Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உன் வாழ்வு உன் வசமாகும்_ தினந்தோறும் இதனை கடைபிடித்தால்- வீரிய வரிகள்

உன் வாழ்வு உன் வசமாகும் … தினந்தோறும் இதனை கடைபிடித்தால்… !- வீரிய வரிகள்

உன் வாழ்வு உன் வசமாகும் … தினந்தோறும் இதனை கடைபிடித்தால்… !- வீரிய வரிகள்

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் தன்வாழ்வை தன்வசமாக்குவதற் கு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறான். இத்தகைய

சூழ்நிலையில் உங்கள் வாழ்வு உங்கள் வசமாவதற்கு எளிமையான வழிகளில் இருந்து ஒன்றினைத்தான் நீங்கள் பார்க்க‍விருக்கிறீர்கள்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பேச்சு தேவைதா ன். அதற்காக எப்போதும் எங்கும், எல்லாவற்றிலும் பேச்சு தேவைதானா என்பதை யோசிக்கவேண்டும்.  ஒருசிலரை கண்டால் பயம் ஏற்படுகிறது. அவர் வந்தாலே பெரிய பிளேடு போடுவார், நாம் நைசாக நகர்ந்து விடவேண்டியது தான் என சொல்லும் அளவுக்கு சிலர் பேசிக்கொண்டே இருப்பார்கள். அதிகமாக பேசினால் நம்முடைய எனர்ஜி குறைந்துவிடும்.  பேசவேண் டிய நேரத்தில் பேசவேண்டும். சுருக்கமாக பேச வேண்டும். பேசியதையே திரும்ப திரும்ப பேசக்கூடாது. இதனால் உடலின் சக்தி வீணாகாமல் பார்த்து கொள்ளலாம். பிறரை பற்றி ஏளனமா க பேசுதல், கோள் சொல்லுதல், எதற் கெடுத்தாலும் குறை சொல்லுதல், இடக்கு, மடக்காக பேசுத ல் போன்றவற்றால் மனம் தன்னுடைய போக்கிலிருந
்து மாறுகிறது.

அது உடலில் பாதிப்பைகொடுக்கும். ஆனால் அதுஅவருக்கு தெரியாது. எனவே இத்தீயபழக்கங்களைவிட்டு விடுவதை பற்றி சிந்திக்க வேண்டும். இதனால் ஒரு பக்கம் பாவத்தை சேர்க்கிறோம் என்றாலும் நம்முடைய குணபாவத்தையே மேலே கூறியவாறு பேசி வந்தால் மாற்றிவிடும்.  இத னால் நம்முடைய செயல்பாடுகளில் குறை ஏற்படுகிறது. நிதானி த்து, சிந்தித்து நம்மால் பேசமுடியாது. பேச்சு என்பது நம் மை மீறிய செயலாக உள்ளது. கடுமையான வார்த்தைகள் நம்மை அறியாமலேயே நம்மிடமிருந்து வெளிவருகின் றன. பேசிய பிறகுதான் அவ்வளவு கடுமையாக பேசியிருக் க வேண்டியதில்லை என்று தோன்றுகிறது.

‘தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு‘
 
என்கிறார் திருவள்ளுவர். அந்த குறள் புத்தக த்தோடு போய்விடுகிறது. யாரும் கடைபிடிப் பதாக தெரியவில்லை. இனி கடுமையான வார்த்தைகளால் யாரையும் பேசுவதில்லை என தீர்க்கமாக, திடமாக, உறுதி யாக முடிவெடுக்க வேண்டும். அதை நடைமுறையில் தினமும் பயன்படுத்த வேண்டும். என்ற உறுதிமொழியை இன்றே இப்போதே எடுத்துக் கொள்ளுங்கள்

*

சுருக்க‍மாக சொல்ல வேண்டுமென்றால்,

பேச்சைக் குறைங்கப்பா

=> திரு. சித்தார்த் அவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற எமது மின்னஞ்சலுக்கு அனுப்பிய அற்புத பதிவு
 

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply