Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பணிந்தார் பன்னீர்செல்வம்; சாதித்தார் சசிகலா! – ஜெயலலிதா இடத்தில் இனி சசிகலாதான் . . .

பணிந்தார் பன்னீர்செல்வம்; சாதித்தார் சசிகலா!- ஜெயலலிதா இடத்தில் இனி சசிகலாதான் . . .

பணிந்தார் பன்னீர்செல்வம் சாதித்தார் சசிகலா – ஜெயலலிதா இடத்தில் இனி சசிகலாதான் . . .

மறைந்த முன்னாள் முதலமைச்ச‍ர் ஜெ.ஜெயலலிதா அவர்கள், செப்டம்பர் 22இல் அப்போலோ மருத்துவமனையில்

அனுமதிக்க‍ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5ஆம்தேதி இரவு 11.20 மணிக்கு இறந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட‍து.

அப்போதிருந்த அதிமுகவின் அடுத்த‍ பொதுச்செயலாளராக யாரை நிய மிப்ப‍து என்பது குறித்த‍ குழப்பங்களும் அதிரடி நடவடிக்கைகளும் தொட ர்ந்து வெளிவந்துகொண்டே இருந்தது. ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து காலியாக உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு, ஜெயலலிதாவின்தோழி சசிகலாவை தேர்ந்தெடுக்க கட்சியின் முன்னணி தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகி றார்கள்.

அவற்றுல் பாய்ந்தார் பன்னீர்செல்வம், சரிவில் சசிகலா, தீபாவுடன் கை கோர்க்கும் பன்னீர் செல்வம்  என்பன போன்ற பல தலைப்புக்களில் சசி கலாவுக்கு எதிரான செய்திகள்  சமூக ஊடகங்களிலும் யூடியூப் காணொ லிகளிலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருந்தது. அவற்றில் ஒன்றி ரண்டு செய்திகளையும் நாமும் வெளியிட்டு வந்தோம்.

அதிமுக. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. இதில் முதலமைச்ச‍ர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட பல கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், img-20161229-wa0048மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அணிகளின் செயலா ளர்கள், நகர, ஒன்றிய செய லாளர்கள் ஆகியோர் மட்டுமே பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்றனர்
 
அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் கட்சி யின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பொதுக்குழுவில் img-20161229-wa0044ஒப்புதல் பெற வேண்டும். இதையொட்டி  முதலில் ஜெயலலிதா மறைவுக் கு எழுந்து நின்று இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து பல தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் ஒரு தீர்மானம் முக்கியமானது. சின்னம்மா வி.கே.சசிகலா தலை மையில் அதிமுக செயல்படும் என அந்த தீர்மானம் சொல்கிறது. ஆனால் img-20161229-wa0055பொதுச்செயலாளராக அவரை நியமிக்க தீர்மானத்தில் அம்சம் இடம் பெற வில்லை.

5 ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிமுகவில் உறுப்பினராக இருந்தால்தான், அவர் பொதுச்செயலாளராக முடியும் என்பது விதிமுறை. எனவே சட்ட img-20161229-wa0047விதிகளை திருத்தும்வரை சசிகலா தலைமையிலேயே அதிமுக இயங்கு ம் என்று மட்டும் குறிப்பிட பொதுக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. img-20161229-wa0050சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த‍தை முதலமைச்ச‍ர் பன்னீர்செல்வம் அவர்களே செய்தியாளர்களுக்கு படித்து காட்டினார்.

சமூக வலைதளங்களில் வெளியான பன்னீர்செல்வம் பற்றிய தகவல்களு க்கும் இன்று முதலமைச்ச‍ர் பன்னீர்செல்வம் வெளியிட்ட‍ தகவல்களுக்கு ம் அதிக முரண்பாடு இருக்கிறது.

பன்னீர்செல்வம் எதற்காக பனிந்தார், யாருக்காக பணிந்தார்? அல்ல‍து சமூக வலைதளங்களில் வலம் வந்த செய்திகள் பொய்யானவையா? என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகள் ஜெயலலிதா அவர்களின் மரணத்தை போலவே மர்ம்மாகவே இருக்கிறது.

கீழ்க்காணும் விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: