Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மார்கழி மாதத்தில் நீங்கள்… கழிக்க வேண்டியதும், கூட்ட‍ வேண்டியதும்

மார்கழி மாதத்தில் நீங்கள்… கழிக்க வேண்டியதும், கூட்ட‍ வேண்டியதும்

மார்கழி மாதத்தில் நீங்கள் கழிக்க வேண்டியதும், கூட்ட‍ வேண்டியதும்

மார்கழி குறித்த பல அரிய தகவல்களையும், இம்மாதம் குறித்து மனத்தில் எழும்

கேள்விகளுக்கும் பதில்களையும் அளிக்கிறது இந்த கட்டுரை. மேற்கொண்டு படியுங்கள் உணருங்கள்

மார்கழியில் கோள்களின் நிலை

ஆன்மீகமார்க்கத்தில் முன்னேறுவதற்கான தடத்தி ல், வருடத்தின் குறிப்பிடத்தகுந்த ஒரு காலகட்டத் தில் நாம் இப்போது இருக்கிறோம். தமிழ் மாதம் மார்கழி க‌டந்த‌ டிசம்பர் 16ம் தேதியே தொடங்கி விட் ட‍து. பூமியின் வடபாதி வட்டத்தி ல் இது உஷ்ணமாக இருக்க வேண்டிய காலம், ஆனால் அதிக குளிராக உள்ளது. ஏனெனில் நமது கோளத்தின் வடபகுதியின் முன்புறம் சூரியபார்வையின் நேர்கோணத்தில் இல் லை . பூமிக்கு சூரியன் மிக அருகில் இருக்கும் இந்நேரத்தில் சூரிய கதிர்கள் பூமியில் பட்டுத் தெறித்துவிடுகின்றன.

பூமி இன்னும் சற்று விலகியிருந்தால் சூரிய னின் வெப்பக்கதிர்கள் நம்மை நேரடியாகத் தாக்கியிருக்கும். ஆனால் பூமிமிகஅண்மை யில் இருப்பதால் சூரிய கதிர்கள் தொட முடியாத கோணத்தில் இருக்கி றோம். எனவே வெப்பமின்றி குளிர்ச்சியா க இப்போது இருக்கிறது. மார் கழிதான் மனித உடம்பில் சமநிலையையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டுவருவதற்கு உசிதமானநேரம் இதற்கான பிரத்தியேகமான யோக பயிற்சிகள் நமது கலாச்சாரத்தில் வடிவமைக்கப்பட்டுசொல்லி வைக்கப்பட்ட ன. எனினும் சூரியன் நமது கோளுக்கு மிக அண்மையில் இருப்பதால் அதன்ஈர்ப்புவிசை மிக அதிகமாக நம்மைத் தாக்கும். இதனால் தான் மார்கழி மாதம் மனித உடலின் சக்தி மையம் கீழிருந்து மேல்நோக்கி ஈர்க்க ப்படுகிறது. மார்கழிதான் மனித உடம்பில் சமநிலை யையும் ஸ்திரத்தன்மை யையும் கொண்டு வருவதற்கு உசிதமான நேரம். இதற்கான பிரத்தியேகமான யோகப் பயிற்சிகள் நமது கலா ச்சாரத்தில் வடிவமைக்கப்பட்டு சொல்லி வைக்கப்பட் டன.

கோலமிடுதல்

இந்த சமயத்தில் பொதுவாக பெண்கள் செய்யும் வேலையினை ஆண்களும், ஆண்களாற்றும் பணிகளைப் பெண்களும் செய்கிறார்கள். பெரும் பாலான சந்தர்ப்பங்களில் பாடல்களைப் பாடிக் கொண்டு நகர்வலம் வருவது பெண்களே. ஆனா ல் இம்மாதத்தில் ஆண்கள்தான் அதிகாலையில் பஜனை மேற்கொண்டு வீதிவலம் வருகிறார்கள். ஆண்தன்மை நிலத்தோடு சம்பந்தமுள்ளதாகவும் , பெண் தன்மையானது ஒரு பொருளின் வர்ணம் மற்றும் வெளிப்புற வடிவத்தின் மீதுதான் ஈர்ப்பு டையதாகவும் இருக்கும். ஆனால் மார்கழியிலோ, பெண்கள் வீட்டு வாசலில் தரைமீது தான் வண்ண வண்ணக் கோலமிடுகிறார்கள்.

ஏன் திருமணம் செய்யக்கூடாது?

ஏனைய காலங்களில் மூலாதாரத்தைநோக்கி இருக்கு ம் ஈர்ப்புசக்தி (புவிஈர்ப்பு விசை காரணமாக) மார்கழி யில், பூமியில் வடபாதியிலருக்கும் மக்களான நமக்கு குறைவாகவே இருக்கும். இப்போது விதை விதைத்தா ல் அது சரியாக முளைக்காது. உயிர்சக்தி மந்தமாயிரு க்கும். இக்கால கட்டத்தில் நம் உடம்பின் ஆற்றலை பெருக்கிக்கொள்ளவும், ஸ்திரமாக்கி சேமித்துக்கொள் ளவும்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவேதான் இச் சமயம் திருமணங்கள் நடைபெறுவதில்லை. அதை த்தவிர்க்கும் நிலைதொடர்ந்து வருகிறது. கருவுறுவத ற்கு ஏற்ற சமயம் இதுவல்ல. இல்லறத்தில் இருப்போர் இச்சமயம் புலனடக்கத்தை மேற் கொண்டு (பாலுறவைத் தவிர்த்து) வழிபாட்டி ல் கவனம் செலுத்துவதை மரபாக க்கொண்டு ள்ளனர். சூரியசக்தி கீழ்நோக்கி செயல்படுவ தால் மனநோயாளிகள் தங்கள் மனநிலையி ல் சமன்பாடு கொண்டு வருவதற்கு உகந்த நேரமும் இதுதான்.

பிரம்ம முகூர்த்தத்தில் நீராடுதல்

உடம்பிலுள்ள நீராதார நிலையில் ஏற்படும் தடுமாற் றங்களே மன சமன் பாட்டைக் குலைக்கின்றன என்பது யோகமுறையை கடைப்பிடிப்போரின் புரிதல். ஒரு தொட்டியில் நீரைத் தேக்கி அதை சற்று அசைத்தால் அந்நீர் தளும்புகிறதல்லவா? உரியமுறையில் நம் உட லை நாம் பாதுகாக்கத் தவறினால் உடம்பின் நீராதார சமநிலையில் மாற்றம்ஏற்பட்டு அது மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்து கிறது. பாரம்பரியமாக இம்மாதத்தில் நீரோடு தொடர்புடைய சில பயிற்சிகளை மேற்கொள்கி றோம். இதற்காக நாம் பிரம்ம முகூர்த்தத்தை ( காலை 3.40மணி) தவறவிடுவதில்லை. இதற்கா ன எளிதான பயிற்சி என்னவெனில் கோவில் தெப்பக்குளத்தில் அந்த பிரம்ம முகூர்த்தத்தில் மூழ்கி நீராடுவதுதான். மார்கழி மாதமானது இயல்பாகவே நமது உடம்பி ல் ஒரு ஸ்திரமான நிலையை மன அமைதியை தோற்றுவிக்கிறது. பல சாதகர்கள் தங்களது ஆன் மிகப் பாதையில் ஓரடி முன்னே பின்னே இருக்க க்கூடும். ஏன் இப்படி என்றால், மனநிலை ஸ்திரத் தன்மைக்கு வரும் பயிற்சிகள் (சாதனா முறைகள் ) போதுமான அளவு கிடையாது. அதற்கு மாற்றாக மார்கழியின் இயற்கைநிலை அவர்களுக்குஉதவி செய்யும். கோள்களின்விசை உங்களை மேல்நோக்கி உந்தும்போது நீங்க ள் உள்ளுக்குள்ஸ்திரமாக இல்லையெனில் தள்ளாடுதல் போன்ற நிலைக்கு ஆளாவீர்கள். இந்த மார்கழி மாதம் ஸ்திரமாக இருப்பதற்கு ம், அடுத்து வரும்தை மாதம் நகர்ந்து முன்னே றுவதற்கும் பயன்படுகிறது. உள்நிலை திடமா க இருந்தால்தான் சுலபமாக பயணிக்கத் துணிவு வரும். எனவே மார்கழி உடம்பை திட ப்டுத்தவும், சமன்பாட்டை கொண்டு வரவும் சாத்தியமாகும் காலமாகும்.

==> சத்குரு ஜக்கி வாசுதேவ்

கீழ்க்காணும் விளம்பர‌த்தை கிளிக் செய்ய‍வும்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: