனது வாழ்க்கையின் பாலிசி. இதைத்தான் நான் கடைபிடித்துக் கொண்டு வருகிறேன். ஓராண்டு ஆகிறது நான் இந்த பேஸ்புக் எல்லாம் ஆக்டிவ் இருந்து… இது எப்ப‍டி மறு படியும் சுற்றிச் சுழல்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை கே.டி. ராகவனை பிடிக்காதவர்கள் யாராவது எதையா வது போட்டிருக்கலாம். ஆனால் நிஜமாகவே யாரைப் பற்றியும் பேசுவதற்கு எனக்கு நேரம் இல்லை. நான் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் கொள்கையை மக்க‍ளிடம் கொண்டு செல்வதில் நல்ல‍ஒரு நோக்கத்தோடு இருக்கிறேன். அது ஒன்று தான் எனது இப்போதைய செயல்பாடு.

நன்றி வணக்க‍ம்!  
எஸ்.வி. சேகர்

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக்செய்யவும்

Leave a Reply