Friday, July 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இஞ்சி, மஞ்சள் கலந்து தயாரித்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால்_ உண்டாகும் பயன்கள் 7

இஞ்சி, மஞ்சள் கலந்து தயாரித்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் . . . உண்டாகும் பயன்கள் 7

இஞ்சி, மஞ்சள் கலந்து தயாரித்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் . . . உண்டாகும் பயன்கள் 7

பொதுவாக உடலில் ஏதேனும் பிரச்சனை என்றால் மருத்துவரிடம் சென் று மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம். ஆனால்

நமக்கு ஏற்படும் சிலபிரச்சனைகளுக்கு இயற்கை பானங்கள் உதவிபுரியும் என்பது தெரியுமா? அது வும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தது.

நம்முன்னோர்கள்கூட தங்களது உடல்நல பிரச்ச னைகளுக்கு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டுதான் தீர்வு கண்டார்கள். அதில் அதிகம் பயன்படுத்திய பொருட்கள்தான் இஞ்சி மற்றும் மஞ்சள்.

இந்த இரண்டையும் கொண்டு ஓர் பானம் தயாரி த்துக்குடித்தால், நம் உடலில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இங்கு அந்த பானத்தை எப்படி தயாரி ப்பது என்றும், அந்த பானத்தைக் குடித்தால் பெறும் நன்மைகள் குறித்தும் காணலா ம்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி–சிறிது மஞ்சள்தூள் –2 டீஸ்பூன் தண்ணீர் – 1 கப் தேன் – சிறிது

தயாரிக்கும் முறை:

மிக்ஸியில் இஞ்சி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி சிறிது தேன் கலக்கவும். இந்த பானத்தை அவ்வப்போது காலையில் வெறும் வயிற் றில் குடிக்க வேண்டும்.

நன்மை 1

இந்த பானம் உடலின் மூலைமுடுக்குகளில் இரு க்கும் மற்றும் இரத்தத்தில் இருக்கும் டாக்ஸின்க ளை வெளியேற்றி, உடலைசுத்தமாகவும், ஆரோ க்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

நன்மை 2

மஞ்சள் கலந்த இஞ்சி ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பொருள் அதிகம்உள்ளது. இதனை குடித்தால், அடி க்கடி வரும் தலைவலியைத் தடுப்பதோடு, ஒற்றைத் தலைவலியில் இருந் தும் விடுவிக்கு ம்.

நன்மை 3

இஞ்சி மற்றும் மஞ்சள் ஜூஸ், வயிற்றில் சுரக் கும் அமிலத்தின் அளவை குறைத்து, குமட்டல் உணர்வைக் குறைக்கும். மேலும் கர்ப்பிணிகள் இதை குடித்தால், காலையில் ஏற்படும் சோர்வு தடுக்கப்படும். இருந்தாலும் இதை கர்ப்பிணிக ள் பருகும்முன் மருத்துவரிடம் கலந்தாலோசித் துக் கொள்ளுங்கள்.

நன்மை 4

உடலினுள்உள்ள உட்காயங்கள் மற்றும் உடல் வலியை , இந்த பானம் குடிப்பதன் மூலம் தடுக்க லாம். குறிப்பாக உடற்பயிற்சிக்கு பின் இந்த பானத்தைக் குடிப்பது நல்லது.

நன்மை 5

இந்த இயற்கை பானம் இரத்தத்தில் உள்ள சர்க்க ரையின் அளவை சீராகப் பராமரித்து, சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

நன்மை 6

இஞ்சி மஞ்சள் பானம், வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை நடு நிலையாக்கி நாள்பட்ட செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.

நன்மை 7 

மஞ்சள்கலந்த இஞ்சிசாற்றில்உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகள் மற்றும் வலியை க்குறைக்கும்.

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று, அதன்படி உட்கொள்ள‍ வும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்ய‍வும்.

Leave a Reply

%d bloggers like this: