Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களின் சாதாரண செய்கைகளும், அவற்றில் பெண்களின் வித்தியாச பார்வையும்! – சுவாரஸ்யத் தகவல்கள்

ஆண்களின் சாதாரண செய்கைகளும், அவற்றில் பெண்களின் வித்தியாச பார்வையும்! – சுவாரஸ்யத் தகவல்கள்

ஆண்களின் சாதாரண செய்கைகளும், அவற்றில் பெண்களின் வித்தியாச பார்வையும்! – சுவாரஸ்யத் தகவல்கள்

ஆண்கள் செய்யும் மிகச்சாதாரணமான செய்களைக் காணும் பெண்களின் பார்வை சற்று

வித்தியாசமானவையாகவும், அதேநேரத்தில் அது ஆண்க ளுக்கு மிகுந்த தொல்லைத் தரக்கூடியதாகவும் இருக்கும் அவற்றை இங்கு காண்போம்.

1)நண்பர்களுடன் வெளியேசென்று வந்தால் நம் வீட்டு அம்மணிகளுக்கு சுத்தமாக பிடிக்காது. அதே மனைவி கள் பிறந்த வீட்டு சொந்த பந்தங்களுடன் ஓரிரு நிமி டங்கள் அதிகமாக நேரம் செலவழித்தால் ஆண்களுக்கு பிடிக்காது. இதை மாற்றுவது என்பது சற்றுக்கடினம்தான். ஆனால் , ஆண்கள் சில விஷயங்களை சாதாரணமாக செய்தாலும்கூட பெண்கள் அதை தவறாக தான் பார்க்கிறார்கள்.

2) பெண்கள் சோகமாக இருக்கும் போது யாராவது அரவணைப்பாக பேச வேண்டும் என எதிர்பார்பார்கள். ஆனால் ஆண்க ள் தனிமையான சூழலுக்கு சென்று விடுவார்கள். இதை பெரும்பாலும் பெண்கள் தவறாக எண்ணுத ல் உண்டு.

3) ஒரே விஷயத்தை பற்றி பலநூறு தடவை யோசிப்பது பெண்களிடம் மட் டும்தான் சாத்தியம். நிகவுகளுக்கு செல்லும் பொது புடவை தேர்வில் இருந்து காலை உணவு சமைப்பது வரையில் பெண்கள் சின்னசின்ன விஷயத்திற்கு எல்லாம் பலமுறை யோசிப்பார்கள். இதே விஷயங்களை ஆண்கள் வேகமாக செய்தால், அவசரகுணம் படைத்தவர்கள் என கூறுவார்கள்.

4) பெரும்பாலும் ஆண்களால் எதையும் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொள்ள முடியாது. ஏதேனும் சந்தேகம், பிரச்சனை என்றால் முகத்திற்கு நேராக கேட்டுவிடுவார்கள். இது அநாகரிகமான செயல், பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ளவேண்டும் என பெண்கள் சிலர் கருதுவதுண்டு.

5) ஆண்கள், பெண்களிடம் கேள்வி கேட்பது என்பது மிக வும் அரிது. ஆனால், பெண்கள் அப்படி இல்லை. கேட்ட கேள்வியையே ஆயிரம்தடவை கேட்பார்கள்.

6) ஆண்களால் வெறுமென காதுகொடுத்து கேட்டுக் கொண்டே இருக்க முடியாது. பெண்கள் பேசும்போது, டிவி பார்த்துக்கொண் டே கேட்பது, மொபைலை நோண்டிக் கொண்டே கேட்பது என இருப்பார்கள். இதை பெண்கள் வேண்டா வெறுப் பாக ஆண்கள் நடந்துக் கொள்வதாய் எண் ணுகின்றனர்.

7) ஆண்கள் மணிரத்னம்போல, பெண்கள் பழைய புராணத்தைபோல. ஏன் தாமதம் என்ற கேள்விக்கு ஆண்கள் “டிராபிக்” என்ற ஒற்றை வார்த்தையில் பதிலை முடித்துவிடுவார்கள். ஆனால் பெண்கள் “ நான் இன்னிக்கி காலையில எழுந்து.” என ஆரம்பித் து, தன்னுடன் பயணித்தவர்கள்வரை என விலாவாரியாகதான் பதிலளி பார்கள். பதிலை இப்படிதான் மற்றவரிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள்.

8) பெரும்பாலும் ஆண்கள் யாராவது எதையாவது கூறிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் என்ன முடிவாக கூற வருகிறார்கள் என்பதை அனுமானம் செய்துவிடுவா ர்கள். இதுபெண்களுக்கு பிடிக்காது. ஏனெனில், பெண்க ள் முழுவதுமாக கேட்டப் பிறகுதான் தங்கள் பதிலை அளிப்பார்கள்.

==> மிருதுளா தேவி

English Summary:

Boy’s action , Girl’s Reactions

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply