Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிர்ச்சி – ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வருமா? – உச்ச‍நீதிமன்றத்தில் மனு

அதிர்ச்சி – ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வருமா? – உச்ச‍நீதிமன்றத்தில் மனு

அதிர்ச்சி – ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வருமா? – உச்ச‍நீதிமன்றத்தில் மனு

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக பீட்டா, விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில்

வழக்கு தொடர்ந்துள்ளன. இம்மனுக்கள்மீது திங்களன்று விசாரணை நடைபெற உள்ளது. தமிழக அரசு நிறைவே ற்றிய ஜல்லிக்கட்டு சட்டத்தை ரத்து செய்ய க்கோரி பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் உச்சநீதி மன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளன.

தமிழகத்தின் பண்பாட்டு அடையாளம் ஜல்லிக்கட்டு. இந்த அடையாளத் தை அழிப்பதற்காக பீட்டா உள்ளிட்ட அமைப்பு கள் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகி ன்றன. கடந்த 2 ஆண்டுகாலமாக ஜல்லிக்கட்டு க்கு தடை விதிக்க வைத்தது பீட்டா. ஆனால் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தமிழகமே கொந்த ளித்து வீதிக்கு வந்து போராடியது.

பல லட்சம் மாணவர்கள், இளைஞர்கள் வரலாறு காணாத யுக புரட்சியை நடத்தினர். இதன் விளைவாக தமிழக அரசு முதலில் அவசர சட்டம்கொண்டு வந்தது. பின்னர் நிரந்த சட்டத்துக்காக தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது சட்டமாக நிறைவேற் றப்பட்டது. தற்போது தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்ற த்தில் பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. இம்மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகி யோர் அடங்கிய பெஞ்ச் திங்கள் கிழமையன்று விசாரிக்க உள்ளது. பீட் டாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வியும் விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் தமிழகத்தைச்சேர்ந்த அரிமா சுந்தரமும் ஆஜரா க உள்ளனர்.

தமிழ் ஒன் இந்தியா செய்தி  

English Summery:

Peta and Animal Welfare Board file petition in Supreme Court against Jallikattu Ordinance

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்ய‍வும்.

 

One Comment

  • Tamilnadu will not get justice from Justice Banumathy. This is the same Judge who banned Jallikattu , Rekla Race etc., unilaterally. This when neither party has raised anything about Jallikattu. She has also not heard from either party.Govet. of Tamilnadu should apply to Chief Justice to transfer the case from her court immediately.

Leave a Reply