Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜெயலலிதா உயிர் பிரிந்தது!- அப்போலோ அதிகாரப் பூர்வ அறிவிப்பு – தொண்டர்கள் அதிர்ச்சி

ஜெயலலிதா உயிர் பிரிந்தது!- அப்போலோ அதிகாரப் பூர்வ அறிவிப்பு – தொண்டர்கள் அதிர்ச்சி!

ஜெயலலிதா உயிர் பிரிந்தது!- அப்போலோ அதிகாரப் பூர்வ அறிவிப்பு – தொண்டர்கள் அதிர்ச்சி!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா (68) மாரடைப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில்

சிகிச்சை பலனின்றி 05/12/3016 திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானார். தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சென்னை திருவல்லிகேணியில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் செல்வி ஜெயலலிதாவின் பூத உடல் பொதுமக்க‍கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஞாயிறு மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவிற்கு இதய நோய் மருத்துவர்கள், சுவாசயியல் நிபுணர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தீவிர சிகிச்சை நிபுணர்களும் ஜெய லலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர். அது மட்டு மில்லாமல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் சென்னை அப்பலோவிற்கு வந்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, திங்கள் இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெய லலிதாவின் உயிர் மருத்துவமனையில் பிரிந்ததாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ள‍து.

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்த‍னை செய்வோம்.

English Summary

Tamil Nadu Chief Minister J Jayalalithaa (68) passed away on Monday evening after failing to recover from a cardiac arrest she suffered on Sunday. Her death was confirmed by Apollo Hospitals, who had earlier denied media reports of her passing away. The hospital announced that Jayalalithaa passed away at (05/12/2016) 11.30 pm.

Leave a Reply