கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்)
கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்)
டிசம்பர் 2016 மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்
ஒற்றை வரியில் உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திருப்பியிருக் கிறார் நம்பிக்கை நாயகன் மோடி. பா.ஜ•க•வின் இந்த
மாஸ்டர் ஸ்டிரோக் பதுக்கல் பரதேசிகளின் தலையில் விழுந்திருக்கிற பேரிடி. மொரார்ஜி தேசாய் என்ற இரும்பு மனிதருக்குப்பிறகு இந்தியாவிற்குக் கிடைத்திருக்கும் எஃகு பிரதமர் மோடி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஊடகங்களின் வைரல் இல்லாத 1978இல் ஓர் இரவில் அதிரடியாய் ரூ.10,000- ரூ.5,000- மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து, கருப்பு பண முதலைகளின் மூச்சையடக்கி னார். அவர், அவரது வழியில் இன்று மோடி 1000 ரூபாய் 500 ரூபாய்களை வெற்றுக் காகித மாக்கி விட்டார்.
அன்றுஒரு ஆகஸ்டு 8இல் வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தை தொடங்கினார் அண்ணல் காந்தி. இன்று நவம்பர் 8இல் கருப்பு பணமே காலவாதியாகு என்ற போராட்டத்தை தொடங்கி இருக்கிறார் டீக்கடைக்காரர் மோடி.
பதுக்கலுக்கும்… கருப்புப்பணத்துக்கும் எதிரான போர் நடவடிக்கைகளை அன்றும் சரி… இன்றும் சரி… காங்கிரஸ் அல்லாத அரசுதான் எடுத்திரு க்கிறது என்பதை அரசியல் அறிவிலிகளும் அறிவுப்பூர்வமான பொது மக்களும் சிந்திக்க வேண்டும்.
மோடி செய்தது சரியா? கால அவகாசம் தந்திருக்க வேண்டாமா? இரவு 8 மணிக்கு அறிவிக்கவேண்டியதன் அவசியம் என்ன? இரண்டு நாட்களுக்கு வங்கிகளை யும் மூடி ஏ.டி.எம்களையும் சாத்திவிட்டு மக் களை அலைய வைக்கலாமா? ஏழை மக்க ளின் வாழ்க்கை என்னவாகும்? ஸ்விஸ் வங்கியில் இருப்பதை கொண்டு வரதுப்பில் லை. இங்கு ஏழை நடுத்தர மக்களை வாட்டு வது எப்படி நியாயம்? அதற்கடுத்து வங்கிகளுக்கு விடுமுறை என்பது தெரியாதா? இந்திய
மக்களை பிச்சைக்காரர்களாக்கி விட்டாரே!
..அப்பப்பா அடுக்கடுக்காய் எத்தனை விமர்சனங்கள் … எவ்வளவு குற்றச் சாட்டுக்கள் எல்லாவற்றுக்கும் விடை தெரியாமலா பிரதமரும் குடியரசு தலைவரும் ரிசர்வ்வங்கி ஆளுநரும் பொருளா தார மேதைகளும் இதனை யோசித்திருப்பார் கள் என்று நாம் கொஞ்சம் பொறுமையாய் யோசித்தோமா?
ஒருநாட்டின் பிரதமருக்கு இந்த தேசத்தின் பாதுகாப்பின் மீதும்.. பொருளா தார வளர்ச்சிமீதும் மக்களின் வாழ்வாதார த்தின் மீதும் எத்தனை அக்கறையிருந்திரு க்கிறது என்பதை அவரின் முழு உரையை தொலைக்காட்சியில் கேட்டவர்களுக்கு தெரிந்திருக்கும்.
செல்லாதா ? மாற்றா?
செல்லாது என்பதற்கும் மாற்று என்பதற்கும் நிரம்ப வேறுபாடு இருக்கி றது. இப்போது மோடி அறிவித்திருப்பது மாற்று
ரூ.500- ரூ.1000- இந்த நிமிடத்திலிருந்து செல்லாது என்றால் அந்தபணம் அந்நொடியோடு காலாவதி யாகிவிடும். எங்கேயும் எப்போதும் எவராலும் மாற்ற முடியாது. உதாரணமாக நம்மிடம் 5 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் உள்ளன• அதில் இரண்டு நோட்டுக்கள் போலியான வை எனதெரிகிறது. அதைவங்கியில் நாம் கொடுத்தால் வங்கி அதிகாரி அதைவாங்கி வைத்துக்கொண்டு ஒரு பெரிய கோட்டை குறுக்கும்நெடுக்குமாக அந்த ரூபாய் தாளில் போட்டு வைத்துக் கொள்வார். வேறு ஆயிரம் ரூபாய் தரமாட்டார். செல்லாத நோட்டாகி விடும் அது போனது போனது தான்.
ஆனால் தற்போது அரசு அறிவித்திருப்பது செல்லாது என்றாலும் கூட அத னை மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்து ள்ளது. தற்போதுள்ள ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை நாம் வங்கிகளில் தபால் அலுவலகங் களில் பல நாட்களாக மாற்றிக் கொண்டுள்ளோம். வரி செலுத்துதல், தொலைப்பேசி கட்டணம் செலுத்துதல், பெட்ரோல் வங்கிகள், இரயில் கட்டணம், விமான கட்ட ணம், போன்ற சேவை சம்பந்தப்பட்ட இடங்களில் எல்லாம் சாதாரண குடி மகன்.. தான் வைத்திருக்கு
ம் 500 , 1000 ரூபாய் நோட்டுக் களை மாற்ற வாய்ப்பளிக்க ப்பட்டது.
அதிகத் தொகையாய் வைத்திருந்தாலும் என்ன ஆகுமோ என்று அஞ்சத்தேவையில்லை நம் கணக்கில் உரிய அடையாளம் காண்பித்து வரவில் வைத்துக்கொள்ள முடி யும். நம் பணம் நம்மிடமேதான் இருக்க போகிறது. ஏன் தேவையற்ற அச்சம்? பரபரப்பு ?
ஏன் தடாலடி அறிவிப்பு? என்ற கேள்வி. வருமான வரி ரெய்டு, எதிரி மீது தாக்குதல், இவற்றையெல்லாம் சொ ல்லிவிட்டா செய்வது? அடுத்த மாதம் 5ஆம்தேதி முத ல் செல்லாது என்று அறிவித்தால் எல்லோரும் அதை வெவ்வேறு பெயர்களில் மாற்றிவிட மாட்டார்களா? வேறுவகையில் முதலீடாய் மாற்றிவிட முடியாதா? தப்பு செய்தவனுக்குத் தானே பயம் தொற்றிக் கொள் ள முடியும்? நமக்கு ஏன் அது வர வேண்டும்.
உறுத்து வந்து ஊட்டும் ஊழ்வினை என்பது போல ஊடகங்களை நம்மை உருட்டி, மிரட்டி விட்டன என்பதுதான் உண்மை. பணத் தை மாற்ற என்ன வழி? மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வழிசொல்ல வேண்டிய ஊடகங்க ள், மோடி செய்தது சரியா? பொருளாதாரம் தூங்கு மா? தூக்குமா? என்று கருத்து திணிப்பாளர்களை கொண்டு இந்த அவசர நேரத்திலும் விவாதம் செய்து வருவது அபத்தத்தின் உச்சக்கட்டம்.
இரவு 8மணிக்குப்பிறகு மிகப்பெரிய அளவில் எவரும் எங்கும் வர்த்தகம்செய்யவோ. பணப்பரிமாற்றம் செய்ய வோ வாய்ப்புக்குறைவு என்பதாலும் வங்கிகளின் இன் றைய இருப்பு பார்த்தால், ATM எந்திரங்களைப் பணம் நிரப்பும் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதாலு மே எந்தவித முன்னறிவிப்புமின்றி பிரதமரே நேரில் தோன்றி
அறிவி த்திருக்கிறார்.
அந்நேரத்திலும் கூட ஆயிரக்கணக்கானோர் 500, 1000 நோட்டுக்களை அள்ளிக் கொண்டு நகை நிறு வனங்களுக்கு அர்த்த ராத்திரியில் படையெடுத்தி ருக்கிறார்கள் என்றால் இந்தியா ஏழைநாடு, இந்தி யர்கள் பணக்காரர்கள், என்கிற எனது கவிதை வரிகள் பொய்யில்லை என்ப தைக் காட்டுகிறது.
தடாலடியாய் செய்தாரே பிரதமர்? இரண்டரை ஆண்டுகளா க என்ன செய்து கொண்டிருந்தார் அவர்? இது அடுத்த கேள்வி
எண்ணித் துணிக கருமம் என்பார்கள். கருமம் பிடித்த கருப்புப்பணத்தை ஒழிக்க படிப்படிப்பாய் நடவடிக் கை எடுக்கப்பட்டிருப்பதை ஏன் யாரும் உணர மறுக்கிறார் கள்.
எல்லோரும் வங்கி கணக்கு தொடங்கவேண்டும்… வங்கிகளில் உங்கள் கணக்குடன் ஆதார் எண். இணைக்கப்பட வேண்டும். கணக்கில் வராத பணத்திற்குக்குறிப்பிட்ட காலத்தில் கடக்குக்காட்டவேண்டும். தானாக முன்வந்து வருமா னத்தை தெரிவிக்கவேண்டும்… மிகப் பெரிய பண வர் த்தகத்தின்போது பான் கார்டு எண் தரப்பட வேண்டு ம்… என்று பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட தன் தொடர்ச்சியாகத்தான் இந்தஅதிரடி… அரசின் வே
ண்டுகோள்களை மதிக் காதது அரசின் தவறா? தனிமனித அலட்சியமா ?
ஸ்விஸ் வங்கியில் முடக்கப்பட்ட பணத்தைக் கொண்டுவரும் முயற்சி ஒருபுறம்தொடர்கிறது. அதே சமயம் உள்நாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கரன்சிகளை எப்படி வெளியில் கொண்டுவருவது? கள்ளநோட்டுக் கலாச்சா ரத்தை ஒரேநொடியில் ஒழிப்பது எப்படி? என்பதற் கான சரியான தீர்க்கமான முடிவுதான் 500- 1000- ரூபாய் ஒழிப்புத்திட்டம்.
இது ஏமாற்றும் திட்டமல்ல… ஏழை இந்தியாவை வளமானதாக மாற்றும் திட்டம் என்று உலக நாடு கள் பாராட்டுகின்றன•
இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் சராசரி மனிதன் முதல் பெரும் பணக்காரர்கள் வரை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருகிறது என்பது முற்றிலும் உண்மை தான்.
பணத்தை மாற்றுவதிலும், மக்கள் தன்னுடை ய கணக்கில் இருக்கக்கூடிய பணத்தை வங்கி மூலமாகவோ அல்லது தானியங்கி பணம் வழங்கும் சாதனம் (ATM) மூலமாகவோ எடுப் பதற்கு நிச்சயம் இடையூறுகள் இருக்கின்றன என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.
கருப்பு வெளுக்குமா? விடை உடனே தெரியாது .. ஆனால் கருப்பு மனம்கொண்டு.. கள்ளவழியில் சம்பாதித்து.. கண்ணுக்குத் தெரியாமலிருக்கும் கரன்சிகளெல் லாம் கட்டாயம் காணாமல் போ கும். களவாணிகள் மூட்டைக்குள் மூச்சடைத்து நிற்கும் இந்திய பொருளாதாரம் விரைவில் சுத்தமான காற்றை சுவாசிக்கும்.
இது என்தேசம் இந்நடவடிக்கைகள் இந்த தேசத்தை அரித்து க் கொண்டிருக்கும் ஊழலையும் பதுக்கலையும் ஒழிப்பதற் கான முயற்சி… இதற்காக என்னால் இந்த தற்காலிக இடை யூறுகளை தாங்கி கொள்ள முடியும்? என பெருமையோடு நெஞ்சு நிமிர்த்தி கடந்த ஒரு மாத காலமாக வரிசையில் காத்துக்கிடக்கும் தேசப்
பற்றும் பொறுப்பும்உள்ள ஒவ்வொரு குடி மகனுக்கும் உரத்தசிந்தனை சிரம் தாழ்ந்து நன்றி செலுத்துகிறது.
அன்றைய நரேந்திரனால் நாட்டின் கலாச்சாரம் உலகஅரங்கில் எழுந்தது.. இன்றைய நரேந்தரரா ல் (மோடி) உலகளவில் இந்திய பொருளாதாரம் தலைநிமிருந்து நிற்கும் என்று நம்புவோம்.
/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்
திரு.உதயம் ராம் : 94440 11105
/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
நம் உரத்த சிந்தனை மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த…
இந்தியாவிலுள்ள எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்தலாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்கண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்தலாம்.
வெளியூரில் உள்ளவர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த வேண்டும்
பெயர் – நம் உரத்த சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
கணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க வேண்டுகிறோம்.
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///\///\//\///\//\|
கீழே உள்ள படத்தை கிளிக் செய்யுங்கள்
After Sri.Panchapakesan our Life Member who made use of his matrimony siteto share similar views. Udayam Rams is in Tamil. Let us con gradulate Him whole heartedly and also share this to various platform thro Elakkiya Cholai, Podikai Minnal etc.
Regards, V.Mutthukrishnan, Stabanakala Member (Life) Loud Thinking Forum 1983 0nwards………………………………………….
nalla adikireenga chinki jung jug jung