Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களை கடுமையாக எச்ச‍ரிக்கும் பதிவு இது! – (கோபப்படாம முழுசா படிங்க..)

பெண்களை கடுமையாக எச்ச‍ரிக்கும் பதிவு இது! – (கோபப்படாம முழுசா படிங்க..)

பெண்களை கடுமையாக எச்ச‍ரிக்கும் பதிவு இது! – (கோபப்படாம முழுசா படிங்க..)

அன்றாட வாழ்வில் பல பெரிய நெருக்கடிகளை சூழ்நிலைகளும் அது சார் ந்த தன்மைகளுமே நமக்கு

உருவாக்கிவருகிறது. தனிமனிதசுதந்திரம் பறிக்கப்பட்ட உணர்வும் உள் ளுக்குள்! குடும்பத்துடன் சுற்றுலா சென்றால் கணவன்-மனைவி சுதந்திர மாக எதுவேண்டுமானாலும் செய்ய முடியுமா?

சில துணிக்கடையில் பெண்/ஆண் துணி மாற்றுவ தைகூட படம்பிடிக்கிறார்கள். இதுதான் இன்றைய சூழலா? ஹோட்டல் அறைகளில் சுதந்திரமாக இருக்க முடியுமா?. இவ்வளவு ஏன் சில பெண்கள் தங்கும் விடுதிகள் மற்றும் பேருந்துகளில் கூட சுதந்திரமும் பாதுகாப்புகளும் குறைக்கப்பட்டும், பரிக்கபட்டும் உள்ளதே? நிம்மதியா குளிக்க முடியல, தூங்க முடியல. என்னய்யா உலகம் இது?  கேமராக்கள் மிகவும் துல்லியமான தரத்துடனு ம் அளவுகளில் சிறியதாகவும் இருப்பது பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா ?மேலுள்ள கேள்விகளுக்கு விடை என்ன தெரியுமா?

நமதுஅலட்சியமும் விழிப்புணர்வு இல்லாமை யுமே. உண்மைதானே?. மேலும் பல்வேறு சூழ் நிலைகள் மற்றும் நடப்புகளை முன்வைத்து இ தை தொடருகிறோம். இந்த பதிவு நல்ல நோக்கங்களுக்காக எழுதப்பட்ட து. அடுத்தடுத்த பக்கங்களில் அதிநவீனவேவுபார்க்கும் கேமராக்கள் பற்றி சற்றே தெளிவாக விவரித்துள்ளோம். பாருங்கள் – நண்பர்களுடன் பகிரு ங்கள்.

பீப்ஹோல் ரிவர்சர்:

பீப்ஹோல் என்பது பெரும்பாலான வீடுகளில் சாதா ரணமாக பயன்படுத்த ப்படுவது. ஹோட்டல் அறைக ளிலும் இதுபோன்ற கருவி பொருத்தபட்டிருக்கும். வெளியில் நிற்பவர் யார் என்பதை எளிதில் பார்பதற்கு இது பயன்படுகிற து.

‘பீப்ஹோல்ரிவர்சர்’ என்பதுஒரு வீடியோ கேமராவாக வும் பயன்படுத்த படுகிறது. இது எளிதாக கதவுகளில் பொருத்த படுகிறது. அறையில் உள்ளேயும், வெளி யேயும்  எளிதில் படம் பிடித்துவிடும்.

இது படம்பிடிக்காமல் இருக்க சூப்பர் டிப்ஸ்:

துணிய போட்டு மூடுங்க! அல்லது சூயிங்கம் போன்ற ஒட் டும் வகையி லானதை பயன்படுத்தி அதை மறைத்து விடுங் கள். வேறு ஏதாவது ஐடியா இருந்தால் கமென்ட் பண்ணுங்க.

ஸ்க்ரூ கேமரா:

பார்த்தவுடன் மிகவும் அதிர்ச்சியளுக்கும் வகையிலாக இரு ந்தது. சாதாரணமாக எல்லா இடங்களிலும் உபயோகிக்கப் படும் ‘ஸ்க்ரூவில்’ கேமரா இருந்தால் என்னதான் செய்வது?

இந்த வகை கேமராக்களை டிவி, டேபிள், கட்டில், கதவு என எல்லா இடங்களிலும் எளிதில் பொருத்திவிட முடியு  ம். கண்டிப்பாக இது போன்ற கேமராக்களை கண்டறிவது மிகவும் கடினமானதே.  சற்று பெரிதாகவும் வித்தியாசமா கவும் இருக்கும் ‘ஸ்க்ரூக்களை’ உடைத்தே விடுங்கள். வேற ஐடியா இருந்தால் நீங்களே சொல்லுங்க!

பேனா மற்றும் கண்ணாடி கேமரா:

ஆங்கில திரைப்படங்களில் காட்டுவதைப்போல பேனா மற்றும் கண் கண்ணாடியிலும் கேமராக்கள் வைத்து வேவு பார்க்கிறது வக்கிரவர்க்கம். சிலஅறைகளில் சாதாரணமா க கிடக்கும் பேனா போன்றவற்றை அலட்சியப்படுத்தாதீர்க ள்.

இவையிரண்டும் வீடியோ ரெகார்ட்செய்து உடனு க்குடன் இணைப்பில்லா இணையம் வாயிலாகவு ம் அனுப்பக்கூடியது. இதன் தரம் திரைப்படங்கள் எடுக்கும் அதிநவீன கேமராக்களுக்கு சமம் என் பதை நினைவி ல் கொள்க.

ஃபைபர் கேமரா:

ஃபைபர் கேபிள் என்ற இணைப்புகளுக்கு பயன்படுத்தும் அதிநவீன தரவுகள் பரிமாறும் ஒயரால் ஆனா கேமரா இது. இந்த வகை கேம ராக்கள் எந்த சிறிய இடத்திலும் நுழையக்கூடி யது. மேலும் குளிர்சாதன பெட்டி, ஃபேன் மற்று ம் மின் விளக்குகளில் கூட இதை எளிதில் பொருத்த முடியும்.

அதேபோல் இதன் துல்லியமும் மிகவும் அசாத்திய மானது. இது இணைப்பில்லாமல் பயன்படுத்த முடி யாது. எனவே சற்று முயற்சிசெய்தால் கண்டுபிடிப்ப து எளிதே!

நைட் விஷன் கேமரா:

இந்த கேமரா இரவின் இருள் தருணங்களில்கூட தெளி வாக படம் பிடிக் கும் தன்மையுடையது. இதன் தரமும் துல்லியமும் மிக வும் அபாரம். இருட்டில் உள்ளதையும் சாதாரண படங் கள்போலவே இந்த கேமராவால் படம்பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இது அளவில் பெரியதாக இருப்பதால் எளிதி ல் அறிந்து கொள்ளலாம். இதுபோன்ற சாதனங்கள் எங் காவது மறைத்துவைத்து படம்பிடிப்பார்கள். முயற்சிசெய்தால் மிகஎளிது.

==> திரு. சாரதீஸ்வரன்… vidhai2virutcham@gmail.com என்ற எமது மின்னஞ்சலுக்கு அனுப்பிய பதிவு இது.

Night Vision Camera, Pen Camera, Specks Camera, Fibre Camera , Screw Camera, Peephole Camera, Warning for girl

கீழ்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: