Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எண்ணற்ற பிரச்சனைகளால் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு . . .

எண்ணற்ற பிரச்சனைகளால் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு . . .

எண்ணற்ற பிரச்சனைகளால் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு . . .

தேடல் நிறைந்த பருவத்தில் இன்றைய இளம் பருவத்தினர் இனிமையை தேடுவதைவிட,

சுமைகள் மிகுந்து காணப்படும் வாழ்வில் தீர்வுகளைத் தேடி அலைபவர் களாக மாறிவருகிறார்கள். குறிப்பாக 20, 30 வயதுபெண்களை, நிரந்தர வேலை, திருமணம், குழந் தைப் பாக்கியம், உடல் பருமன், முதுமையின் தொடக்கம் என எண்ணற்ற பிரச்சினைகள் ஆட்டிப் படைக்கின்றன.

நீங்களும் அதே ரகம் என்றால், ஆய்வாளர்கள் இதில் இ ருந்து மீள்வதற்கு சொல்லும் வழிமுறைகளை கடைப் பிடியுங்கள்.

வேலை:

கல்லூரியை கடந்து, வயது இருபதைத் தாண்டினால், வாழ்க்கை கேள்விகள் நிறைந்ததாகிவிடுகிறது. ‘நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்ற கேள்வியை சமூகம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஏனெனில் பலருக்கும் எதிர்பார் த்த மாதிரியான வேலை உடனே அமைந்துவிடுவதில்லை. விரும்பும் வேலைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கவோ, அலையவோ வேண்டியிருக்கிறது.

25 வயது வரை அதில் நிச்சயமற்ற நிலை நீடித்தால், மனம் மேலும் பட பட க்கும். ஒரு பக்கம் பெற்றோர் திருமண ஏற்பாட்டில் மும்முர மாக இருப்பார்கள். அந்தபெண்ணின் மனநிலையோ படித்த படிப்பிற்கானவேலை சரியாக அமையவில்லையே என்ற ஏக்கத்தை எதிரொலித்துக்கொண்டிருக்கும். ஆனால் கிடை த்திருக்கும் வேலையைவிட்டு விட்டு, அதைவிட சிறந்த வேலையை தே டவும் மனம் தயங்கும். இதுபோன்ற பிரச்சனை தனி நபர் சார்ந்தது அல்ல. உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் பொது வானவை.

அமெரிக்காவில், ‘இளம்பெண்களின் வேலை திருப்தி ’ பற்றி கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. 30 வயதுக்குட்பட்ட பணியா ளர்களில் 80% பேர், ‘தாங்களுக்கு கிடைத்திருக்கும் வே லையில் திருப்தியில்லை’ என்று கூறியிருக்கிறார்கள். அதனால் அப்பணியில் இருந்து வேறு பணிக்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால், ‘இருக்கிற வேலையை விட்டு விட்டால் உள்ளதும்போச்சே என்ற நிலை ஆகி விடக்கூடாது என்ற பயத்துடன்இருப்பதாகவும்’ கூறியிருக்கிறார்கள். ‘வே று வேலை கிடைக்காமல் போய்விடக் கூடாதே!’ என்ற பயத்திலே கிடை த்திருக்கிற வேலையில் திருப்தியில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார் கள்.

‘இதுபோன்ற அச்சம் தேவையில்லை’ என்கிறார் யோகா ஆசிரியை மேகா. பதிப்புத்துறை சார்ந்த பணியில் இருந்த அவருக்கு அந்த பணியில் திருப்திஇல்லை. ராஜினாமா செய்துவிட்டு தான் கற்ற யோகா கலையை சிறுமிகளுக்கும், இளம் பெ ண்களுக்கும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். இப்போது மேகாவின் வாழ்க்கையையே மாற்றிவிட்ட து யோகா.

“அலுவலக வாழ்க்கை என்னுடைய கனவுகளை சிதைப்பதாக உணர்ந்தே ன். இப்போதுஅதிலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன்” என பூரிக்கிறார் அவர். இப்படி வேலையில் திருப்தியில்லாமல் திணறுகிறவர்களுக்கு மனநல நிபுணர்கள் தரும் தீர்வு என்ன?

“குறிப்பிட்ட துறை உங்களுக்கு ஏற்றது என நினைத்து அதில் வேலை பார்க்கத் தொடங்கியபின் அததுறை திருப்தியாக இல்லை என உணர்ந்தால் அந்த வேலையை மறுபரிசீலனை செய்வது நல்லதுதான். மனதுக்கு பிடித்த ஒன்றுதான் மகிழ் ச்சியையும், மலர்ச்சியையும் உண்டாக்கும். அதே நேரத்தில் அந்த பணியில் இருந்துகொண்டே பிடித்த அடுத்த வேலை யை தேடிக்கொள்வது அவசியம். அந்த மாதிரியான நேரங்களில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவேண்டும். துணிச்சலை வர வழைத்துக்கொள்ள வேண்டும். என்ன பிரச்சனை ஏற் பட்டாலும் உங்கள்மனம் நிலை குலையாத அளவுக்கு பார்த்துக்கொள்ளவேண்டும்” என்கிறார்கள்.

திருமணம் :

இளம்பெண்கள் ஒருவழியாக கிடைத்தவேலையில் மனதை திருப்திபடுத்திக்கொண்டு , வாழ்க்கையை ஓட் டிக்கொண்டிருக்கையில், ‘இத்தனை வயதாகிவிட்டதே ! எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்?’ என்றநெருடலான கேள்வி எழுப்பப்படும். நாம் மரபுக ளில் ஆழப்பதிந்தவர்கள் என்பதால் சமூகத்தின் இக்கேள்வியை தடுக்க முடியாதுதான். உறவுகளும், தோழிகளும்கூட சமயத்தி ல் இந்த கேள்விகளை கேட்கும் போது மனதில் லேசாக வலி தோன்றத்தான் செய்யும். தன் மீதான அக்கறையி ல் தான் அந்த கேள்வியை கேட்கிறார்கள் என்பது தெரிந்தாலும் மனம் கலக்கமடைவதை தடுக்க முடியாது.

இதை எப்படி எதிர்கொள்வது? என்று சொல்கிறார் உளவியல் ஆய்வாளர்.

“அது என் தனிப்பட்ட விருப்பம் என்று முகத்தை முறிக்கு ம் வகையில் எல்லோரிடமும் பதில்கூற முடியாதுதான். ‘திருமணம்- குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர் கொள்ள இன்னும் கூடுதல் பக்குவம் தேவை என்று நினை க்கிறேன். அதற்கான சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறே ன். உங்கள் அக்கறை எனக்கு அதற்கு துணை வரட்டும்’ என்று நாசூக்காக கூறிவிடலாம்.

நிஜமாகவே திருமண வாழ்க்கைக்கு தேவையான தகுதிக ளை இளம் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியதிருக் கிறது. திருமண வாழ்க்கையின் பொறுப்புகளையும் அவர் கள் உணரவேண்டியதிருக்கிறது. அதற்கு மனதளவிலும், உடல் அளவிலு ம் தயாராக வேண்டியதிருக்கிறது. மணவாழ்க்கையில் அவசரத்தைவிட நிதானமே சிறந்தது.

குழந்தையின்மை :

ஒருவழியாக திருமணம்முடிந்து, ஒன்றிரண்டு வருடங் கள் ஆகிவிட்டால் , ‘இன்னும் தொட்டில் ஆடவில்லையே?’ என்ற கேள்வி இளம்பெண்களை நோக்கி எழும்பும். இந்த கேள்வி, திரு மணம் செய்த பெண்ணின் வீட்டிற்குள்ளிருந்தும், வெளி யிலிருந்தும்வரும். இந்த மாதிரியான கேள்விகளை கேட் டு பழக்கப்பட்ட குடும்பங்களில் இருந்துதான் நாம் பிறந்து வளர்ந்திருக்கி றோம். அதனால் இந்த கேள்வியை எதிர்கொள்ள பெண்கள் தயங்கக் கூடாது. அதே நேரத்தில் குழந்தையின்மையை பற்றிய விழிப்பு ணர்வு பெண்களிடம் அவசியம் இருக்க வே ண்டும்.

‘குழந்தையின்மையை நினைத்து பெண்கள் வருந்த வேண்டியதில்லை. இன்றைய நவீன கால மருத்துவத்தில் குழந்தையின்மைக்கும்- வயதுக்கு ம் தொடர்பில்லை. இளம் வயதை கடந்த பின்பும் நவீன மரு த்துவத்தின் மூலம் தாய்மையடையலாம். அதனால் குழந் தையின்மையை பற்றிய பயத்தில் இருந்து பெண்கள் விடு பட வேண்டும்’ என கூறுகிறார், மகப் பேறு நிபுணர்.

‘குழந்தையின்மையை பற்றிய கேள்விகள் எழுப்பப்படும்போது இளம் பெண்கள் தடுமாறாமல் நிதானமாக பதிலளிக்கவேண்டு ம். ‘தாய்மையடைதலை இன்னும் ஒன்றிரண்டு வருடங் கள் தள்ளி வைத்திருக்கிறோம்’ என்றோ, ‘தாய்மை அ டைய தயாராகிக்கொண்டிருக்கிறேன்’ என்றோ, ‘நாங்க ளும் உங்களைப்போல ஆவலோடு காத்திருக்கிறோம்’ என்றோ சொல்லுங்கள்.

அழகுக் குறைபாடு :

இளம்பெண்கள் தங்கள்தலையில் ஒற்றை நரைமுடியையோ, முகத்தில் லேசான சுருக்கத்தையோ முதன் முதலாக காணும் போது மிரண்டு போகிறார்கள். அதனை மறைக்க கையில் கிடைத்த அழகு சாதன பொருட்களை எல்லாம் பயன்படுத்த தொடங்கிவிடுகிறார்கள். இளநரை, தோல்சுருக்கம் , குதிகால் வெடிப்பு, உடல் பருமன் போன்ற எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது. அந்தந்த துறையில் முறையாக கற்று, சிகிச்சை அளிப்பவர்களை கண்டறிந்து ஆலோசனை பெறுங்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: