Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தலை நிமிர்ந்தது தமிழினம்!

தலை நிமிர்ந்தது தமிழினம்!

தலை நிமிர்ந்தது தமிழினம்!

இந்த மாத (பிப்ரவரி, 2017) நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

கத்தியின்றி இரத்த‍மின்றி யுத்த‍மொன்று நம் தேச விடுதலைக்காக நடந் ததிற்கிணங்க… சப்தமின்றி

சங்கடமின்றி ஒருபுரட்சி சென்னையில் நடந்தேறியிருக்கிறது. அன்றைய புரட்சி சுதந்திரத்தை பெறுவதற்காக! இன்றை ய புரட்சி இழந்த உரிமையை மீட்பதற் காக அன்றைய புரட்சிக்கு தலைவர்கள் வித்திட்டு வீதிக்கு வந்தனர். இன்றைய புரட்சிக்கு இளைஞர்கள் திட்ட‍மிட்டு புதிய திசையை காட்டினர்.

கலாச்சாரத்தை காற்றில் பறக்க‍விடுகிறது இளையசமுதாயம் என்பதற்கு மாறாக கலாச்சாரத்தை காப்பாற்று வோம் என்ற வித்தியாசமான இளை ஞர்களின் குரல் வலைதளங்களை உலுக்கியது. 10, 100, 1000, 10000 என சென்னை மெரினாவில் இளைஞன் பட்டாளம் கூடியது. கோரி க்கைகள் நியாயம் உணரப்பட்ட‍தால், மாணவ ர் எழுச்சி சென்னையைத் தாண்டி தமிழகம் தாண்டி, பாரதம் கடந்து உலக த் தமிழர்களை ஒன்றிணைத்த‍து.

போக்குவரத்து தடைபடவில்லை. தேவை யற்ற கூச்ச‍ல்கள், இல்லை, இளைஞர்க ளும் இளைஞர்களும் இளைசிகளும் கை கோர்த்து பாதையமைத்து நடப்ப‍வர்களு க்கும் வாகனங்களுக்கும் வழியமைத்து போடப்படும் குப்பைகளை உடனுக்குடன் களைந்தெடுத்து கிடைத்த‍ உண வை பகிர்ந்துண்டு அமைதியாய் நடத்தி யப் போராட்ட‍ம் ஆச்ச‍ரியப்படு த்தியது.

அரசியல்வாதிகளோ பிரமுகர்களோ திரையுலக நட்சத்திரங்களோ யாரும் இங்கே வந்து குளிர்காய வேண்டாம் என்றுமுகத்திலடித்தாற்போல அறிவித் தார்களே  அதுநெத்தியடி. தலைவர்கள் இல்லை. யாரும் தலைவராக்கவும் முயற்சிக்க‍வில்லை. இது நம்தேசம் தானா? என்று கிள்ளிக் பார்க்க‍ வை த்த‍து.

போராட்ட‍ம் என்பது திட்டிமிட்டு நடப்ப‍து எழுச்சி என்று பீறிட்டு கிளம்புவது. இளைஞ ர்களின் எழுச்சிக்கு வீரவணக்க‍ம் சொல்லும் அதே வேளையி ல் . . . அடுத்து அரங்கேறிய காட்சிகள் அபத்தமானவை ஆபத்தானவை

இளைய சமுதாயத்தின் எழுச்சிக்கு அந்த மூன்று நாட்களுக்குள்ளேயே அரசும் அதிகாரமும் செவி மடுக்காது அலட்சியமாய் இருந்தன் விளைவு விபரீதமானது. விளையாட்டு வினை யானது.

ஆதரவு தர வந்த பொதுமக்க‍ளைக் கா ட்டிலும் தங்களுக்கு ஆதரவும் ஆதா யமும் தேடநினைத்த‍வர்கள், போராட் ட‍க்களத்தில் விஷக் கிருமிகளாய் கல ந்தனர். கலாச்சாரம் குறித்த கோஷம் அடங்கி, காழ்ப்புணர்ச்சி கோஷங்க ள் ஓங்கின• தனி நபர் விமர்சனம், தேசத்து க்கெதிரான பிரச்சாரம் பொங்கின• காவல் துறை கட்ட‍விழ்க்க‍ப்பட கடற்கரை வன்மத் தாலும் வெறி யாலும் கறைபடிந்த பூமியானது. சென்னையின் அமைதி தொலைந்தது. நல்ல‍தொரு தொடக்க‍ம், அரசியல் மதம் சாயம் பூசிக்கொண்டு நாசமாய் போனது. கட்டுப்பாட்டுடன் போராடிய இளைய சமுதாயத்தை கண்ணியமாய் நடந்த அரசும் காவல்துறையும் தவறியது வருத்தத்துக்குரி யது. ஆனாலும்

இன காளைகளால் தமிழின் பெருமை புரிந் ததும். இளங்காளைகளால் தமிழினம் தலை நிமிர்ந்த‌தும்… உலக அரங்கில் இனி உரத்து சிந்திக்க‍ப்படும்.

*

/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

திரு.உதயம் ராம் : 94440 11105

/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

நம் உரத்த‍ சிந்தனை மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர  இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…
இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.
வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்
பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///\///\//\///\//\|

கீழே உள்ள படத்தை கிளிக் செய்யுங்கள்

Leave a Reply